இதெப்படி சாத்தியம்.? மண்டைய குழப்பும் அசாத்தியமான மர்மங்கள்.!

|

சில கேள்விகளுக்கு விடைகள் கிடையாது - அதை குழப்பம் என்று கூறலாம். இங்கு சில விடைகளும் உள்ளன, ஆனால் அதற்கான கேள்விகள் கிடையாது - அதைத்தான் மர்மம் என்று கூறுவார்கள்.

தொல்பொருளியல் என்பது நமது கடந்த காலங்களின் மீதான வெளிச்சத்தை பாய்ச்ச உதவும் மிக முக்கியமான ஆய்வுகளில் ஒன்றாகும். ஆனால் அந்த கடந்த காலம் நிகழ்காலத்தை விஞ்சும் அளவிலான புதிராக இருந்தால், இதை ஏன் தான் கண்டுபிடித்தோமோ என்று வருந்தும் நிலை ஏற்படத்தான் செய்கிறது.

அப்படியாக நவீன விஞ்ஞானிகளின் மண்டையை போட்டு குடையும் மிகவும் புதிர்மிக்க தொல்லியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி தான் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்.

வெண்டிங் மெஷின் (கி.மு. 100)

வெண்டிங் மெஷின் (கி.மு. 100)

நவீன கால விற்பனை இயந்திரங்கள் போன்ற வடிவமைப்பிலான ஒரு பண்டைய இயந்திரம் கோவில்களில் புனித நீரை விற்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹீரோ ஆப் அலெக்ஸாண்ட்ரியாவால் கண்டுபிடிக்கப்பட்ட இயக்கருவி ஒரு முன்னோடி சாதனம் என்பதில் சந்தேகமேயில்லை.

அற்புதமான யோசனை.!

அற்புதமான யோசனை.!

ஒரு நபர், ஒரு நாணயத்தை விற்பனையக இயந்திரத்தில் வைக்க, அதுவொரு வால்வை திறந்து அதன் விளைவாய் ஒரு நெம்புகோல் தள்ளப்பட சிறிதளவிலான புனித நீர் வெளியேறும் வண்ணம் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, இந்த அற்புதமான யோசனையானது, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு விற்பனை இயந்திரமாக தன்னை புதுப்பித்துக்கொண்டது.

பண்டைய கிரேக்க காலத்து தானியக்க கதவுகள்  (1 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி)

பண்டைய கிரேக்க காலத்து தானியக்க கதவுகள் (1 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி)

ஹீரோ ஆப் அலெக்ஸாண்டிரியா எனும் மேதாவி மற்றொரு கண்டுபிடிப்பையும் தன் காலத்தில் நிகழ்த்தியுள்ளார். அதுதான் தானாகவே திறக்கும் கதவுகள். கோயில்களில் பதிக்கப்பட்ட இக்கதவுகள் பலிபீடத்திற்குள் வரும் வெப்ப காற்றின் மூலம் வேலை செய்யும் வண்ணனும் வடிவமைக்கப்ட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஸ்மார்ட்போன் போன்ற பொருள் (1937)

சர்ச்சைக்குரிய ஸ்மார்ட்போன் போன்ற பொருள் (1937)

யும்பெர்டோ ரோமனோவால் உருவாக்கம் பெற்ற மிஸ்டர் பிஞ்சன் அண்ட் செட்லிங் ஆப் ஸ்பிரிங்ஃபீல்ட் ஓவியத்தில், கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட்போனுடன் பலவகையில் ஒற்றுப்போகும் ஒரு சதுர வடிவிலான பொருளை காண முடிகிறது.

பல்வேறு கோட்பாடுகள்.!

பல்வேறு கோட்பாடுகள்.!

படத்தில் வலதுபுறமாக அமர்ந்திருக்கும் இந்தியரைப் பார்த்தால், அவர் ஒரு ஸ்மார்ட்போனில் டைப் செய்வது போன்று தெரிகிறது. இது உண்மையில் என்னவென்று யாருக்கும் தெரியாது. எனினும், இது சார்ந்த பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.

