எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்னவாகும்?

|

தற்போது செயற்கை நுண்ணறிவு திறன் (ஏஐ) என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் என்பதால், பல்வேறு பெரிய நிறுவனங்களும் கச்சிதமான ஏஐ அமைப்பை வடிவமைக்கும் வகையில், இந்தப் புதிய துறைக்குள் தடம்பதிக்க ஆரம்பித்துள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள ஏஐ-யில் கூட, எதிர்கால மனித சமுதாயத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்னவாகும்?

இந்தக் காரியத்தைக் குறித்து நன்றாக புரிந்து கொண்டுள்ள பலரும், செயற்கை நுண்ணறிவு மூலம் நமது எதிர்கால தலைமுறையினர் எந்த மாதிரியான பிரச்சனைகளைச் சந்திக்க போகிர்கள் என்பதை குறித்து எச்சரித்துள்ளனர். இதன்மூலம், மனிதர்களைப் பின்னுக்கு தள்ளி ஒரு வெல்ல முடியாத சர்வாதிகாரியாக செயற்கை நுண்ணறிவு மாறும் என்று தெரிய வருகிறது.

தற்போது பிரபலமான நரம்பியல் அறிஞரான சாக்காரி மெயினின் கூறுகையில், இன்று மனிதர்களுக்கு ஏற்படுவது போல எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு திறனுக்கு கூட நரம்பியல் மற்றும் மனநிலைத் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் மனிதர்களுக்கு ஒத்த அறிவு நிலைக்கு செயற்கை நுண்ணறிவு திறன் எட்டும் போது மட்டுமே இது போன்ற நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மனித மூளை எப்படி வேலைச் செய்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதில் பெரிய அளவிலான மாறுபட்ட காரியங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் மனித மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றம் கூட மனஅழுத்தம், மறதிகள், மாயத்தோற்றம் போன்ற மனித மூளைக்கு ஆரோக்கியம் இல்லாத தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.

YESABLE: பார்வையற்றவர்கள் தேர்வெழுத புதிய ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்.!

செயற்கை நுண்ணறிவைச் சொந்தமாக மாற்றியமைத்து கொள்ளும் குறியீடுகளின் பண்புகள் கூட, நரம்பியல் கூட்டிணைப்புகளை அடிப்படையாக கொண்டவை என்பதால், உளவியல் சூழ்நிலைகளுக்கு ஒத்த பிரச்சனைகளை அவை சந்திக்கக் கூடும் என்று நரம்பியல் அறிஞர் மெயினின் நம்புகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், மேற்கூறிய காரியங்களில் பெரும்பாலானவற்றை கணக்கீட்டு உளவியல் என்று அழைக்கப்படும் ஆய்வுத் துறையில் இருந்து பெற்றவை ஆகும். ஏனெனில், மனித மூளையைப் பயன்பாட்டிற்கு ஒத்த சூழ்நிலைகளில் செயற்கை நுண்ணறிவு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், உளவியல் அறிஞர்களால் அவை ஆராயப்பட்டு வருகின்றன, என்றார்.

இது குறித்து மெயினின் விளக்கும் போது, மனித மூளைக்குள் இருக்கும் சிரோடோனின் என்ற ஒரு வேதிப்பொருளில் சற்று பிழை ஏற்பட்டாலும், மனஅழுத்தம் என்ற மாயத்தோற்றத்தின் அடையாளத்தைக் காட்ட ஆரம்பித்து விடுகிறது. மனித மூளையின் செயல்பாட்டை மையமாக கொண்ட நியூரோகெமிஸ்ட்ரியை (நரம்பியவேதியியல்) பயன்படுத்தி செயல்படும் செயற்கை நுண்ணறிவுக்கும், இதே போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இது அறிவியல் ரீதியான கற்பனையைப் போல தெரிந்தாலும், இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. ஆம், மனித மூளையின் செயல்பாட்டிற்கு ஒத்த நிலையை செயற்கை நுண்ணறிவு அடையும் போது, இது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் டிஸ்லா துணை நிறுவனரான இலன் மாஸ்க் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு காலக்கட்டத்தில் மனிதர்களால் "தப்பிக்க முடியாத ஒரு அழிவில்லா ஒரு சர்வாதிகாரியிடம் சிக்கும் நிலையை" உருவாக்கி இருப்போம் என்றார். சமீபத்தில் வெளியான "டூ யூ ட்ரெஸ்ட் திஸ் கம்ப்யூட்டர்?" என்ற ஆவணப்படத்தை கண்ட பிறகு, மாஸ்க் இப்படி கூறுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

மூன்றாம் உலகப் போருக்கு முக்கிய காரணமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மாஸ்க் கூறி இருந்தார். அதன்பிறகு தொழில்நுட்பத்தை சீரமைக்குமாறு அரசாங்கத்தை எச்சரித்த அவர், அதை தான் "சமுதாய வளர்ச்சியின் மிகப் பெரிய பின் விளைவாக நாம் சந்திக்கப் போகிறோம்" என்றார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
According to neuroscientist Zachary Mainen has said that it's totally possible that future AI programs may end up suffering similar neurological and phycological issues that humans do. His ideas come from a field of study called computational psychiatry, where the psychiatrists study the AI programs.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more