Home
Scitech

அசாதாரண வெப்பக்காற்றால் ஆபத்தில் அண்டார்டிகா பனிப்பாறைகள்!

தற்போது லார்சன் சி முன்னெப்போதும் இல்லாத வகையில் உருகிவருவதால் இந்த மிகப்பெரிய பனிப்பாறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளை அகரவரிசைப்படி சூறையாடி வருகிறது என கூறும் விஞ்ஞானிகள், அண்டார்டிக்காவின் நான்காவது மிகப்பெரிய பனிப்பாறை அதன் அடுத்த இலக்காக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.

அசாதாரண வெப்பக்காற்றால் ஆபத்தில் அண்டார்டிகா பனிப்பாறைகள்!

1995 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் வடக்கு தீபகற்பத்தில் அமைந்துள்ள லார்சன் ஏ,மேற்பரப்பு உருகல் காரணமாக கரையத் தொடங்கியது.ரோட் தீவின் அளவுள்ள லார்சன் பி 2002 ஆம் ஆண்டு உருகத் துவங்கியது. தற்போது லார்சன் சி முன்னெப்போதும் இல்லாத வகையில் உருகிவருவதால் இந்த மிகப்பெரிய பனிப்பாறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 மேரிலாண்ட்

மேரிலாண்ட்

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு புதிய ஆய்வில்,போகென் காற்று என அழைக்கப்படும் அண்டார்டிக் தீபகற்பங்களின் மலைகளில் இருந்து வெளியாகும் உலர், வெப்ப காற்றோட்டங்களின் கடந்த மூன்று வருட போக்கு, இந்த அதிக உருகுதலுக்கு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடைகாலம்

கோடைகாலம்

"மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறுவதை போக்கு என கூறமுடியாது.ஆனால் மேம்பட்ட போகென் காற்று காரணமாக கோடைகாலம் மற்றும் ஆரம்பகட்ட இலையுதிர்காலத்தில் பனிக்கட்டி உருவதில் முக்கிய பங்குவகிப்பதை நாம் பார்ப்பது நிச்சயமாக அசாதாரணமானது" என்கிறார் இந்த புதிய ஆராய்ச்சியான் முன்னணி ஆசிரியரான ராஜ்ஶ்ரீ டிரி டத்தா.

போகென் காற்று பனிக்கட்டிகள் உருகுவதை தூண்டும்

போகென் காற்று பனிக்கட்டிகள் உருகுவதை தூண்டும்

தொடர்ந்து பல வருடங்களாக அதிகரித்து வரும் போகென் காற்று பனிக்கட்டிகள் உருகுவதை தூண்டும் அசாதாரண நிகழ்வை பார்த்துவருகிறோம். அதிலும் குறிப்பாக உருகும் பருவத்தில் மிகவும் தாமதமாக, காற்று வலுவாக இருக்கும் போது, வெப்பநிலை குறைந்து வருகிறது. இப்போது தான் உருகும் நிகழ்வு முடிவடைந்து, மேற்பரப்பில் பனிப்பொழிவு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

லார்சன் சி

லார்சன் சி

சுருக்கமாக கூறவேண்டுமானால், அந்த வெப்பக்காற்று குறிப்பாக லார்சன் சி-யை சேதப்படுத்துகிறது. ஏனெனில் அது பனி பள்ளத்தாக்குகளை புனல் போல பயன்படுத்தி அதன் வழியாக வருவதால், பனிக்கட்டி கட்டமைப்புகளின் அடிப்பகுதியையே கரையவைக்கிறது.

30 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக வெப்பநிலையை உயர்த்தும்

30 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக வெப்பநிலையை உயர்த்தும்

உருகுதல் துரிதமாக நடைபெறும்போது, பெர்ன் என அழைக்கப்படும் பனிக்கட்டியின் போரஸ் அடுக்கான, வெளிப்புற அடுக்குகளில் தண்ணீர் சேகரமாகி மீண்டும் கட்டியாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதன்காரணமாகவே லார்சான் ஏ மற்றும் லார்சான் பி ஆகியவை பெரும் பிளவை சந்தித்தநிலையில், இந்த போக்கு தொடர்ந்தால் என்ன விளைவுகள் வரக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளையை இது காண்பிக்கிறது.30 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக வெப்பநிலையை உயர்த்தும் திறன்கொண்ட வழக்கத்திற்கு மாறான சூடான காற்றால் லார்சென் சி தாக்கப்படுகின்றது என்று தெரிவிக்கும் விஞ்ஞானிகள், இதனால் கடல்மட்டம் உயராது என்கின்றனர்.இருப்பினும் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில் இதன் தாக்கம் அருகில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு மையமாக இருக்கலாம்.அதன் பின்னால் அமைந்துள்ள பனிப்பாறைகள் ஆதரவு இல்லாமல் இருந்தால், அவற்றின் உருகும் செயல்முறை வேகம் அதிகரித்து உலகளாவிய கடல் மட்டத்தை உயர்த்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Antarctic-shelf-shed-iceberg-size-DELAWARE-2017-risk-warm-winds: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X