மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.!

  அணு ஆயுதங்கள், விமானம், தனி மனிதனாக பறக்கும் சாதனம், பிரம்மா அஸ்திரம் (உருதெரியாமல் அழிக்கும்) போன்றவை இந்தியாவில் இருந்துள்ளன. அணு ஆயுதங்கள் முதல் பிரம்மா அஸ்திரம் வரை மகாபாரதம், ராமாயணம் போரில் பயன்படுத்தபட்டு இருக்கின்றன.

  பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது - நாசா தகவல்!

  மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு.!

  நம் முன்னோர்கள் பயன்படுத்திய தொழில் நுட்பத்தையே நாம் அறியாமல் ராமாயணமாவது, மகாபாரதமாவது எல்லாம் கட்டுக்கதை என்று கூறி வந்த நிலையில், தற்போது, ஆங்கிலேயேர்களே இந்தியாவில் அணு ஆயுத பயன்பாடு மகாபாரத ராமாயண காலத்தில் இருந்துள்ளது என்று நிருபித்துள்ளனர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இந்திய-நேபாள சமஸ்கிருத மாநாடு:

  இந்தியாவில் அணு ஆயுதங்கள், விமானம், பிரமா அஸ்திரம் போன்றவை புராண காலத்திலேயே பயன்படுத்தப்பட்டதாக, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இந்தியா-நோபாள சமஸ்கிருத மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதை ஐதராபத்தை சேர்ந்த என்ஐசியின் மூத்த விஞ்ஞானியுமான சிஎஸ்ஆர் பிரபு தெரிவித்தார்.
  மேலும் அவர் பேசும்போது, மகாபாரத காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் இடைப்பட்ட காலத்தில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

  நேபாள ராயல் நூலம்:

  விஞ்ஞான மற்றும் வானியல் தொழில் நுட்பத்தில் மூத்த அறிஞரான நாரயண சாஸ்தி அவர் எழுதிய நூலிருந்து, விண்கலம், அரை-கடத்திகள், உலோக கலவைகள், மேம்பட்ட உலோக கலவை, பிற நிமிட வானூர்தி தகவலலை உருவாக்குதல், கற்பனை செய்தல் வடிவமைத்தல், ஆகிய தொழில் நுட்ப விவரங்களை கொண்டுள்ளது. இந்த நூல் 1876 ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை எழுத்தப்பட்டுள்ளது. இந்த நூலிருந்தே உண்மைகள் தெரியவந்தன. மேலும் இந்த நூல் நகல் நோபாள ராயல் நூலகத்திலும் இருக்கின்றது என்று கூறினார்.

  அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இல்லை:

  இந்தியாவில் இருந்த தொழில்நுட்பங்கள் ஒன்று கூட அன்றைய கால கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இல்லை எனவும் விஞ்ஞானி சிஆர்எஸ் பிரபு தெரிவித்தார். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் கடினமாக இருந்துள்ளது.

  30 விநாடியில் விண்கலம்:

  சாஸ்திரி எழுதிய நூல்களின் படி இந்தியாவில் பயன்படுத்த தொழில் நுட்பம் என்பது நிமிடங்கள் துல்லியமானவை, தெளிவானவை. இந்த விண்கல தொழில் நுட்பம் 30 பயன்படுத்தப்பட்டது என்றும் பிரபு கூறினார்.

  மகாபாரத போரின் கிருஷ்ணர் கையில்:

  மகாபாரத போரின் போது, கிருஷ்ணர் சக்கரத்துடன் பறந்து செல்லும் போல் காட்சி இருக்கும் இதை சக்கரம் என்று தான் அனைவரும் நினைத்து வந்தனர். தற்போது தான் தெரிந்தது. அது சக்கரம் இல்லை காற்றை சூழவிட்டு பறந்து செல்லும் ஆயுதம். இதில் இருந்து தான் இன்றைய ஹெலிகாப்படர்கள் வந்துள்ளன.

