ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லும்போது சிரிச்சோம், இப்போது மிரண்டு போயுள்ளோம்.!

அப்போது ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு முட்டாள், மார்க் புத்திசாலியா.? இதை ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லும்போது புறக்கணித்தோம், இப்போது அஞ்சுகிறோம்.!

By Gizbot Bureau
|

பேஸ்புக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வக (FAIR) ஆராய்ச்சியாளர்கள், ஸ்கிரிப்ட்டில் இருந்து வெளியேறிய சாட்பாக்ஸ்கள், எந்த விதமான மனித உள்ளீடும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழியில் தொடர்பு கொண்டதை கண்டறிந்து அதிர்ந்து போயுள்ளனர்.

பேஸ்புக் நிறுவனத்தின் ஏஐ (AI) அதாவது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) ஆனது, மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத, அதன் சொந்த தனித்துவமான மொழியை உருவாக்கியுள்ளது என்பதை ஆய்வகத்தின் டெவலப்பர்கள் கண்டறிந்த உடனேயே பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூடப்பட்டுள்ளது.

இது எவ்வளவுக்கு எவ்வளவு ஆச்சரியமளிக்கும் ஒரு விடயமாக இருக்கிறதோ, அவ்வளவு ஆபத்தான விடயமும் கூட என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது. இதை ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லும்போது புறக்கணித்தோம், இப்போது செயற்கை நுண்ணறிவு நம்மிலொரு சிறிய நடுக்கத்தையும், கலக்கத்தையும் உண்டாக்கியுள்ளதை உணர்கிறோம்.

குறிப்பிட்ட 3 விடயங்களானது

குறிப்பிட்ட 3 விடயங்களானது

அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) குறிப்பிட்ட 3 விடயங்களானது, மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று நம்புகிறார்.

 முதல் விடயம்

முதல் விடயம்

பிளாக் ஹோல் (Black Hole) எனப்படும் கருங்குழி மற்றும் ஈர்ப்பு ஒற்றைப்படைத்தன்மைகள் (gravitational singularities) ஆகியவைகளில் சிறப்பான ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங், மனித இன அழிவை ஏற்படுத்தும் என்று கூறிய 3 விடயங்களில் முதல் விடயம் என்னவென்று தெரியுமா.?? - செயற்கை நுண்ணறிவு.!

மனிதர்களுக்கு சமமான முறையில்

மனிதர்களுக்கு சமமான முறையில்

ஆம். மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றதென்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்பும் முதல் விடயம் - ஆர்டிஃபிஷியல் இன்டெல்லிஜன்ஸ் (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவே தான். சுருக்கமாக கூறவேண்டுமெனில், இயந்திரங்கள் அல்லது மென்பொருள்களுக்கு புலனாய்வு அறிவை செலுத்துவதே செயற்கை நுண்ணறிவு எனப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு சமமான முறையில் செயல்படுகிறது. சில சமயம் மனிதர்களை மிஞ்சி விடுகிறது.

இனத்தின் அழிவு சாத்தியமே

இனத்தின் அழிவு சாத்தியமே

அப்படியானதொரு நிலைப்பாடு ஏற்படும் பட்சத்தில், மனிதர்களால் உருவாக்கம் பெறும் இயந்திரங்கள் மனிதர்களை விட அதிக அறிவை பெறும்போது, மனித இனத்தின் அழிவு சாத்தியமே என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

சாத்தியமான ஆபத்து

சாத்தியமான ஆபத்து

மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒருபட்சமான ஆய்வுகளில் மட்டும் ஈடுபடாமல், அதீத செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துக்களை தவிர்க்கும்படியான ஆய்வுகளிளும், நுண்ணறிவு விஞ்ஞானிகள் ஈடுபடுவது மிக முக்கியம் என்று ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துளார்.

"ஒற்றுமை" (the singularity)

செயற்கை நுண்ணறிவை சாதாரணமாக எண்ணிவிட கூடாது. இன்றில்லை என்றாலும்கூட என்றாவது ஒருநாள் அது ஆபத்தான நெருக்கங்களை அணுகலாம்" என்று பல ஆண்டுகளுக்கு முன்பே "ஒற்றுமை" (the singularity) பற்றி ரே கர்சுவில் (Ray Kurzweil) எச்சரித்துள்ளார். ஆக்ஸ்போர்டு அகராதியின் கீழ் இவர் கூறும் "ஒற்றுமைக்கு" - ஒரு அனுமானிக்க முடியாத நேரத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்கள் ஆனது, மனித இனத்தின் மேல் ஒரு வியத்தகு மற்றும் மீற முடியாத மாற்றத்திற்கு உட்படுதலில் ஏற்படும் முன்னேற்றம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

எதிர்பாராத, துன்பகரமான விளைவு

எதிர்பாராத, துன்பகரமான விளைவு

ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமின்றி எலான் மஸ்க், பில் கேட்ஸ், மற்றும் ஸ்டீவ் வொஸ்னியா உள்ளிட்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப ஒளிமயமானவர்களும் கூட செயற்கை நுண்ணறிவானது எதிர்பாராத, துன்பகரமான விளைவுகளை ஏய்க்க வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர். சரி, மனித இனம் அழியும் என்பதற்கான ஸ்டீபன் ஹாக்கிங் முன்வைக்கும் 3 காரணங்களில் முதலாவது - செயற்கை நுண்ணறிவு. மீதி இரண்டு காரணங்கள் என்னென்ன.?

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்பும் இரண்டாவது விடயம் - மனித ஆக்கிரமிப்பு. ஒருவேளை அதீத செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள், மனித இனத்தை எதிர்த்து அழிக்கவில்லை என்றால், மனித இனம் தன்னைத்தானே மனித ஆக்கிரமிப்பு மூலம் அழித்துக்கொள்ளும் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஆக்கிரமிப்பு பண்பு

ஆக்கிரமிப்பு பண்பு

மனித குறைபாடுகளில் எதை நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு "மனிதனின் ஆக்கிரமிப்பு பண்பு" என்று விடை அளித்துள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங். ஆதிகாலங்களில் உணவு, உறைவிடம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற காரணத்தால் வளர்ந்த ஆக்கிரமிப்பு பண்பு இப்போது மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றுள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

மூன்றாவது காரணம் :

மூன்றாவது காரணம் :

மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்பும் மூன்றாவது விடயம் - எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ் (ஏலியன்கள்). 2010-ஆம் ஆண்டிலேயே ஏலியன்கள் இருப்பது உறுதி, மற்றும் அவைகள் பூமிக்கு நட்பு பாராட்டும் முறையில் நடந்து கொள்ளாது என்று ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை செய்தார்.

கைப்பற்றுவது, சொந்தம் கொண்டாடுவது

கைப்பற்றுவது, சொந்தம் கொண்டாடுவது

ஒருவேளை மேம்பட்ட ஏலியன் நாகரீகங்களானது கண்ணில் தென்பட்ட கிரகங்களை கைப்பற்றுவது, சொந்தம் கொண்டாடுவது போன்ற நாடோடித்தன்மை கொண்டதாய் கூட இருக்கலாம் என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்புகிறார்.

எது எல்லை என்று யாருக்குமே தெரியாது

எது எல்லை என்று யாருக்குமே தெரியாது

அப்படி இருந்தால், ஏலியன்கள் மேலும் மேலும் பயணிக்க பிற கிரகங்களின் பொருட்களையும், வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்ககத்தில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். எல்லாவற்றிற்கும் மேலாக, எது எல்லை என்று யாருக்குமே தெரியாது என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.

Best Mobiles in India

English summary
Artificial Intelligence is something close enough to be dangerous. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X