200 பில்லியன் டாலரை ஹைபர்லூப் திட்டத்திற்காக முதலீடு செய்யுமா ஆப்பிள்?
200 பில்லியன் டாலரை முதலீடு செய்யுமா ஆப்பிள்?
ஹைபர்லூப் திட்டத்தில் ஆப்பிள் தனது பணத்தை முதலீடு செய்யப்போகிறதா? அந்நிறுவனம் அமைந்துள்ள கூபர்டினோ நகரின் மேயர் கூறுகையில்,

ஆப்பிள் போன்ற சிலிக்கான்வேலி நிறுவனங்கள் 2013ல் டெஸ்லா சி.ஈ.ஓ எலன் முஸ்க் பரிந்துரைத்த 700mph வெற்றிடத்தால் மூடப்பட்ட போக்குவரத்து அமைப்பான ஹைபர்லூப் கட்டமைப்பிற்கு அதிக மானியம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஹைபர்லூப் திட்டம்:
சிலிக்கானவேலி பத்திரிக்கைக்கு மேயர் டார்சி ஃபால் அளித்த பேட்டியில், ஹைபர்லூப் திட்டத்திற்கு ஆதரவாக மற்ற புதிய போக்குவரத்து திட்டத்திற்கு தேவையான நிதிக்காக நவம்பரில் புதிய வரி விதிக்க நகர மன்றம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், புதிய வரி முன்மொழிவின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் நகர வரி கட்டணம் 17,000டாலரிலிருந்து 9.4மில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் எதிர்பார்க்கும் நிதியான 10.2மில்லியன் டாலரில் 92% ஆகும். ஹைபர்லூப் டிரான்ஸ்போர்டேசன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தினரை சந்தித்ததாக தெரிவித்த பால், திட்டத்தின் துவக்கத்தில் மட்டுமே வெகு சில தனியார்துறை நிதிகளை முதலீடு செய்ய விரும்புவதாகவும், அதுவும் அந்த துறை அல்லது அந்நிறுவனம் அதை விளம்பரத்திற்காக செய்வதாகவும் அந்நிறுவனம் கூறியதாக அவர் தெரிவிக்கிறார்.

சர்வதேச கவனத்தை ஈர்க்குமா?
இந்த ஹைபர்லூப் திட்டம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்னும், இதில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஃபால் நகரமன்றத்தாரிடம் கூறிய பிறகு, நகர மன்றம் இந்த நடவடிக்கையை ஒத்திவைத்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹைபர்லூப் நிறுவனத்தின் சி.ஈ.ஓ வை சந்தித்த நகர மன்ற உறுப்பினரான பேரி சாங்க், இத்திட்டத்தை செயல்படுத்த நகர மன்றம் ஹைபர்லூப் நிறுவனத்துடன் பேசிவருகிறது. அதன் பாதை ஸ்டீவன்ஸ் கிரிக் உடன் டிரிடன்ஸ்டேசன் முதல் டியான்ஸா காலேஜ் வரை இருக்கும் என நம்புகிறோம் என்றார்.
ஆப்பிள் நிறுவனம் இத்திட்டத்தில் ஆர்வமாக உள்ளதா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனாலும் இது எதிர்கால போக்குவரத்துக்கான வாய்ப்பாகவே உள்ளது.

பிராஜெக்ட் டைட்டன்:
பிராஜெக்ட் டைட்டன் எனப்படும் தானாக இயங்கும் கார் பிராஜெக்ட்-ஐ அந்நிறுவன சி.ஈ.ஓ டிம் கூக் "அனைத்து ஏ.ஐ பிராஜெக்ட்களின் தாய்" என குறிப்பிட்ட பின்னர் ஆகஸ்ட் 2017 முதல் சிறப்பாக செயல்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான லெக்சஸ் ஸ்போர்ட்ஸ் யூடிலிடி வெகிகில் எனும் பெயர் கொண்ட வாகனம் அக்டோபர் 2017ல் வெளியானது மற்றும் அதற்கு அடுத்த மாதமே ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் அதிகாரப்பூர்வ தானாக இயங்கும் கார் ஆய்வை வெளியிட்டது.

200 பில்லியன் டாலரை முதலீடு செய்யுமா ஆப்பிள்:
ஆப்பிள் நிறுவனம் சுமார் 200 பில்லியன் டாலர் பணத்தை ஹைபர்லூப் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டுமா என்பது தான் கேள்வி. 2013ல் எலன் முஸ்க் தனது ஆய்வு கட்டுரையை வெளியிட்ட பின்பு பல நிறுவனங்கள் இத்திட்டத்தை செயல்படுத்த துவங்கிவிட்டன. சமீபத்தில் இவர் அதில் சில மாற்றங்கள் செய்து தனது நிறுவனமான போரிங் கன்ஸ்ட்ரக்சன்-ம் எதிர்கால போக்குவரத்து அமைப்பான இதை கட்டமைக்கும் என அறிவித்தார். எச்.டி.டி , ரிச்சர்ட் ப்ரேன்சன் உடைய வெர்ஜின் ஹைபர்லூப் ஒன் போன்ற நிறுவனங்களுடன் எலன் முஸ்க், சர்வதேச வடிவமைப்பு போட்டியை ஸ்பேஸ் எக்ஸ் வளாகத்தில் நடத்தினார். ஹைபர்லூப் துறையில் இப்போதே கூட்டம் சேரத்துவங்கி விட்டது.


Click it and Unblock the Notifications