  திப்புசுல்தான்:

  ராஜஸ்தானில் சில கோட்டை சுவார்களில், முகலாயப் போரின் போது, திப்புசுல்தானும் ராக்கெட் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் விதமாக சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அலாய் (தமோகார்பா லோஹா ) என்ற விண்கலம் கண்ணுக்கு தெரியாமல் சிறியதாகி விடும் விண்கலமும் இருந்துள்ளது. இது புகைப்படம் ரசாயன புகை வரும் போல் மறைந்து விடும் கூறியுள்ளார்.

  கிருஷ்ண சியேசா:

  கிருஷ்ண சியேசா என்னும் மெட்டலை ஐதராபத்தில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும் போது அது 78 சதவீதம் சேலர் ஒளியினை உறிஞ்சுவதாக பிரபு கண்டுபிடித்தார். மேலும் எந்த ஒளி கதிர்கள் இருந்தாலும், கண்ணுக்கு தெரியாத ஒரு தொழில் இருந்துள்ளது. தாமிரம், துத்தநாகம் மற்றும் ஒரு அலாய் பயன்பாடு இருந்துள்ளது.

  ராமாயணம்:

  ராமாயண கதையில் ராவணன் சீதையை தூக்கி செல்லவும் விமானத்தை பயன்படுத்தியுள்ளான். அதேபோல் விமானம் பிறர் கண்ணுக்கு தெரியாத தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போர்களத்தில் ராமர்-லட்சுமணனோடு போரிடுவான் ராவணன்.

  மொகஞ்சதாரோ:

  மொகஞ்சதாரோ மற்றும் ஹராப்பா ஆகிய நகர்களின் மீதும் அணு குண்டு வீசியதால் தரைமட்டமாகி அழிந்து போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஆதாரங்களும் தற்போது கிடைத்து வருகின்றது. வெளிநாடுகளை சேர்ந்த ஆய்வாளர்களின் ஆராய்ச்சியின்படி தெரியவந்துள்ளது.

  உலகத்திற்கே முன்னோடி நம் இந்தியர்கள் தான் - அடித்துக்கூறும் ஆதாரங்கள்!

  எந்த வரலாற்று புத்தகத்தை எடுத்தாலும் அதில் ஒரு அமெரிக்க பெயரை காண முடியும். இதையெல்லாம் யார் யார் கண்டுப்பிடித்தார்கள் என்று கூகுள் செய்தால் அங்கும் அமெரிக்க பெயர்களே வெளிப்படுகின்றது. அப்போது இந்தியர்கள் ஒன்றுமே கண்டுபிடிக்கவில்லையா.? நமது முன்னோர்கள் அனைவருமே திறனற்றவர்களா.? - கிடையவே கிடையாது.!

  எல்லாவற்றிற்கும், அனைவர்க்கும் ஆதிப்புள்ளியாக திகழ்ந்தது நமது இந்தியர்கள் தான். ஆம், கர்வமாக கூறலாம் - இந்த உலகத்திற்கே முன்னோடி நம் இந்தியர்கள் தான் அதை அடித்துக்கூறும் 6 ஆதாரங்கள் இதோ.!

  பாபிலோனியர்களோ, மாயன்களோ அல்ல.!

  கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பூஜ்யம் (0) என்ற எண் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றால் எண் அமைப்பு (Number System) என்னவாகி இருக்கும்..? அப்படியான பூஜ்யத்தை கண்டுப்பிடித்தது பாபிலோனியர்கள் , மாயன்கள் (மற்றும் இந்தியர்கள்) என்று கூறப்பட்டாலும், இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.

  புரட்சிமிக்க புத்தி ஜீவிகள்.!

