இன்று பூமியைக் கடக்கும் “அபாயகரமான” சிறுகோள்.. லிபர்ட்டி சிலையை விட இரண்டு மடங்கு பெரியதா?

|

2021 KT1 என்ற "அபாயகரமான" சிறுகோள் இன்று பூமிக்கு மிக அருகில் உள்ள சுற்று வட்டப்பாதையில் பூமியைக் கடக்கிறது என்று நாசா எச்சரித்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி, EDT நேரத்தின் படி காலை 10:24 மணியளவில் இந்த சிறுகோள் பூமியை நெருங்கிய அணுகுமுறையை உருவாக்கும் என்று நாசா கூறியுள்ளது. IST நேரத்தின் படி, இது இரவு 7:54 மணி அளவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. "அபாயகரமான" சிறுகோள் என்று நாசா நம்மை எச்சரித்துள்ளதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந்த சிறுகோள் அத்தகைய அளவிற்கு பெரியது என்பது ஒரு காரணம்.

"அபாயகரமான" 2021 KT1 சிறுகோள்

இந்த பிரம்மாண்டமான பாறை சுமார் 4.5 மில்லியன் மைல்கள் தொலைவில் நமது பூமி கிரகத்தைக் கடந்து பறக்கும் என்று நாசா எச்சரித்துள்ளது. இன்னும் வேறு சில சிறுகோள்களும், இந்த வார இறுதியில் நமது பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும், அவை எல்லாம் 2021 KT1 சிறுகோளை விடக் கணிசமாக சிறியதாக இருப்பதனால் மக்கள் கவலைகொள்ள வேண்டாம் என்று நாசா தெரிவித்துள்ளது. அப்படியானால், 2021 KT1 சிறுகோளை மட்டும் நாசா ஏன் "அபாயகரமான" சிறுகோள் என்று குறிப்பிடுகிறது.

பூமியைக் இன்று கடக்கும் சிறுகோள்

பூமியைக் இன்று கடக்கும் சிறுகோள்

நாசா "அபாயகரமான" சிறுகோள் என்று குறிப்பிட்டுள்ள 2021 KT1 அளவு மிகவும் பெரியது. இதன் சுற்றளவு மட்டும் 186 மீட்டர் இருக்கும் என்று நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகம் (JPL) அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இது 93 மீட்டர் உயரமுள்ள லிபர்ட்டி சிலையை விட இரண்டு மடங்கு பெரியது என்று நாசா கூறியுள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தில் 4.5 மில்லியன் மைல் தொலைவில் இந்த சிறுகோள் பூமியைக் கடக்கிறது. இந்த நிலையில் இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்க வாய்ப்பில்லை என்று நாசா கூறியுள்ளது.

எல்லாமே டால்பி ஆதரவு: வீடு தியேட்டர் மாதிரி இருக்கும்- மலிவு விலையில் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவிகள்!எல்லாமே டால்பி ஆதரவு: வீடு தியேட்டர் மாதிரி இருக்கும்- மலிவு விலையில் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவிகள்!

மக்கள் இதை பற்றி கவலைப்பட வேண்டுமா? நாசா என்ன சொல்கிறது?

மக்கள் இதை பற்றி கவலைப்பட வேண்டுமா? நாசா என்ன சொல்கிறது?

எவ்வாறாயினும், பூமியிலிருந்து 4.6 மில்லியன் மைல்களுக்குள், வேறு சிறுகோள் வரும்போதும், அதன் அளவு 150 மீட்டருக்கும் அதிகமானதாக இருக்கும் போது, அந்த சிறுகோளை நாசா அபாயகரமானதாகக் கருதுகிறது. இந்த சிறுகோள் பூமியைப் பாதிக்குமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த எந்த குறிப்புகளையும் நாசா வெளியிடவில்லை. இருப்பினும் கூட, பூமியைப் பாதிக்கும் சிறுகோள் போன்ற பூமிக்கு அருகிலுள்ள ஒரு பொருளை (NEO) பற்றி மக்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று நாசா கூறுகிறது.

பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள பொருள்

பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள பொருள்

எவ்வாறாயினும், நீண்ட காலமாக NEO- பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள பொருள்களால் பூமி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவானதாக இல்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனால் நாசா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற விண்வெளி ஏஜென்சிகள் சிறுகோள் மற்றும் வால்மீன் தருணங்களை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. 2021 KT1 ஐத் தவிர, சில சிறிய சிறுகோள்கள் வரவிருக்கும் நாட்களில் பூமிக்கு அருகில் செல்கின்றன. அந்த சிறுகோள்கள் 21 மீட்டர் வரை அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asteroid 2021 KT1 Considered Potentially Hazardous Is Passing Earth By Today Says NASA : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X