டைட்டன் நிலவில் உயிர்கள் உள்ளதா? உயிர் அடையாளங்களைத் தேடி டிரோன் பறக்கவிடும் நாசா!

|

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் சிறுகோள்களில் உயிர்கள் வாழ்கிறதா? அல்லது உயிர் வாழ ஏற்ற சூழ்நிலை எங்கும் இருக்கிறதா? என்று நாசா தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

டைட்டன் நிலவில் உயிர்கள் உள்ளதா? உயிர் அடையாளம் தேடி நாசா டிரோன்!

இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான புதிய அறிவிப்பை நாசா தற்பொழுது வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய சந்திரனான டைட்டன் நிலவில் உயிர்கள்

மிகப்பெரிய சந்திரனான டைட்டன் நிலவில் உயிர்கள்

சனியின் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான டைட்டன் நிலவில் உயிர்கள் உள்ளதா என்பதை ஆராய புதிய டிரோன் காப்டரை டைட்டனுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த டிரோன் காப்டருக்கு டிராகன்ஃபிளை(Dragonfly) என்று நாசா பெயரிட்டுள்ளது.

டிராகன்ஃபிளை டிரோன் காப்டர்

டிராகன்ஃபிளை டிரோன் காப்டர்

இந்த டிராகன்ஃபிளை டிரோன் காப்டர், 2026 ஆம் ஆண்டு டைட்டன் நிலவு நோக்கி விண்ணில் ஏவப்படுமென்றும், 2034 ஆம் ஆண்டு இந்த டிரோன் காப்டர் டைட்டன் நிலவில் தரை இரக்கப்பட்டு, டைட்டன் நிலவில் உள்ள பல டஜன் இடங்களுக்கு மாறி-மாறிச்சென்று உயிர்களுக்கான அடையாளங்களைத் தேடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரவ ஆறுகள் ற்றும் கடல்கள் உள்ள ஒரே கோள்

திரவ ஆறுகள் ற்றும் கடல்கள் உள்ள ஒரே கோள்

நமது கிரகத்தைத் தவிரச் சூரியக் குடும்பத்தில், அதன் மேற்பரப்பில் திரவ ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே கோள் டைட்டன் நிலவு மட்டும் தான்.

<span style=கூகுள் மேப்ஸ் செயலியில் வருகிறது புதிய பாதுகாப்பு அம்சம்.!" title="கூகுள் மேப்ஸ் செயலியில் வருகிறது புதிய பாதுகாப்பு அம்சம்.!" loading="lazy" width="100" height="56" />கூகுள் மேப்ஸ் செயலியில் வருகிறது புதிய பாதுகாப்பு அம்சம்.!

இந்த கடல் நீரினால் ஆனது அல்ல!

இந்த கடல் நீரினால் ஆனது அல்ல!

டைட்டன் நிலவில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்கள் மீத்தேன் மற்றும் ஈத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, நீரினால் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் சாத்தியம் ஆகியது எப்படி

இத்திட்டம் சாத்தியம் ஆகியது எப்படி

இந்த அதிநவீன பணி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நினைத்தும் கூட பார்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது, ஆனால் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள டிராகன்ஃபிளை டிரோன் உதவியுடன் இது தற்பொழுது சாத்தியம் ஆகியுள்ளது.

டிராகன்ஃபிளை டிரோன் செய்யப்போகும் ஆராய்ச்சி

டிராகன்ஃபிளை டிரோன் செய்யப்போகும் ஆராய்ச்சி

நாசா அறிவித்துள்ள இந்த திட்டத்தின் கீழ் டிராகன்ஃபிளை டிரோன் காப்டர் 2.7 வருடம் டைட்டன் நிலவை ஆராய்ச்சி செய்யுமென்று நாசா அறிவித்துள்ளது. அதேபோல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைட்டன் நிலவில் உயிர் வாழத் தேவையான திரவ நீர் மற்றும் சிக்கலான கரிம பொருட்களின் தடயங்கள் இருக்கிறதா என்பதையும் ஆராய்ச்சி செய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

<span style=நீண்டநாள் பிளானில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி வெற்றி: கேஷ்பேக் ஆப்பருடன் அடி தூள்.!" title="நீண்டநாள் பிளானில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி வெற்றி: கேஷ்பேக் ஆப்பருடன் அடி தூள்.!" loading="lazy" width="100" height="56" />நீண்டநாள் பிளானில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி வெற்றி: கேஷ்பேக் ஆப்பருடன் அடி தூள்.!

கடந்த கால ஆராய்ச்சி

கடந்த கால ஆராய்ச்சி

கடந்த கால அல்லது தற்போதுள்ள வாழ்க்கையின் வேதியியல் சான்றுகள், டைட்டன் நிலவின் இயல்பு நிலைகள், காலமாற்றங்கள், நிலவின் வளிமண்டல மற்றும் மேற்பரப்பு பண்புகளை இந்த டிராகன்ஃபிளை டிரோன் காப்டர் ஆராய்ச்சி செய்யும்.

எட்டு ரோட்டர்களுடன் உயிர் தேடும் டிராகன்ஃபிளை

எட்டு ரோட்டர்களுடன் உயிர் தேடும் டிராகன்ஃபிளை

எட்டு ரோட்டர்களைக் கொண்டிருக்கும் இந்த டிராகன்ஃபிளை டிரோன் காப்டர், தொடர்ச்சியா 108 மைல்களுக்கு மேல் பறக்கக்கூடும் அதாவது தொடர்ச்சியாக சுமார் 175 கிலோமீட்டர் தூரம் பறக்கக்கூடியது என்று நாசா அறிவித்துள்ளது.

பூமியைப் போலவே உள்ள டைட்டன்

பூமியைப் போலவே உள்ள டைட்டன்

டைட்டனின் வளிமண்டலம் பெரும்பாலும் பூமியைப் போலவே நைட்ரஜனால் ஆனது, ஆனால் பூமியை விட நான்கு மடங்கு அடர்த்தியானது என்பது குறிப்பிடத்தது. டைட்டனிலி உள்ள மேகங்களும், மேகங்களிலிருந்து வரும் மழையும் மீத்தேனால் ஆனது.

குடும்ப பிரச்னைக்கு தற்கொலை முயற்சி: வாலிபரை காப்பாற்றிய செல்பி.!குடும்ப பிரச்னைக்கு தற்கொலை முயற்சி: வாலிபரை காப்பாற்றிய செல்பி.!

உயிர்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை

உயிர்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை

சூரிய மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய சந்திரனான டைட்டனில் அடர்த்தியான நீர் பனி மேலோடு உள்ளது, அதன் அடியில் முதன்மையான நீரினால் ஆன கடல் இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர் என்று நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Are there lives on Titan Moon Nasa going to flew Drones in search of life signs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X