விண்கல் மோதல் என்பது சாத்தியமா? சாத்தியமெனில் அது எவ்வளவு பெரிதாக இருக்கும்?
ஆழ்ந்த விண்வெளி (டீப் ஸ்பேஸ்) பகுதியானது எப்போதுமே மனிதர்களுக்கான ஒரு கொடிய இடமாகும்.
ஆம், பூமி கிரகத்துடனான விண்கல் மோதல் என்பது சாத்தியம் தான். உண்மை சற்று கசப்பாகத்தான் இருக்கும், அதற்காக அதை மறைப்பதிலும், மறுப்பதிலும் எந்த அர்த்தமும் கிடையாது.

இன்னும் சொல்ல போனால், ஒரு பலமான ஆஸ்ட்ராய்டு (ASTEROID) தாக்குதல் ஆனது பூமியையும் அதன் ஜீவராசிகளையும் (மனிதர்கள் உட்பட) துடைத்து எரியும் அளவிற்கு போதுமானதாக இருக்கும். அதனால் தான், பூமியில் இருந்து மிகவும் தூரமான மற்றும் ஆழ்ந்த விண்வெளி பகுதியில் இருந்தாலும் கூட, விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் மீது நாம் எப்போதுமே கவலை கொள்கிறோம், கண் வைத்துள்ளோம்.

அங்கிருந்து இங்கு வந்தாலும் சிக்கல் தான்!
ஆழ்ந்த விண்வெளி (டீப் ஸ்பேஸ்) பகுதியானது எப்போதுமே மனிதர்களுக்கான ஒரு கொடிய இடமாகும். அச்சுறுத்தல் மிகுந்த உறைநிலை வெப்பம், கற்பனை செய்ய முடியாத அழுத்தங்கள் மற்றும் கதிர்வீச்சுடன் நிரம்பியுள்ள, உயிர் வாழ தகுதியில்லாத பகுதியாகும். நாம் அங்கு சென்றால் மட்டும் இல்லை, அந்த இடத்தில இருந்து ஏதாவது வந்தாலும் கூட நமக்கு சிக்கல் தான். அது என்னது? வேறு என்ன, சிறுகோள் அல்லது உடுகோள் தான்!

சிறுகோள் அல்லது விண்கல் என்றால் என்ன?
சூரியனை சுற்றி உள்ள ஒரு விண்வெளி பொருளை தான் சிறுகோள் என்பார்கள். பொதுவாக இவைகள் பாறை அல்லது உலோகத்தினால் உருவான ஒன்றாக இருக்கும். ஒரு சிறுகோளின் விட்டம் ஆனது ஒரு மீட்டரை (3 அடி) விட பெரியதாக இருந்தால் அவைகள் விண்கற்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. அதை விட சிறியதாக இருந்தால் அவைகள் மெட்டாட்ராய்ட்ஸ் என்று வரையறுக்கப்படுகின்றன. இருப்பதிலேயே மிகபெரிய உடுக்கோள் ஆனது சீரிஸ் ஆகும், இது சுமார் 600 மைல் (965 கி.மீ) நீளம் கொண்ட விண்வெளி பொருளாகும்.

ஒரு துண்டு நூறு துண்டுகளாகும்!
சௌதம்ப்டன் பல்கலைக்கழகத்தின் பூமி அறிவியல் துறையில் இணை பேராசிரியர் ஆன டாக்டர் தாமஸ் கெர்னானின் கூற்றின் படி: "விண்மீன் மண்டலத்தில், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள எங்கோ ஒரு பொருத்தப்பட்ட இடத்தில் - சில நேரங்களில் - விண்வெளி பாறைகள் மோதிக் கொள்கின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திர மீன்கள் உடைக்கப்படுவதால் நிறைய துண்டுகள் உருவாக்கப்படும், இது காலப்போக்கில் பூமியை நோக்கி நகரும்".

அவைகள் பூமியை நோக்கிய பாதையில் எப்படி கட்டமைக்கப்படுகிறது?
அவ்வாறக மிதக்கும் சிறிய உடைந்த பாறைகள் ஆனது சூரிய ஒளி மூலம் தாக்கபடும். மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நடக்கும் இந்த செயல்முறையின் விளைவாக அந்த துண்டுகள் சிறு அளவிலான செறிவூட்டலை பெற்று, பின்னர் அவைகள் பூமியை நோக்கி ஒரு இடைப்பட்ட பாதையில் நுழையலாம்". என்றும் டாக்டர் தாமஸ் கெர்னான் கூறி உள்ளார்.

இதுவரை நடந்த மிகப்பெரிய விண்கல் மோதல் எது?
பூமி கிரகத்தின் இயற்கையான செயற்கை கோள் என்று அழைக்கப்படும் சந்திரன் கூட, ஒரு பெரிய விண்கல் மோதலின் கீழ் தோன்றியதாக நம்பப்படுகிறது. அதாவது செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட ஒரு கிரகம் பூமி மீது மோதல் நிகழ்த்த, அதில் உடைந்த ஒரு பாகம் தான் சந்திரனாக மாறியது என்கிறது ஒரு கோட்பாடு. இந்த இடத்தில நிலவு இயற்கையாக தோன்றியது என்பதை நிரூபிக்கும் எந்த கோட்பாடும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரந்து விரிந்த ஒன்றாக இருந்திருக்கலாம்!
கடந்த 2014 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் பெரிய தாக்கம் ஏற்பட்டு இருந்ததை கண்டு அறிந்து அதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர். இந்த தாக்கமானது சுமார் 3.26 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் தாக்கத்தை ஏற்படுத்திய விண்கல் ஆனது ஒரு நம்பமுடியாத 23 - 36 மைல்கள் (அதாவது 37 - 58 கி.மீ) என்கிற அளவில் பரந்து விரிந்த ஒன்றாக இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்வின் கீழ் ஏற்பட்ட பள்ளம் ஆனது எங்கு இருக்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை தவிர்த்து, நவீன காலங்களில் நன்கு அறியப்பட்ட பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகா - துன்குஸ்கா நிகழ்வை கூறலாம், இது கடந்த 1908 ஆம் ஆண்டில் சைபீரியாவில் நிகழ்ந்தது.

பூமி எதிர்கொண்ட மிகப்பெரிய விண்கல் தாக்குதல்!
துன்குஸ்கா நிகழ்வானது - இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் - பூமியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு ஆகும். இந்த தாக்கத்தை ஏற்படுத்திய வால்மீன் அல்லது அடர்த்தியான சிறுகோள் ஆனது 200 முதல் 620 அடி (60 - 190 மைல்கள்) நீளம் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு, கடந்த 2013 ஆம் ஆண்டில் நடந்த செலியாபின்ஸ்க் விண்கற்கள் நிகழ்வை கூறலாம். பூமி எதிர்கொண்ட மிகப்பெரிய விண்கல் தாக்குதல் பட்டியலில் இதற்கும் ஒரு இடம் உண்டு. ஏனெனில் அந்த அளவிலான பொருள் சேதம், மனித காயங்களை இது ஏற்படுத்தியது. செலியாபின்ஸ்க் விண்கற்கள் சுமார் 20 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 500 கிலோடன் கொண்ட ஒரு ஏவுகணை வெடிப்புக்கு சமமான ஒரு தாக்கம் ஆகும்.


Click it and Unblock the Notifications