100வது முறை விண்ணில் ஏவப்பட்ட ஏரியன் 5 ராக்கெட்!

இம்முறை 2 தொலைதொடர்பு செயற்கைகோள்களை சுமந்து சென்று விண்வெளியில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது ஏரியன்5.

|

ஐரோப்பாவின் மிகுந்த பயன்மிக்க ஏவுகலனான ஏரியன் 5 ராக்கெட், 100வது முறையாக விண்ணில் ஏவப்பட்டு சாதனைப்படைத்துள்ளது. இம்முறை 2 தொலைதொடர்பு செயற்கைகோள்களை சுமந்து சென்று விண்வெளியில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது ஏரியன்5.

ராக்கெட்டை ஏவுவதற்கு திட்டமிட்ட நேரமான மாலை 5:53 மணிக்கு (21:53 GMT, ஏவுதளம் உள்ள கவ்ரா, ப்ரென்ச் க்யூனா-வின் உள்ளூர் நேரம் மாலை 6:53) 94 விநாடிகளுக்கு முன்னதாக, வெளியிட கூறவிரும்பாத பிரச்சனையால் கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. ஏரியன் ஸ்பேஸ் பிரென்சு நிறுவனத்தின் இணையதள நேரலையை பார்த்துக்கொண்டிருந்த 3000க்கும் அதிகமான, ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்ட செய்தியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏரியன்ஸ்பேஸ்

ஏரியன்ஸ்பேஸ்

அடுத்த 45 நிமிடங்களுக்கு சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இறுதியில் மாலை 6:38 மணிக்கு(22:38GMT, உள்ளூர் நேரம் மாலை 7:38) ஏவுதளத்தில் இருந்து கருமேகங்களை பிளந்துகொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது ஏரியன்5 ராக்கெட்.

விண்வெளியில் நுழைந்த ராக்கெட் முதலில் ஒரு செயற்கைகோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர் மற்றொன்றுடன் தொடர்ந்தது. மாலை 7:20 மணிக்கு(23:20GMT, உள்ளூர் நேரம் மாலை 8:20) இரண்டாவது விண்கலன் வெற்றிகரமாக நிலைநிறுத்திய பின்னர், க்யூனா விண்வெளி மையத்தில் உள்ள ஏரியன்ஸ்பேஸ் மிஷன் கண்ட்ரோல் கைதட்டல்களால் அதிர்ந்தது.

ஏரியன் 5

ஏரியன் 5

"அதிக எடைகொண்ட ஏவுகலன் மற்றொரு முறை பழுதின்றி செயலாற்றியுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என இரண்டாவது செயற்கைகோளை நிலைநிறுத்திய பின்னர் ஏரியன்ஸ்பேஸ் யூடியூப் சேனல் நேரலையில் தெரிவித்தார் ஏரியன்ஸ்பேஸ் நிறுவன சி.ஈ.ஓ ஸ்டீபன் இஸ்ரேல். மேலும் ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் நீண்டகாலமாக பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிறுவனம் ஏரியன்5 ராக்கெட்டை பயன்படுத்தி மட்டும் 200க்கும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.


"சிறப்பான சேவைக்கு பெயர் பெற்றது ஏரியன் 5. மற்றுமொரு பழுதற்ற ராக்கெட் ஏவுதலுக்காக எங்களின் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்தார் இன்டல்சேட் நிறுவனத்தின் ஸ்பேஸ் சிஸ்டம்.ஃபார் சாட்டிலைட் கம்யூனிகேசன்ஸ் பிரிவின் துணைத்தலைவர் கென் லீ.

ஜப்பான் ஸ்கை பர்பெக்ட் ஜேசாட்

ஜப்பான் ஸ்கை பர்பெக்ட் ஜேசாட்

விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டு செயற்கோள்களான ஹாரிசான்ஸ் 3இ மற்றும் ஏசர்ஸ்பேஸ்-2/இன்டல்சாட்38-களிலும்,இன்டல்சாட் நிறுவனம் பங்குதாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த இரண்டு செயற்கைகோள்களும் நுகர்வோர், பெருநிறுவன மற்றும் அரசு வாடிக்கையாளர்களின் தொலைதொடர்புகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜப்பான் ஸ்கை பர்பெக்ட் ஜேசாட் குழுவுடன் இணைந்து தயாரித்த ஹாரிசான் 3இ செயற்கைகோள், ஆசிய பசிபிக் பகுதியில் பிராட்பேண்ட் மேம்படுத்தும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டது. அதேநேரம் ஏசர்ஸ்பேஸ்2/ இன்டல்சாட் 38 செயற்கைகோள், ஆசிய பசிபிக் பகுதி மட்டுமில்லாது, ஆப்பரிக்கா, மத்திய கிழக்கு ஐரோப்பாவிலும் டிடிஎச் சேவைக்காக அனுப்பப்பட்டது.

பரிசோதனை விண்கலம்

பரிசோதனை விண்கலம்

1996ல் முதல் ஏரியன்5 பரிசோதனை விண்கலம் தோல்வியில் முடிந்தாலும், தற்போது நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றிருக்கிறது. இன்றைய ஏவுதலையும் சேர்த்து வெற்றி சதவீதம் 98.1 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 20டன் அளவிலான எடையை தாங்கி செல்லமுடியும் என்பதால், அதிக எடைகொண்ட தொலைதொடர்பு செயற்கைகோள்களுக்கு ஏரியன்5 சரியான ஏவுகலன் ஆகும்.


ஏரியன்5-ல் ஐந்து வகையான செயல்பாட்டு பிரிவுகள் உள்ளன. தற்போது பயன்படுத்தப்பட்ட ஏரியன்5 இசிஏ வகை, 67 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கான் 9 ராக்கெட் மற்றும் யுனைடேட் லான்ச் அலையன்ஸ்-ன் அட்லஸ் வி வெகிகில் ஆகியவை ஏரியன்5ன் குறிப்பிடத்தகுந்த போட்டியாளர்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Ariane 5 Rocket Lofts 2 Satellites on Milestone 100th Launch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X