13000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கிய வால்மீன் திரள்! ஆதாரமாய் விளங்கும் பழங்கால சிற்பம்..
துருக்கியில் உள்ள ஒரு கோவிலின் புகழ்பெற்ற பண்டைய சின்னங்களை ஆராய்ச்சியாளர்கள் மொழிபெயர்த்து, 13,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அழிவுகரமான வால்மீன் தாக்கத்தின் கதையை வெளிபடுத்தியுள்ளனர்.

கி.மு. 10,950 இல்
அந்த காலகட்டத்தில் இருந்த சூரிய குடும்பத்தை கணினி உருவகப்படுத்துதல்களின் உதவியுடன் இந்த நிகழ்வை குறுக்கு சோதனை செய்தபோது, கி.மு. 10,950 இல் ஏற்பட்ட ஒரு வால்மீன் தாக்கத்தை இந்த சிற்பங்கள் விவரிக்க முடியும் என்று 2017 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர். அதே காலகட்டத்தில் ஒரு சிறு பனியுகம் தொடங்கி நாகரிகத்தை எப்போதைக்கும் மாற்றியமைத்தது.

யங்கர் டர்யாஸ்
'யங்கர் டர்யாஸ்' என அறியப்படும் இந்த சிறு பனியுகம் சுமார் 1,000 ஆண்டுகள் நீடித்த நிலையில், இது மனிதகுலத்திற்கு ஒரு முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அந்த நேரத்தில் விவசாயமும் முதல் கற்கால நாகரிகங்களும் எழுந்தன மற்றும் புதிய குளிர்ந்த காலநிலைகளுக்கு முக்கய பங்குவகித்தன. மேலும் இந்த காலகட்டம் கம்பளி மம்மூத்தின் அழிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் யங்கர் டர்யாஸ் காலகட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், அந்தக் காலத்தைத் தூண்டியது எது என்பது தெளிவாக தெரியவில்லை. வால்மீன் தாக்குதல் முன்னணி கருதுகோள்களில் ஒன்றாக இருந்தாலும், விஞ்ஞானிகளால் அந்த காலகட்டத்தைச் சேர்ந்த வால்மீன் பாகங்களின் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வட அமெரிக்க கண்டம்
இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு, உலகின் மிகப் பழமையான கோயில் என்று நம்பப்படும் தெற்கு துருக்கியில் உள்ள கோபெக்லி டெப்-ல் உள்ள இந்த சிற்பங்கள், வால்மீன் தாக்குதல் தான் யங்கர் டர்யாஸ் காலகட்டத்தை தூண்டியது என்பதற்கான மேலதிக ஆதாரங்களை காண்பித்துள்ளது.
"இந்த ஆராய்ச்சி, வட அமெரிக்க கண்டம் முழுவதும் பரவலாக பிளாட்டினம் ஒழுங்கின்மையைக் கண்டறிந்ததோடு, யங்கர் டர்யாஸ் காலகட்டத்திற்கு வால்மீன் தாக்கம் காரணமானது என சாதகமாக இந்த வழக்கை குறிப்பிட்டுள்ளது" என்று முன்னணி ஆராய்ச்சியாளர் மார்ட்டின் ஸ்வெட்மேன் தெரிவித்துள்ளார்.

கோபெக்லி டெப்
"எங்களது பணி இந்த ஆதாரங்களை வலுப்படுத்த உதவுகிறது. இங்கே என்ன நடக்கிறது என்பது முன்னுதாரண மாற்றத்தின் செயல்முறை. " என தெரிவித்தார்.
இந்த கோவிலில் உள்ள சின்னங்களின் மொழிபெயர்ப்பு கோபெக்லி டெப்பே மற்றொரு கோவில் மட்டுமல்லாது, நீண்ட காலமாக கருதுவது போல இது ஒரு பழங்கால ஆய்வகமாகவும் இருந்திருக்கலாம் என காண்பிக்கிறது.
"கோபெக்லி டெப் மற்றவற்றுடன், இரவு வானத்தை கண்காணிப்பதற்கான ஒரு ஆய்வகமாக இருந்ததிருக்கலாம்.அதன் தூண்களில் ஒன்று இந்த அழிவுகரமான நிகழ்வின் நினைவுச்சின்னமாக செயல்பட்டதாகத் தெரிகிறது பனி யுகத்தின் முடிவிற்கு பிறகு வரலாற்றில் மிக மோசமான நாள்" என்று ஸ்வெட்மேன் பத்திரிகையாளர் சங்கத்திடம் தெரிவித்தார்.

கோபெக்லி டெப் கிமு 9,000 இல் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இது ஸ்டோன்ஹெஞ்சிற்கு சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகும். ஆனால் தூணில் உள்ள சின்னங்கள் இந்த நிகழ்வை அதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடுகின்றன.
இந்த சிற்பங்கள் கழுகு கல் என்று அழைக்கப்படும் ஒரு தூணில் காணப்பட்டன (கீழே உள்ள படம்) மற்றும் வெவ்வேறு விலங்குகளை கல்லைச் சுற்றி குறிப்பிட்ட நிலைகளில் காண்பிக்கின்றது.
இந்த சின்னங்கள் நீண்டகாலமாக விஞ்ஞானிகளைக் குழப்பிக்கொண்டிருந்த நிலையில், ஸ்வெட்மேனும் அவரது பொறியியலாளர்கள் குழுவும் உண்மையில் வானியல் விண்மீன்களுடன் ஒத்திருப்பதையும், பூமியைத் தாக்கும் வால்மீன் துண்டுகளின் திரள் ஒன்றை குறிப்பிடுவதையும் கண்டுபிடித்தனர்.

கிமு 10,890 இல்
கல்லில் தலையில்லாத ஒரு மனிதனின் உருவம், மனித இன பேரழிவு மற்றும் தாக்கத்தைத் தொடர்ந்து விரிவான உயிர் இழப்பு ஆகியவற்றைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சிற்பங்களின் காலக்கட்டம் கிரீன்லாந்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பனிக்கட்டியுடன் பொருந்துகிறது. இது கிமு 10,890 இல் தொடங்கிய யங்கர் டர்யாஸ் காலத்தை சுட்டிக்காட்டுகிறது.

இதுவே முதல் முறை அல்ல
ஸ்வெட்மேனின் கூற்றுப்படி பண்டைய தொல்லியல் படிமங்கள், நாகரிகத்தின் கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவை வழங்குவது இதுவே முதல் முறை அல்ல என குறிப்பிடுகிறார்.
News Source:mysterioussignal.com


Click it and Unblock the Notifications