பூமியை நோக்கி வரும் ராட்சத ஆபத்து! தேதியை வெளியிட்டு NASA எச்சரிக்கை!

|

"பூமி அழியும்" என்று கூறும் பல வகையான கட்டுக்கதைகளும், சாத்தியமான கோட்பாடுகளும் - இங்கே சரிக்கு சமமான எண்ணிக்கையில் உள்ளன என்பதே நிதர்சனம்; அதில் எந்த குழப்பமும் இல்லை!

உண்மையான குழப்பம் எதில் உள்ளதென்றால்.. எது கட்டுக்கதை? எது கோட்பாடு? என்று கண்டறிவதில் தான்!

இந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்?

இந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்?

எப்போதெல்லாம் "பூமி அழியும்" என்கிற தலைப்பு மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் அறிவியல் மீது பாரத்தை போட்டு விட வேண்டும்; அதுதான் புத்திசாலித்தனமும் கூட!

அப்படியாக, நாம் இப்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மீது பாரத்தை போட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்!

சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!

ஏன்? என்ன ஆகிற்று?

ஏன்? என்ன ஆகிற்று?

நாசாவின் மீது பாரத்தை போடும் அளவிற்கு அப்படி என்ன நடக்கிறது என்பதை பற்றி அறிந்துகொள்ளும் முன், நாசாவின் வைஸ் டெலஸ்க்கோப் (WISE Telescope) பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் பூமியை நோக்கி வரும் ஒரு ராட்சத ஆபத்தை கண்டறிந்து, நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதே நாசாவின் வைஸ் டெலஸ்க்கோப் தான்!

WISE டெலஸ்க்கோப்பின் வேலையும், சமீபத்திய கண்டுபிடிப்பும்!

WISE டெலஸ்க்கோப்பின் வேலையும், சமீபத்திய கண்டுபிடிப்பும்!

WISE என்று சுருக்கமாக அறியப்படும் நியர்-எர்த் ஆப்ஜெக்ட் வைட்-ஃபீல்ட் இன்ஃப்ராரெட் சர்வே எக்ஸ்ப்ளோரர் (Near-Earth Object Wide-field Infrared Survey Explorer - NEOWISE) டெலஸ்க்கோப்பின் வேலையே - முடிந்தவரை சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள் / குறுங்கோள்களை கண்டறிவதே ஆகும்!

அப்படியாக, இந்த டெலஸ்க்கோப் சமீபத்தில் ஒரு ஆபத்தான "ராட்சசனை" கண்டறிந்துள்ளது. அது 140-அடி அகலம் கொண்ட ஒரு சிறுகோள் ஆகும்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

அது பூமி மீது மோதினால்?

அது பூமி மீது மோதினால்?

140-அடி அகலம் கொண்ட ஒரு சிறுகோள் பூமி மீது மோதினால், அது ஒரு முழு நகரத்தையும் எளிதில் அழிக்கக்கூடும்.

மேலும், அதனால் ஏற்படும் அதிர்வலைகள் மற்றும் நில அதிர்வுகளானது அருகிலுள்ள பகுதிகளுக்கும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கும்.

இப்படியான ஆபத்துகளை சுமந்து வரும் இந்த சிறுகோள், பூமி மீது மோதுமா? ஒருவேளை மோதும் என்றால், அது சரியாக எந்த தேதியில் நடக்கும்? இந்த சிறுகோள் பற்றிய எச்சரிக்கைகள் ஏன் முன்னரே வெளியாகவில்லை?

ஏனெனில்.. இது மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்பட்டது!

ஏனெனில்.. இது மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்பட்டது!

நாசாவை சேர்ந்த ஜெட் ப்ராபல்ஷன் லேபரட்டரி (Jet Propulsion Laboratory - JPL), ஸ்மால்-பாடி டேட்டாபேஸ் மற்றும் சென்டர் ஃபார் நியர் எர்த் ஆப்ஜெக்ட் ஸ்டடீஸ் (Small-Body database and Center For Near Earth Object Studies - CNEOS) ஆகியவற்றின் தகவல்களின்படி, இந்த விண்வெளி பாறை மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்பட்டது!

2022 QF2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் ஆனது கடந்த ஆகஸ்ட் 19, 2022 வரை காணப்பட்டதே இல்லையாம்!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

சரியாக செப்டம்பர் 11 ஆம் தேதியன்று!

சரியாக செப்டம்பர் 11 ஆம் தேதியன்று!

140-அடி நீளம் கொண்ட 2022 QF2 என்கிற சிறுகோள் ஆனது சரியாக செப்டம்பர் 11 ஆம் தேதியன்று 7.3 மில்லியன் கிலோமீட்டர்கள் வரை நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த சிறுகோள் ஆனது பூமி மீது 99.9% மோதாது; அதே சமயம் அதை உறுதியாகவும் கூற முடியாது!

ஏனென்றால்?

ஏனென்றால்?

இந்த சிறுகோள் மணிக்கு 30,384 கிமீ வேகத்தில் பயணிக்கிறது, இது மிகவும் ஆபத்தான வேகமாகும்.

இந்த விண்கல்லின் "பயண பாதையில்" கடைசி நிமிட மாற்றம் ஏற்பட்டாலும் கூட, அது அடுத்த இரண்டு நாட்களில் பூமி வந்து அடையும்!

இதனாலேயே, வைஸ் தொலைநோக்கி குறிப்பிட்ட விண்வெளி பாறையை கூர்ந்து கண்காணித்து வருகிறது; ஒருவேளை ஏதேனும் தவறு நடந்தால், அது விரைவில் தெரிந்துவிடும்.

சூரியனின் சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

பல ஆண்டுகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டு இருந்த WISE டெலஸ்க்கோப்!

பல ஆண்டுகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டு இருந்த WISE டெலஸ்க்கோப்!

முன்னதாக WISE என்றும் அழைக்கப்பட்ட நாசாவின் இந்த விண்வெளி தொலைநோக்கி ஆனது கடந்த டிசம்பர் 2009 ஆம் ஆண்டிலேயே ஏவப்பட்டு இருந்தாலும் கூட, இந்த திட்டத்தில் இருந்த சில சிக்கல்கள் காரணமாக, இந்த டெலஸ்க்கோப் உறக்கநிலையில் (Hibernation mode) வைக்கப்பட்டது.

பின் 2013-இல், இது NEOWISE என மறுபெயரிடப்பட்டு, பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களை கண்டறியும் பணியை தொடங்கியது.

Photo Courtesy: NASA

Best Mobiles in India

English summary
Asteroid Warning 2022 NASA Says 140 feet Wide Space Rock Come Close To Earth On September 11

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X