பீதியடைந்த பாக்; இஸ்ரோவின் 100-வது செயற்கைகளின் உண்மையான பின்னணி என்ன?

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் 100-வது செயற்கைகளின் உண்மையான பின்னணி தான் என்ன.? பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றசாட்டு தான் என்ன.?

|

ஒருபக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் 100-வது செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, உலக விண்வெளி வரலாற்றில் முக்கியமானதொரு மைல்கல்லை எட்டிப்பிடிக்கவும், மறுபக்கம் பாகிஸ்தான் ஆனது இந்தியாவின் 100-வது செயற்கைக்கோள் ஏவுதல் மீது சில ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது.

பீதியடைந்த பாக்; இஸ்ரோவின் 100-வது செயற்கைகளின் உண்மையான பின்னணி என்ன?

இந்தியா என்ன செய்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான் பாகிஸ்தானின் வேலை என்று கண்மூடித்தனமாக இந்த விடயத்தை கையாள முடியவில்லை. ஏனெனில் இஸ்ரோ பலமுறை, பலவகையான செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளது. அதற்கெல்லாம் எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் பாகிஸ்தான் முன்வைக்கவில்லை.

பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றசாட்டு தான் என்ன.?

பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றசாட்டு தான் என்ன.?

இந்த குறிப்பிட்ட செயற்கைகோள் மீது பாகிஸ்தான் அதன் ஆட்சேபனைகளை தெரிவிக்கிறதென்றால் இதில் ஏதோவொரு விடயம் மறைந்திருக்கிறதென்று அர்த்தம். அது என்ன.? வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் 100-வது செயற்கைகளின் உண்மையான பின்னணி தான் என்ன.? பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றசாட்டு தான் என்ன.?

எதிர்பார்ப்புகளை துளியும் சிதைக்காத இஸ்ரோ.!

எதிர்பார்ப்புகளை துளியும் சிதைக்காத இஸ்ரோ.!

2018-ஆம் ஆண்டில் இந்தியா செலுத்தும் முதல் செயற்கைக்கோள் என்பதால் காரோட்டோசாட்-2 மீதும் அதன் துல்லியமான வெற்றி மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளை துளியும் சிதைக்காமல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் நிறுவனமான இஸ்ரோ கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டின் உதவியுடன் காரோட்டோசாட்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சரியாக காலை 09:29 மணிக்கு.!

சரியாக காலை 09:29 மணிக்கு.!

இந்த "பிஎஸ்எல்வி-சி40 / காரோசாட்-2 சீரிஸ் சேட்டிலைட் மிஷன்" ஆனது கடந்த ஜனவரி 12, 2018 அன்று, ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து சரியாக காலை 09:29 மணிக்கு கிளம்பி வெற்றிகரமாக விண்வெளிக்கு நுழைந்தது. இந்த ஏவலை தொடர்ந்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆன முகமது ஃபைசல் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

இரட்டை இயல்பு கொண்டுள்ளது.!

இரட்டை இயல்பு கொண்டுள்ளது.!

அப்போது அவர் அனைத்து விண்வெளி தொழில்நுட்பங்களுமே "இயல்பான இரட்டை பயன்பாடு" கொண்டுள்ளது என்ற வார்த்தையை அழுத்தமாக கூறினார். அதாவது, இஸ்ரோவின் 100-வைத்து செயற்கைகோள் ஆனது இரட்டை இயல்பு கொண்டுள்ளதென்ற ஆட்சேபனையை முன்வைத்தார்.

பிராந்திய மூலோபாய திடநிலையில் ஒரு எதிர்மறை தாக்கம்.!

பிராந்திய மூலோபாய திடநிலையில் ஒரு எதிர்மறை தாக்கம்.!

"பிஎஸ்எல்வி-சி40 / காரோசாட்-2 சீரிஸ் சேட்டிலைட்" என்கிற மிஷன் ஆனது இராணுவ மற்றும் பொதுமக்கள் என்கிற இரட்டை பயன் நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், இது "பிராந்திய மூலோபாய திடநிலையில் ஒரு எதிர்மறை தாக்கத்தை" ஏற்படுத்தக்கூடும் என்று முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

காரோசாட்-2 செயற்கைகோளின் பணிகள் என்னென்ன.?

காரோசாட்-2 செயற்கைகோளின் பணிகள் என்னென்ன.?

காரோசாட்-2 செயற்கைகோள் ஆனது நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாடுகள், கடலோர நில பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை, பயன்பாட்டு மேலாண்மை சாலை வலைப்பின்னல் கண்காணிப்பு, நீர் விநியோகம், நில அமைப்பு வரைபடங்களைப் உருவாக்க , புவியியல் மற்றும் மனிதர்களால் உருவாக்கம் பெற்ற அம்சங்கள் மற்றும் பல்வேறு நிலத் தகவல் அமைப்பு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு ஆகிய விடயங்களுக்கு துணை புரியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாகவே இரட்டை பயன்பாட்டுத்தன்மை.!

இயற்கையாகவே இரட்டை பயன்பாட்டுத்தன்மை.!

"வெளியான ஊடக தவவல்களின்படி, பூமி மீதான கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கைக்கோள்களை 2018-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதிக்குள் இந்தியா தொடங்கவுள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட எல்லா விண்வெளி தொழில்நுட்பங்களும் இயற்கையாகவே இரட்டை பயன்பாட்டுத்தன்மை கொண்டவைகள். அது பொதுமக்கள் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்" என்று ஃபைசல் கூறியுள்ளார்.

திடீரென்று இராணுவ திறன்களை வளர்த்தெடுக்கும்.!

திடீரென்று இராணுவ திறன்களை வளர்த்தெடுக்கும்.!

மேலும் "இம்மாதிரியான இரட்டை தன்மை கொண்ட செயற்கைக்கோள்கள் ஆனது திடீரென்று இராணுவ திறன்களை வளர்த்தெடுக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடும்" என்றும் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

அது இராணுவ உறுதிப்பாடுகளை சீர்குலைக்கும்.!

அது இராணுவ உறுதிப்பாடுகளை சீர்குலைக்கும்.!

"அனைத்து மாநிலங்களுக்கும் விண்வெளி தொழில்நுட்பங்களின் அமைதியான பயன்பாடுகளைத் தொடர ஒரு நியாயமான உரிமை உண்டு. எனினும், அத்தகைய தொழில்நுட்பங்களுக்கு இரட்டை பயன்பாட்டுத் தன்மை கொடுக்கப்பட்டால், அது இராணுவ உறுதிப்பாடுகளை சீர்குலைக்கும்" என்றும் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
As ISRO creates history, Pakistan raises objections over the launch of 100th satellite. Read more about this about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X