Home
Scitech

தனியாக இருக்கிறேன் என்ற கவலை வேண்டாம்-டெமோடெக்ஸ் சிற்றுண்ணி உங்களுடன் உள்ளது.!

டெமோடெக்ஸ் எனப்படும் இந்த சிற்றுண்ணிகள் உங்கள் முகத்தில் தற்பொழுது உயிர் வாழ்ந்து, அங்கும் இங்கும் ஊர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

டெமோடெக்ஸ் எனப்படும் இந்த சிற்றுண்ணிகள் உங்கள் முகத்தில் தற்பொழுது உயிர் வாழ்ந்து, அங்கும் இங்கும் ஊர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

உயிர் வாழ்வது மட்டுமின்றி இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் உங்கள் மூஞ்சியில் சில ஆண் டெமோடெக்ஸ் கள் பல பெண் டெமோடெக்ஸ் சிற்றுண்ணிகளுடன் இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கிறது.

டெமோடெக்ஸ் சிற்றுண்ணி

டெமோடெக்ஸ் சிற்றுண்ணி

நாங்கள் சொல்வதைக் கேட்கவே சற்று கூச்சமாகத் தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மை என்று விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். நமது உடலில் பல வகை வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஏற்கனவே இருக்கின்றன, அதே போல் இந்த டெமோடெக்ஸ் சிற்றுண்ணிகள் நமது தோல் துளைகளில் உயிர் வாழ்கின்றன.

பாலூட்டி உயிரினங்களின் உடலில்

பாலூட்டி உயிரினங்களின் உடலில்

டெமோடெக்ஸ் சிலந்தி மற்றும் உண்ணி வகையை சார்ந்தது. ஆனால் வெறும் கண்களால் காண முடியாத சிற்றுண்ணிகள் இவை. டெமோடெக்ஸ் சிற்றுண்ணிகள் அணைத்து வகையான பாலூட்டி உயிரினங்களின் உடலில் உயிர்வாழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முகத்தில் இருப்பிடம்

முகத்தில் இருப்பிடம்

சிலந்திகளைப் போன்று எட்டுக் கால்களுடன் உங்கள் முகத்தில் உயிர் வாழும் இந்த டெமோடெக்ஸ் சிற்றுண்ணிகள், உங்களின் தோல் துளைகளை இருப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஸாசியா நோயி

ரோஸாசியா நோயி

இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், ரோஸாசியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் முகத்தில் இவை ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன என்பது தான். ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, 5 மில்லிமீட்டர் தோல் பரப்பில் நூற்றுக்கணக்கான டெமோடெக்ஸ்கள் உயிர் வாழ்கின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மட்டும் இனப்பெருக்கம்

இரவு நேரத்தில் மட்டும் இனப்பெருக்கம்

டெமோடெக்ஸ் சிற்றுண்ணிகளின் ஆயுள் வெறும் 14 நாட்கள் மட்டுமே. ஆராய்ச்சியாளர்களின் கணக்கின்படி நூற்றில் வெறும் நான்கு அல்லது ஐந்து ஆண் டெமோடெக்ஸ் சிற்றுண்ணிகள் மட்டுமே உயிர்வாழ்கின்றன. ஆண் டெமோடெக்ஸ்கள் இரவு நேரத்தில் மட்டும் இனப்பெருக்கத்திற்காகத் தோல் துளைகளில் இருந்து வெளியில் வந்து பெண் டெமோடெக்ஸ்கள் உள்ள தோல் துளைகளைத் தேடிச் சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

தோல் துளை

தோல் துளை

இனப்பெருக்கத்திற்கு பின், அதனுடைய தோல் துளைகளுக்கு ஆண் டெமோடெக்ஸ்கள் திரும்பிச் சென்று விடுகின்றன. அதே போல் கருமுட்டைகளைப் பெண் டெமோடெக்ஸ்கள் தங்கியுள்ள தோல் துளைகளில் விட்டுச் செல்கின்றன என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

இந்த டெமோடெக்ஸ் சிற்றுண்ணிகள் உங்களின் ஆரோக்கியத்திற்கும் உடலிற்கும் கெடுதல் விளைவிக்கும் என்ற பயம் வேண்டாம். டெமோடெக்ஸ்கள் உங்களின் முகத்தில் உள்ள பாக்டீரியா, முகப்பரு மட்டும் உங்கள் முகத்தில் உருவாகும் எண்ணெய்களை உணவாக தின்று உயிர் வாழ்கின்றன.

கைக்குழந்தைகளின் முகத்திலும் டெமோடெக்ஸ்கள்

கைக்குழந்தைகளின் முகத்திலும் டெமோடெக்ஸ்கள்

கைக்குழந்தைகளின் முகத்திலும் டெமோடெக்ஸ்கள் காணப்படுகின்றன, முக்கியமாக டெமோடெக்ஸ்கள் மார்பகங்களில் அதிகம் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். என்னதான் சுத்தமாக நீங்கள் இருந்தாலும் தலையணை மற்றும் டவல்கள் மூலம் அனைவரிடமும் டெமோடெக்ஸ்கள் பரவுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

நிலவிற்குச் சென்ற டெமோடெக்ஸ்கள்

நிலவிற்குச் சென்ற டெமோடெக்ஸ்கள்

இதை அனைத்தையும் கேட்டு பீதி அடைய வேண்டாம், இந்த சிற்றுண்ணிகள் நமது உடலில் வாழும் தீங்கு விளைவிக்காத, பாதிப்பில்லாத ஒரு வகை உயிரினம் என்றுஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேடிக்கையாகச் சொல்ல வேண்டுமென்றால் நிலவிற்குச் சென்ற மனிதர்களைக் காட்டிலும், அவர்களின் முகவழி நிலவிற்குச் சென்ற டெமோடெக்ஸ்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.

Best Mobiles in India

English summary
are you lonely dont be this is a type of mite that is living on your face right now : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X