Home
Scitech

புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு!

தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தீங்கு விளைவிக்கும் ரேடியோ அதிர்வெண் (ஆர்.எஃப்) கதிர்வீச்சுகளை அதிகமாக வெளியிடுவதாக அமெரிக்காவில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

புற்றுநோய் அபாயம்:ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு

ஆபத்தான கதிர்வீச்சுகளை வெளியிடுவதாக தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு ஆப்பிள் அளித்துள்ள பதில் இது தான்.

FCC சட்ட வரம்புகளை மீறிய ஆப்பிள் மற்றும் சாம்சங்

FCC சட்ட வரம்புகளை மீறிய ஆப்பிள் மற்றும் சாம்சங்

ஆப்பிள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களிலிருந்து வெளிப்படும் ஆர்.எஃப் கதிர்வீச்சு 'ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC)' வகுத்துள்ள சட்ட வரம்புகளை மீறுவதாக உள்ளதென்று கலிபோர்னியாவின் வடக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிக கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் போன்கள்

அதிக கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் போன்கள்

தீங்கு விளைவிக்கும் ஆர்.எஃப் கதிர்வீச்சுகளை அதிகம் வெளிப்படுத்தும் ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிளின் ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் மாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்ட உண்மை!

கண்டறியப்பட்ட உண்மை!

சிகாகோ ட்ரிப்யூனின் நடத்திய சோதனையில், ஐபோன் 7 இல் இருந்து வெளிவரும் ரேடியோ-அதிர்வெண் கதிர்வீச்சு விதிக்கப்பட்ட சட்ட பாதுகாப்பு வரம்பை விடவும் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதென்று கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

SAR என்பது என்ன?

SAR என்பது என்ன?

Specific Absorption Rate(SAR) மதிப்பு குறித்த குழப்பம் பலரிடமும் உள்ளது. SAR என்பது உடலால் உரியப்படும் ஆர்.எப் சிக்னலின் அளவை குறிக்கிறது. இங்கு இந்த அளவுகோல் செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுடன் உடலில் உள்ள செல்களின் அளவோடு ஒப்பிடப்பட்டு கணக்கிடப்படுகிறது.

கதிர்வீச்சு பற்றி தவறாக புரிந்துகொண்ட மக்கள்!

கதிர்வீச்சு பற்றி தவறாக புரிந்துகொண்ட மக்கள்!

குறைவான SAR மதிப்பு கொண்ட செல்போனைப் பயன்படுத்துவதனால் RF கதிர்வீச்சின் தாக்குதல் குறைவாக இருக்குமென்று பலர் நம்புகின்றனர் அல்லது அதிக SAR மதிப்புள்ள செல்போனைப் பயன்படுத்துவதனால் கதிர்வீச்சின் தாக்குதல் அதிகமாக இருக்குமென்று பலரும் தவறாகக் கருதுகின்றனர் என்று FCC கூறியுள்ளது.

FCC அமைத்துள்ள வரம்பு இவ்வளவு தான்

FCC அமைத்துள்ள வரம்பு இவ்வளவு தான்

சராசரியாக 1 கிராம் திசுவுக்கு 1.6 கிலோ கிராம் வாட் (1.6W/kg) கதிர்வீச்சு தான் அளவு என்று FCC வரம்பு அமைத்துள்ளது. இந்த வரம்புக்குள் தான் அனைத்து நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும் தயாரிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, அதற்கு பிறகே சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம்

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம்

முன்னதாக, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அதன் ஐபோன்களின் விபரங்களுடன், SAR அளவு மற்றும் RF அளவு விபரங்களை போனுடன் பயனர்களுக்கு வழங்கிவந்தது. ஆனால், ஐபோன் 7 வெளியீட்டிலிருந்து இந்நிறுவனம் அத்தகைய தகவல்களை வழங்கவில்லை என்றும் வழக்கில் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் ஆபத்து

புற்றுநோய் ஆபத்து

அதிகப்படியான கதிர்வீச்சினால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர், குறிப்பாக இதனால் புற்றுநோய் ஆபத்து, செல்லுலார் மன அழுத்தம், மரபணு சேதங்கள், இனப்பெருக்க அமைப்பின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு மாற்றங்கள், நினைவக குறைபாடு, நரம்பியல் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு ஆளாக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் பதில்

ஆப்பிள் நிறுவனத்தின் பதில்

ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு ஆப்பிள் நிறுவனம் மட்டும் தற்பொழுது பதில் அளித்துள்ளது. SAR மற்றும் RF வரம்புகளைச் சரியாக கடைப்பிடித்து வருவதாக ஆப்பிள் பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple And Samsung Smartphones Might Cause Cancer: Sued Over Harmful Radiations : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X