காணாமல் போன அப்போலோ கேப்யூல் : 50 ஆண்டுகளுக்கு பின் காணும் வாய்ப்பு!

சோதனை ஓட்டமாக கருதப்பட வேண்டிய அப்பல்லோ 10 மிஷனில், நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்றன.

|

அப்போலோ 11 மிஷன் முதல்முறையாக நிலவில் தரையிறங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், மற்றொரு நாசா காப்ஸ்யூல் பல தசாப்தங்களாக காணாமல் போவதற்காகவே விண்ணில் செலுத்தப்பட்டது. சோதனை ஓட்டமாக கருதப்பட வேண்டிய அப்பல்லோ 10 மிஷனில், நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்றன. இதில் இரண்டு பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இந்த மிஷனின் அடையாளங்களாக இருக்கும் வகையில், கமெண்ட் மாடியூலுக்கு "சார்லி பிரவுன்", லூனார் மாடியூலுக்கு "ஸ்னோபி" என்றும் பெயரிடப்பட்டது . இந்த பெயரின் காரணமாகவோ என்னவோ, நிலவு மேற்பரப்பிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் பதுங்கி யாருக்கும் தெரியாமல் சுற்றிவருகிறது.

காணமுடியாமல் போனது

காணமுடியாமல் போனது

சார்லி பூமிக்கு திரும்பி வந்தநிலையில், ​​ஸ்னோபி இதுவரை திரும்பி வரவேயில்லை. அதற்கு பதிலாக அந்த லூனார் மாடியூல் சூரியனின் சுற்றுப்பாதையில் தூக்கியெறியப்பட்டு, மனிதர் பயணிக்கக்கூடிய ஒரே அமெரிக்க விண்கலமானது இதை மீண்டும் ஒருபோதும் காணமுடியாமல் போனது.

காஸ்மிக் ஹேஸ்டாக்

காஸ்மிக் ஹேஸ்டாக்

காஸ்மிக் ஹேஸ்டாக்-ல் உள்ள ஊசி போல், இந்த காப்ஸ்யூல்-ஐ கண்டறிவதில் முரண்பாடுகள் சுமார் 235 மில்லியன் ஒன்றாக இருந்தது. ஐம்பது வருடங்கள் கழித்து அப்பல்லோ 11 திட்டத்தின் ஆண்டுவிழாவின் போது, வானியலாளர்கள் "98 சதவிகிதம்" சரியாக செய்திருக்கிறார்கள் என நம்புகிறார்கள்.

ஸ்னோபியின் கடைசியாக அறியப்பட்ட இயக்கங்கள்

ஸ்னோபியின் கடைசியாக அறியப்பட்ட இயக்கங்கள்

ராயல் ஆஸ்ட்ரானமிகல் சொசைட்டியை சேர்ந்த அனுபவமில்லா வானியலாளரான நிக் ஹோவ்ஸ் தலைமையில், 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


அந்த சமயத்தில், மிஷன் நடைபெற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்னோபியின் கடைசியாக அறியப்பட்ட இயக்கங்கள் மற்றும் சுற்றுப்பாதை தகவல்கள் போன்றவற்றில் சூரியன், புவி, மற்றும் சந்திரனின் ஈர்ப்புவிசையால் நீண்ட காலமாக தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது வானியல், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் டெராபைட் அளவிலான டெலஸ்கோப் தரவுகளை மிகப்பரலாக ஆராய வேண்டியிருந்தது.

விண்வெளி பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரசியமான உண்மை.! 10வது உண்மை உங்களை மிரளவைக்கும்.!விண்வெளி பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரசியமான உண்மை.! 10வது உண்மை உங்களை மிரளவைக்கும்.!

முரண்பாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிகிறது

முரண்பாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிகிறது

தற்போதும் அனைத்துவிதமான ஆராய்ச்சிகளுக்கு பிறகும் ஹோவ்ஸ் மற்றும் அவரது சக ஊழியர்கள், தங்களால் அடையாளம் காணப்பட்ட பொருள் உண்மையில் நீண்டகாலத்திற்கு முன்பு காணாமல் போன நாசாவின் காப்ஸ்யூல் என சொல்ல முடியாது என்கின்றனர். எனினும் தற்போது, முரண்பாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிகிறது.

 கண்டிப்பாக விரிவான தகவல்களை பெற போகிறோம்

கண்டிப்பாக விரிவான தகவல்களை பெற போகிறோம்

"எவரேனும் ஒருவர் உண்மையிலேயே நெருங்கி அதற்கு நெருக்கமான சென்று விரிவான ராடார் சுயவிவரத்தை பெறும் வரை, நாங்கள் உறுதியாக கூற முடியாது," என்று இங்கிலாந்தில் நடைபெற்ற செல்டென்ஹாம் அறிவியல் திருவிழாவில் கலந்துகொண்டவர்களிடம் ஹோவ்ஸ் கூறினார்.


"அது மீண்டும் பூமிக்கு அருகில் திரும்பி வருவதற்கு நாம் சில வருடங்களுக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது மீண்டும் வந்துவிட்டால் நாம் கண்டிப்பாக விரிவான தகவல்களை பெற போகிறோம் என்பது அறிவியல் உலகின் மிக அற்புதமான சாதனை." என்கிறார்.

உங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்உங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்

 அப்போலோ 10

அப்போலோ 10

ஸ்னோபி அடுத்தமுறை பூமிக்கு மிக நெருக்கமான வர இன்னும் 18 ஆண்டுகள் ஆகும் என ஹோப்ஸ் கூறுகிறார். எப்படி சரிபார்க்க முடியும் மற்றும் கேப்சூலை மீட்டெடுக்க முடியும் என்று அவருக்கு சில யோசனைகள் உள்ளன.


"எலன் மஸ்க் மற்றும் அவரது அற்புதமான விண்கலத்துடன் சென்று ஸ்னோபி-யை பிடித்து பூமிக்கு கொண்டு வர விரும்புகிறேன் " என ஹோப்ஸ் அந்த மாநாட்டில் கூறினார்.


அப்போலோ 10 குழுவினரில் ஒருவரான உறுப்பினர் யூஜின் செர்னன் அதற்கு பதலளிக்கையில், ' நீங்கள் அதை கண்டுபிடித்து கீழே கொண்டுவந்துவிட்டால், ஸ்மித்சோனியன்-ல் எவ்வளவு பேர் வரிசையில் நிற்பார்கள் என கற்பனை செய்து பாருங்கள். " என்றார். ஆனால் இத்தகைய ஒரு முயற்சிக்காக செலவழிக்கும் நிதியை பற்றியும் வானியலாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மூன்று கேமராக்களுடன் எல்ஜி எக்ஸ்6 ஸமார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?மூன்று கேமராக்களுடன் எல்ஜி எக்ஸ்6 ஸமார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

Best Mobiles in India

English summary
A Long-Lost Apollo Capsule Adrift in Space May Have Been Found After 50 Years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X