பூச்சி போன்ற பொருளால் மூடப்பட்ட செவ்வாய் கிரகம்!

|

செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர் வாழ்வின் சான்றுகளைத் தேடுவது, புதைபடிவமாக இருந்தாலும் சரி உயிருடன் இருப்பவையாக இருந்தாலும் சரி, அது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் இது எதிர்கால செவ்வாய் கிரகத்தின் திட்டப்பணி அறிக்கைகளில் கூட சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு விஞ்ஞானியின் கூற்றுப்படி, நாம் ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் உயிரினத்தை கண்டுபிடித்திருந்தாலும், அது நுண்ணுயிர் நுண்ணுயிரிகள் அல்ல பெரிய பூச்சிகள் என்கிறார்.

ஓஹியோ

ஓஹியோ

ஓஹியோ பல்கலைக்கழகத்தின் பூச்சியியல்துறை வல்லுநரான வில்லியம் ரோமோசர், செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் ரோவரால் எடுக்கப்பட்டு பகிரங்கமாக வெளியிடப்பட்ட புகைப்படங்களைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ந்து, அவற்றில் பல பூச்சிகளைப் போன்ற தோற்றமளிக்கும் கட்டமைப்புகள், பாறைகளுக்கு மத்தியில் புதைபடிவமாகவும்,உயிருடனும் இருப்பதாக கூறியுள்ளார்.

செயிண்ட் லூயிஸி

மேலும் அவர் பாம்புகளைப் போல தோற்றமளிக்கும் சில விஷயங்களைக் கூட கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து மேலும் ஆராய இந்த ஆதாரங்கள் வலுவானதாக உள்ளன என்று அவர் கூறுகிறார். செயிண்ட் லூயிஸில் நடந்த பூச்சியியல் சங்கத்தின் அமெரிக்காவின் வருடாந்திர கூட்டத்தில் அவர் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.

இனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்இனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்

செவ்வாயின் பூச்சிகள்

"செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்துள்ளன. இன்னும் உள்ளன. செவ்வாயின் பூச்சிகள் போன்ற விலங்கினங்களிடையே வெளிப்படையான பன்முகத்தன்மை உள்ளது. அவை டெர்ரான் பூச்சிகளைப் போன்ற பல அம்சங்களில் மேம்பட்ட குழுக்களாக விளக்குகின்றன. எடுத்துக்காட்டாக, இறக்கைகள், இறக்கை நெகிழ்வு, சுறுசுறுப்பாக பறத்தல் மற்றும் பல்வேறாக கட்டமைக்கப்பட்ட கால் கூறுகள் போன்றவை உள்ளன"என்று ரோமோசர் கூறுகிறார்.

 பெரிய மணல் புயலின் காரணமாக

கடந்த ஆண்டு ஒரு பெரிய மணல் புயலின் காரணமாக கிரியாசிட்டி செயலிழந்த பின்னர் செயல்பாட்டில் உள்ள ஒரே ரோவரான கியூரியாசிட்டி உள்ளிட்ட செவ்வாய் ரோவர்களில் இருந்து கிடைத்த புகைப்படங்கள் பகிரங்கமாக வெளியிடப்படுகிறது. மேலும் அவை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பற்றிய விரிவான காட்சிகளைக் காட்டுகின்றன. புவியியலாளர்கள் கிரகத்தின் புவியியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள இவற்றை ஆராயலாம்.

ஒவ்வொரு புகைப்படத்தையும் கவனமாக காட்சி பரிசோதனை செய்துள்ளார்

இந்த புகைப்படங்களில் தான் ரோமோசர் தனது பூச்சிகளை கண்டறிந்துள்ளார். இவற்றில் பல புகைப்படங்கள் பூச்சிகளின் ஆதாரங்களைக் காட்டுகின்றன. கார்பேஸ்கள், கால்கள், இறக்கைகள், ஆண்டெனாக்கள் மற்றும் பிரிக்கப்பட்ட உடல்கள் ஆகியவை சுற்றியுள்ள ரெகோலித்திலிருந்து வேறுபடுகின்றன.


பூச்சிகளுக்கு மிகவும் ஒத்த வடிவங்களைக் காண்பிற்பவற்றை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு புகைப்படத்தையும் கவனமாக காட்சி பரிசோதனை செய்துள்ளார். சுற்றியுள்ள பாறை, தெளிவு மற்றும் சமச்சீர்மை, பிரிவு, எலும்பு எச்சங்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களின் குழுக்கள் ஆகியவற்றிலிருந்து வியத்தகு வேறுபாடு ஆகியவை அளவுகோல்களில் அடங்கும்.

தெளிவான படம்

அவர் சில போஸ்கள், இயக்கம் அல்லது பறக்கும் சான்றுகள், பிற வடிவங்களுடன் வெளிப்படையான தொடர்பு மற்றும் பளபளப்பான கண்கள் ஆகியவற்றை பூச்சி அல்லது பாம்பு உயிருடன் இருக்கக்கூடும் என்பதற்கான சான்றாக எடுத்துக்கொண்டார்.


"இவற்றின் தெளிவான படம் அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்டவுடன் தான், மற்ற தெளிவற்ற, ஆனால் செல்லுபடியாகக்கூடிய அதே அடிப்படை வடிவத்தின் படங்களை அங்கீகரிப்பதில் பயனுள்ளதாக இருந்தது" என்று ரோமோசர் கூறுகிறார்.

பாறைகளாக கூட இருக்கலாம்

பாறைகளாக கூட இருக்கலாம்

இருப்பினும் இதில் மற்றொரு வாய்ப்பு உள்ளது. ரோமோசரால் பூச்சிகள் என அடையாளம் காணப்பட்ட விஷயங்கள் வெறும் பாறைகளாக கூட இருக்கலாம்.

news source:sciencealert.com

Best Mobiles in India

English summary
An Entomologist Claims That Mars Is Covered in Bug-Shaped Things, And He Has 'Proof : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X