110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த பறவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த பண்டைய பறவையின் படிமம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

|

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த பண்டைய பறவையின் படிமம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனன்தியொர்னிதீஸ்(Enantiornithes) என்ற இனத்தைச் சேர்ந்த பறவை வகை இது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 டைனோசர்களுடன் உயிர் வாழ்ந்த பறவை இனம்

டைனோசர்களுடன் உயிர் வாழ்ந்த பறவை இனம்

கிரெடிசஸ் காலத்தில் டைனோசர்களுடன் உயிர் வாழ்ந்த பறவை இனம் இது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்துள்ள இந்த பறவையின் படிமம் அதன் கரு முட்டையுடன் சேர்த்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 110 மில்லியன் ஆண்டு பறவை

சீனாவில் 110 மில்லியன் ஆண்டு பறவை

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த பறவையின் உடலில் உள்ள முட்டையிடப்பட்ட முதல் பறவையின் படிமம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பறவையின் படிமம் சீனாவில் உள்ள வட மேற்கு பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவிமாயிய ஸ்விவீட்ஸேரே

அவிமாயிய ஸ்விவீட்ஸேரே

அவிமாயிய ஸ்விவீட்ஸேரே(Avimaia schweitzerae) என்ற 110 ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த பறவை இனத்தைச் சார்ந்ததாக இருக்குமென்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சோகமான உண்மை

சோகமான உண்மை

அதுமட்டுமின்றி ஆராய்ச்சியாளர்கள் ஒரு சோகமான உண்மையையும் கண்டுபிடித்துள்ளனர், இந்த தாய் பறவை இறந்ததற்கான காரணம் அதன் முட்டையாக இருக்கக் கூடும் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கருமுட்டை ஆராய்ச்சி

கருமுட்டை ஆராய்ச்சி

வெர்ட்பிரேட் பாலேண்டாலஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் வெர்ட்பிரேட்டட் பாலேண்டாலஜி மற்றும் பாலேவோன்ட்ரோபாலஜியின் (IVPP) ஆராய்ச்சியாளர்கள் இந்த பறவையின் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட பறவையின் படிமத்தை ஆராய்ந்து பார்த்ததில் பறவையின் வயிற்றில் கருமுட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோஸ்கோப் விபரம்

மைக்ரோஸ்கோப் விபரம்

பறைவியின் வயிற்றில் உள்ள முட்டை வெறும் கண்களில் தெரியவில்லை, ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோஸ்கோப்பின் கீழ் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பறவையின் படிமத்தில் உள்ள முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலமைப்பு

உடலமைப்பு

இந்த பெண் பறவையின் இனப்பெருக்க முறை மற்றும் உறுப்புகள் அனைத்தும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உயிர் வாழும் பறவைகளின் உடலமைப்பு போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரியவந்துள்ளது.

சாதாரண முட்டை போல் இல்லாமல்

சாதாரண முட்டை போல் இல்லாமல்

பறவையின் முட்டை சாதாரண ஆரோக்கியமான பறவை முட்டைகள் போன்று இல்லாமல் இரண்டு அடுக்குகளை கொண்டுள்ளதாகவும், கருமுட்டை வயிறு உள்ளே மிக நீண்ட காலம் தக்கவைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஏராளமான தகவல்

இன்னும் ஏராளமான தகவல்

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த பறவையின் படிமத்தில் இன்னும் பல சுவாரசிய தகவல்கள் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Ancient bird that died 110-million-years-ago is found perfectly preserved with an egg inside its body : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X