Just In
- 4 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 8 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 8 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 9 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Movies
தளபதி 67 விஜய்க்கு மட்டும் இல்லை... த்ரிஷாவுக்கும் ரொம்பவே ஸ்பெஷல் தானாம்!: ஏன்னு தெரியுமா?
- News
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய திடீர் ஆய்வு! ஆன் தி ஸ்பாட்டில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Sports
இந்திய அணியை பலப்படுத்தனும்..இதுக்காக ஸ்பெஷல் பயிற்சி தருகிறோம்..குறை குறித்து பேசிய ராகுல் டிராவிட்
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடேங்கப்பா வேற லெவல்-ல இருக்கு: பூமிக்குத் திரும்பும் முன் நிலவை மிக நெருக்கமாக படம்பிடித்த NASA விண்கலம்.!
அமெரிக்காவின் நாசா அமைப்பு புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்பைவிட துல்லியமான முறையில் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.. இந்நிலையில் நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவை மிகவும் நெருக்கமாகப் புகைப்படங்களை எடுத்த நிலையில் மீண்டும் பூமிக்குத் திரும்ப உள்ளது.

ஆர்டெமிஸ்-1
இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா அமைப்பு. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனாலும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம்..
அதாவது இந்த ஆர்டெமிஸ்-1 ஓரியன் விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதமே விண்ணில் செலுத்த தயாராகி இருந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்பு கடந்த மாதம் தான் நிலவுக்கு ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது.

மனிதர்கள் நிலவுக்குச் செல்லலாம்
குறிப்பாக ஆர்டெமிஸ் திட்டத்தை வரலாற்றுச் சாதனை என விஞ்ஞானிகள் புகழ்ந்தனர். பின்பு இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் நிலவுக்குச் செல்லலாம் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அருமையாக உள்ளன...
தற்போது ஒரு மாதம் ஆன நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 விண்கலம் ஆனது நிலவுக்கு 130 கிமீ தொலைவில் இருந்து அருமையான படங்களை அனுப்பியுள்ளது. குறிப்பாக மிக நெருக்கமாக நிலவின் மேற்பரப்பை ஆர்டெமிஸ் 1 எடுத்துள்ள படங்கள் மிகவும் அருமையாக உள்ளன என்று தான் கூறவேண்டும்.

டிசம்பர் 11-ம் தேதி?
அதேபோல் நிலவை துல்லியமாக புகைப்படம் எடுத்த இந்த விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்ப உள்ளது. அதாவது வரும் டிசம்பர் 11-ம் தேதி இந்த ஆர்டெமிஸ் 1 ஆனது பூமிக்குத் திரும்பும் என்று நாசா கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NASA தீவிரமாக பணியாற்றி வருகிறது
கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 என்ற விண்கலம் நிலவில் தரையிறங்கியது. இதில் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப NASA தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காகத் தான் ஓரியன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது.

24,500 மைல் வேகத்தில்...
இந்த ஓரியன் விண்கலம் சர்வதேச விண்வெளியில் இருந்து திரும்பும் வேகத்தை விட மணிக்கு 24,500 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று கூறப்படுகிறது. இப்படி அதிவேகமாக ஓரியன் விண்கலம் பூமிக்கு வரும்போது வெப்பக் கவசத்தின் நீடித்த தன்மையைச் சோதிக்க உள்ளது நாசா அமைப்பு.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470