அதிக அளவில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரம்! வானியல் அறிஞர்கள் கண்டுபிடிப்பு!

வழக்கமான நட்சத்திரங்களில் காணப்படும் லித்தியம் அளவைக் காட்டிலும் 3,000 மடங்கு அதிகமாக இந்த நட்சத்திரத்தில் லித்தியம் உள்ளது

|

இதுவரை கண்டறிந்த நட்சத்திரங்களிலேயே மிக அதிக அளவு லித்தியம் கொண்ட பெரிய நட்சத்திரம் ஒன்றினை சீனாவைச் சேர்ந்த வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய அறிவியல் ஆய்வுக்குப் புது வெளிச்சம் பிறந்துள்ளது.

அதிக அளவில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

வழக்கமான நட்சத்திரங்களில் காணப்படும் லித்தியம் அளவைக் காட்டிலும் 3,000 மடங்கு அதிகமாக இந்த நட்சத்திரத்தில் லித்தியம் உள்ளது. ஒபிச்சஸ் (Ophiuchus) என்னும் விண்மின் இருக்கும் திசையில், விண்மீண்கள் வட்டத்தின் வடக்குப் பகுதியில் இந்த நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4,500 ஒளியாண்டுகள் தூரத்தில் இந்த நட்சத்திரம் உள்ளதாக சீனாவின் செய்தி நிறுவனம் கூறுகிறது.

சூரியனைக் காட்டிலும் 1.5 மடங்கு நிறையுள்ளது இந்த விண்மீன்.

சீனாவின் தேசிய வானியல் ஆய்வு மையத்தில் (NAOC) பணியாற்றும் விஞ்ஞானிகள், பெரிய அதி நவீன தொலை நோக்கி Large Sky Area Multi-Object Fibre Spectroscopic Telescope (LAMOST) மூலமாக இந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.

அதிக அளவில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

இந்தத் தொலை நோக்கி மூலமாக ஒரே சமயத்தில் 4,000 விண்மீன் கூட்டங்களைப் பார்க்க முடியும். இந்த அரிய வகை தொலை நோக்கி விண்மீன் கூட்டத் தொகுதிகளை உள்ளடக்கிய பால்வீதிகளைப் பற்றிய அறிவியல் ஆய்வுக்குப் பெரும் பங்காற்றும் வகையில் அமைந்துள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணமான பெரு வெடிப்பின் போது உருவான மூன்று முக்கியக் கூறுகளுள் ஒன்று லித்தியம் ஆகும். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவை மற்ற இரண்டு கூறுகள் ஆகும். இந்த மூன்று கூறுகளும் பெரு வெடிப்பு (Big Bang) நிகழ்ந்ததற்கான உறுதியான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

பிரபஞ்சம் மற்றும் விண்மீன்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுக்கு லித்தியத்தின் உருவாக்கம் பற்றிய ஆய்வு மிகுந்த துணை செய்யும். லித்தியத்துடன் கூடிய பெரும் விண்மீன்களைப் பார்ப்பது அரிது. கடந்த முப்பது ஆண்டுகளில் இத்தகைய தன்மையோடு விண்மீன்கள் ஒரு சில மற்றுமே கண்டறியப்பட்டுள்ளன.


“இந்த விண்மீனைக் கண்டுபிடித்ததன் மூலமாக, ஆய்வாளர்களால் கண்டுணரப்பட்ட லித்தியத்தின் அளவு கூடியுள்ளது” என்கிறார், சீனாவின் முன்னணி வானியல் அறிஞர் ஜாவோ காங்க் (Zhao Gang).

அதிக அளவில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

இந்த ஆய்வைப் பற்றிய தகவல்களை நேச்சர் அஸ்ட்ரானமி (Nature Astronomy) என்னும் வானியல் ஆய்விதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Astronomers Discover the Most Lithium-Rich Giant Star: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X