பண்டைய கிரேக்கத்தில் முதல் வெர்டிகல் ஷவர் (கிமு 2 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்)

பண்டைய கிரேக்கத்தில் முதல் வெர்டிகல் ஷவர் (கிமு 2 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்)

பெர்கமோன் தொல்பொருளியல் தளத்தில் உலகின் முதல் ஷவர் காணப்பட்டது. அது ஒரு கிரேக்க நகரமாக இருந்தது, ஆனால் இப்பொழுது அது துருக்கி நாட்டில் உள்ளது. இந்த கட்டுமானமானது மிகவும் சிக்கலான7 நிலைகள் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லியோனார்டோ டா வின்சி ரோபோ (14 ஆம் நூற்றாண்டு)

லியோனார்டோ டா வின்சி ரோபோ (14 ஆம் நூற்றாண்டு)

லியோனார்டோ டா வின்சி ஒரு மேதை என்பதில் சந்தேகமே இல்லை.ஆக இராணுவ நடவடிக்கைகளை மனதில் கொண்டு அவர் வடிவமைத்த ஒரு ரோபாட் வரைபடத்தை கண்டு யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. 1950-ஆம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது.

மிகவும் யதார்த்தமானது.!

மிகவும் யதார்த்தமானது.!

உண்மையில் லியோனார்டோ டா வின்சி தான் இதை செய்தாரா என்பது தெரியவில்லை, ஆனால் இந்த ரோபோ வடிவமைப்பு மிகவும் யதார்த்தமானதாகவும், எளிய மனித இயக்கங்களைப் பின்பற்றும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பண்டைய இரசாயன ஆயுதம் (கி.பி.256)

பண்டைய இரசாயன ஆயுதம் (கி.பி.256)

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த 19 ரோமன் செஞ்சுரியன்ஸ் மற்றும் ஒரு பாரசீக போர்வீரரின் உடல்கள் சிரியா நகரிலுள்ள துரா-யூரோபாஸில் உள்ள சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இவர்கள் சுரங்கப்பாதையில் வீழ்ந்து இறந்துவிட்டதாக கருதப்பட்டது. பின்னரே சல்பர் டையாக்ஸைட் மேக மூட்டம் காரணமாக அவர்கள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. ஆக இதுதான் உலகின் முதல் ரசாயன போர் மற்றும் ஆயுதமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

நாஸ்கா கோடுகள் (2 வது நூற்றாண்டுக்கு முந்தைய காலம்)

நாஸ்கா கோடுகள் (2 வது நூற்றாண்டுக்கு முந்தைய காலம்)

துல்லியமான மற்றும் அருமையான இந்த நாஸ்கா கோடுகள் பெருவில் உள்ள நாஸ்கா பீடபூமியில் காணப்பட்டன. இப்பொழுது வரை சுமார் 30 ஓவியங்கள் (ஒரு குரங்கு, ஒரு பறவை, ஒரு சிலந்தி, சுமார் 700 முக்கோணங்கள், சுருள்கள்) அங்கு காட்சிப்படுகின்றன. ஆகாயத்தில் இருந்து யாரும் உதவி செய்யாமல் இவ்வளவு துல்லியமாக இது வரைந்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இது சார்ந்த எந்தவிதமான நம்பகமான விளக்கங்களும் இல்லை.

மினோன் அரண்மனையின் மத்திய வெப்பம் (2700-1400 கி.மு)

மினோன் அரண்மனையின் மத்திய வெப்பம் (2700-1400 கி.மு)

க்னோஸ்சோஸ் அரண்மனையின் இடிபாடுகளில், ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. பண்டைய மினோவான் நாகரிகமானது, உருளை வடிவங்களிலான அரை வட்ட கூரைகளை பயன்படுத்தி அரண்மனையை சூடாக வைத்துக்கொண்டுள்ளது. அதாவது, அந்த தூண்கள் தரையின்கீழ் வரை புதைக்கப்பட்டு மற்றும் தீயினால் சூடப்பட்டு முழு அரண்மனைக்கும் வெப்பத்தை செலுத்தும் ஒரு கருவியாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புனித உடற்போர்வை (ஷ்ரவ்ட் ஆப் டுரின்)

புனித உடற்போர்வை (ஷ்ரவ்ட் ஆப் டுரின்)

இந்த் ஷ்ரவ்ட் ஆப் டுரின் ஆனது இயேசுவின் உருவத்தை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. கூறப்படும் கதையின் படி, இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர், அவருடைய உடலில் இந்த துணியால் மூடப்பட்டிருந்தது. பின்னர், அவர் காணாமல் போனார். இந்த துணியை, நீங்கள் நெருக்கமாக பார்த்தால், ஒரு முகம், உடல், மற்றும் இரத்த அழுத்ததினால் ஆன அச்சு ஆகியவைகளை காணமுடிகிறது.

ஏற்றுக்கொள்ளவில்லை.!

ஏற்றுக்கொள்ளவில்லை.!

கூறப்படும் இந்த கதை மற்றும் இந்த விளக்கத்தினை விஞ்ஞானிகள் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

News Source

Most Read Articles
Best Mobiles in India

English summary
Archaeological Discoveries That Puzzle Modern Scientists. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X