  பெரும்பாலும் எந்த கல்வெட்டிலும், எந்தவொரு வரலாற்று பக்கத்தில் பொறிக்கப்படாமலும், வாழ்ந்து கடந்த சில புத்தி ஜீவிகளால் தான் இன்றைய உலகம் ஒரு மிகச்சிறந்த இடத்தில் நிலைத்திருக்கிறது. அதற்கு சில முக்கியமான இந்திய கண்டுப்பிடிப்புகளும் மூலக்காரணமாக இருக்கின்றன என்பது தான் நிதர்சனம். அவைகளில் உலகளவில் புரட்சிகளை ஏற்படுத்திய "நம்பமுடியாத" 7 கண்டுபிடிப்புகளை இந்தியர்கள் தான் நிகழ்த்தியுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா.? அறிந்தபின்னர் ஒரு இந்தியர் என்ற உங்களின் கர்வம் இரட்டிப்பாகும்.!

  பை மதிப்பு (Pi Value)

  பை (கணித மாறிலி) என்பது கணிதத்துறையில் எவ்வளவு முக்கியமான மற்றும் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்றாகும். அந்த 'பை'யின் மதிப்பான 3.14159 என்பதை முதன்முதலில் கண்டுபிடிதத்த்து இந்தியர்களே என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.

  இரும எண்கள் (Binary Number system)

  பை மதிப்பு மட்டுமின்றி எந்தவொரு இரும எண் முறைமையை கண்டுபிடித்ததும் இந்தியர்களே.
  ஆதிகால கணிதம் மற்றும் தற்கால டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் முதல் 0 (பூஜ்யம்) மற்றும் 1 (ஒன்று) என்ற இரண்டு வெவ்வேறு குறியீடுகளை பயன்படுத்தி தான் எண் மதிப்புகளை பிரதிபலிக்கிறறோம்.

  கணிதப்பகுதிகளின் சொற்களஞ்சியம் (Glossary of areas of mathematics)

  தி கான்செப்ட்ஸ் ஆப் ட்ரிக்னோமென்டரி, அல்ஜீப்ரா, ஜியாமென்ட்ரி அண்ட் கால்குலஸ் (The concepts of trigonometry, algebra, geometry, and calculus) போன்ற கணிதப்பகுதிகளின் சொற்களஞ்சியமென கருதப்படும் கோணவியல், அல்ஜிப்ரா, வடிவியல், கால்குலஸ் ஆகியவைகளை கண்டுப்பிடித்ததும் இந்தியர்கள் தான்.

  தி நம்பர் சிஸ்டம் (The Number System)

  சுமேரியர்கள் தான், உலகின் முதல் "எண்ணும்" அமைப்புபை உருவாக்கியவர்கள். அவர்களிடமிருந்து தான் பாபிலோனியர்கள் எண் அமைப்பை உருவாக்கினர் என்று கூறப்பட்டாலும், மேற்க்கூறியபடி இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள். எண்கள் இல்லையேல் கணிதம் மட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை என எதுவுமே இவ்வளவு சிறப்பாக உருவாகியிருக்காது என்பதை சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.!

  போனஸ் 01 : கம்பியில்லா தகவல்தொடர்பு (Wireless communication)

  சர் ஜெகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadeesh Chandra Bose) - நாம் அனைவரும் மறந்து போன வர்லெஸ் கம்யூனிகேஷனின் தந்தை. கம்பியில்லா தகவல்தொடர்புதனை கண்டுப்பிடித்தவர், அதாவது தற்கால அதிநவீன வைஃபை வசத்திக்கு பிள்ளையார் சுழி போட்டது இவர்தான்.

  போனஸ் 02 : தக்ஷீலா பல்கலைகழகம் (Takshila University)

  நம்பினால் நம்புங்கள், பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமான இதுதான் உலகின் முதல் பல்கலைகழகமாகும். கணிதம் சார்ந்த விடயங்களில் மட்டுமின்றி கல்வியிலும் முதன்மையானோர் இந்தியர்கள் தான். மூத்த பல்கலைகழகத்தை கட்டியமைத்த நாம், பள்ளிக்கூடங்களை எப்போது கட்டமைத்திருப்போம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.!

  போனஸ் 03 : யூஎஸ்பி டிரைவ் (USB Drive)

  யூஎஸ்பி டிரைவ்தனை கண்டுப்பிடித்தவர் அஜய் பட் (Ajay Bhat) ஆவார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Ancient India had spacecraft technology : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more