10 அணுகுண்டுகளுக்கு இணையான விண்கல் பூமிக்கு அருகில் வெடித்தது!
கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று,கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாவது மிகப்பெரிய விண்கல் பூமியைத் தாக்கும் நிகழ்வு நடைபெற்றது.
விண்கற்கள் விண்வெளியில் இருக்கும் வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு நிமிடம் அவை பூமியை நோக்கி வருவதாக தெரிந்தால் நாம் பயந்து நடுங்கிக்கொண்டிருப்போம். அவை எவ்வளவு பிரம்மாண்டமானவை, அவை எவ்வளவு அழிவை ஏற்படுத்தக்கூடும் என்பது நமக்கு நன்கு தெரியும் என்பதால் பயப்படுவது என்பது இயற்கை தான். ஆனால் ஒன்றை தவிர. கடந்த மாதம் பூமியை தாக்கிய பிரம்மாண்ட விண்கல்லை நீங்கள் தவறவிட்டீர்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று,கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாவது மிகப்பெரிய விண்கல் பூமியைத் தாக்கும் நிகழ்வு நடைபெற்றது. நேரடியான தாக்கத்தை பொறுத்தவரை , இந்த பாறை மிகவும் செங்குத்தான கோணத்தில் நொடிக்கு 32 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வந்தது.

25.6 கி.மீ. தொலைவில்
ஆனால் அதிர்ஷ்டவசமாக பல மீட்டர் நீளமுடைய அந்த வீண்கல், நம்மை தாக்குவதற்கு முன்னதாக புவி மேற்பரப்புக்கு மேலே 25.6 கி.மீ. தொலைவில் வெடித்துச் சிதறி நெருப்புப்பந்தாக திசைமாறியது.

173 கிலோ டன்
இருப்பினும் இந்த வெடிப்பு 173 கிலோ டன் அளவிலான தாக்க ஆற்றல் கொண்டது. இதை ஒப்பிடுவதற்கு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகள் முறையே 15 மற்றும் 20 கிலோடன் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.

செல்யபின்ஸ்க்
"செல்யபின்ஸ்க்-ல் வெளியான ஆற்றலில் இது 40% தான்" என கடந்த காலத்தில் இரஷ்யாவை தாக்கிய விண்கல்லை பற்றி குறிப்பிடுகிறார் நாசா திட்ட மேலாளரான கெல்லி பாஸ்ட். "ஆனால் அந்த விண்கல் வெடிப்பு பெர்ரிங் கடல் மீது இருந்ததால் இது போன்ற விளைவுகளும் இல்லை, செய்தி காண்பிக்கவும் இல்லை " என்கிறார்.

அமெரிக்க விமானப்படை
உண்மையில் அமெரிக்க விமானப்படை தான் அதன் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இந்த நெருப்புபந்தை முதன்முதலில் கண்டுபிடித்தது. இந்த தகவல் பின்னர் நாசாவிற்கு அனுப்பப்பட்டு, அதன் சில படங்களை கைப்பற்ற முடிந்தது. அவற்றை கீழே உள்ள புகைப்படத்தில் காண முடியும்.

விண்கற்களை கண்காணிப்பது கடினமானது
இதில் உள்ள சிக்கல் என்னவெனில், அதை விட சிறியதாக இருக்கும் விண்கற்களை கண்காணிப்பது கடினமானது. துரதிருஷ்டவசமாக அவை குறைவான சேதம் விளைவித்தாலும், அவை மற்ற விண்கல் மோதலை விட எண்ணிக்கையில் அதிகமாகவே இருக்கின்றன.

"கேம் ஆப் மார்பிள்"
இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமும் பூமியை நோக்கி வரும் விண்கற்களை கையாளுவதற்காக திட்டமிட்டு வேலை செய்து வருகின்றது. அவற்றை விண்வெளியில் "கேம் ஆப் மார்பிள்" விளையாட்டு போல சுட்டு வீழ்த்த திட்டமிடுகின்றனர்.

வோடபோனின் குறிப்பிட்ட திட்டங்களில் 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை அறிவிப்பு.!
பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்சமயம் வோடபோன் நிறுவனமும் தனது புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக வோடபோனின் தேர்வு செய்யப்பட்ட திட்டங்களில் மட்டுமே 100சதவிகிதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அதன்பின்பு இப்போது அறிவிக்கப்பட்ட சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது.

வோடபோன்
தற்சமயம் வோடபோன் ரூ.199, ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 திட்டங்களில் 100சதவிகிதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. பின்பு இந்த கேஷ்பேக் தொகையை வோடபோன் ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்களின் வடிவில் வழங்குகிறது.

கேஷ்பேக்
அதன்படி ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மதிப்புள்ள 4 வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மதிப்புள்ள 10வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இதன்பின் மேற்கொள்ளும் ரீசார்ஜ்களில் 25 சதவிகிதம் தள்ளுபடி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டிவேட்:
மேலே குறிப்பிட்ட திட்டங்களை ஆக்டிவேட் செய்ய மைவோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும், மேலும் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகைகள் கண்டிப்பாக அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

வேலிடிட்டி:
ரூ.399 திட்டம் - தினசரி 1ஜிபி டேட்டா - 84நாட்கள் வேலிடிட்டி
ரூ.458 திட்டம் - தினசரி 1.5ஜிபி டேட்டா - 84நாட்கள் வேலிடிட்டி
ரூ.509 திட்டம் - தினசரி 1.5ஜிபி டேட்டா - 90நாட்கள் வேலிடிட்டி
ரூ.199 திட்டம் - தினசரி 1.5ஜிபி டேட்டா - 28நாட்கள் வேலிடிட்டி


Click it and Unblock the Notifications