வெளிப்பட்டது கிரீன்லாந்திற்குள் புதைந்திருந்த மர்மம்; கிளம்புகிறது பீதி!

கடந்த 2015 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் கிரீன்லாந்து கண்டத்தில், ஆயிரக்கணக்கான பனிக்கட்டிகளின் பனிப்பகுதி மூலம் மறைக்கப்பட்டுள்ள ஒரு பாறைப்பகுதியின் புதிய வரைபடத்தை உருவாக்கினர்.

|

கடந்த 2015 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் கிரீன்லாந்து கண்டத்தில், ஆயிரக்கணக்கான பனிக்கட்டிகளின் பனிப்பகுதி மூலம் மறைக்கப்பட்டுள்ள ஒரு பாறைப்பகுதியின் புதிய வரைபடத்தை உருவாக்கினர். உருவான வரைபடத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு செய்தபோது, ​​அவர்களின் கண்களில், சுமார் 16 மைல் அகலம் கொண்ட கிண்ணம் போன்ற ஒரு பகுதி சிக்கியது. பார்த்த உடனேயே அது ஒரு பெரிய சிறுகோள் தாக்கமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் கிளம்பியது.

வெளிப்பட்டது கிரீன்லாந்திற்குள் புதைந்திருந்த மர்மம்;கிளம்புகிறது பீதி

இது உண்மையாகும் என்கிற பட்சத்தில், பூமியின் 25 மிகப்பெரிய விண்கல் மோதலில் இதுவும் ஒன்றாகும் என்பதால், விஞ்ஞானிகள் இதில் உள்ள உறுதித்தன்மையை ஆராய விரும்பினார்கள், அதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் - அடுத்த மூன்று ஆண்டுகள். பல ஆதாரங்களை திரட்டிய அந்த ஆய்வுக்குழு, கடந்த புதனன்று ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கண்டுபிடிப்பும் அதன் பின்னால் இருக்கும் ஆபத்தும்!

கண்டுபிடிப்பும் அதன் பின்னால் இருக்கும் ஆபத்தும்!

அதில், "சுமார் 12,000 முதல் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கிரீன்லாந்திற்குள், அரை-மைல் அகலம் உள்ள ஒரு இரும்பு சிறுகோள் மோதலை நிகழ்த்தி உள்ளது. அதன் விளைவாக உருவானதே இந்த பள்ளம்" என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடன் இதை ஒரு அரிய கண்டுபிடிப்பாக மட்டும் பார்க்க கூடாது, இதற்கு பின்னால் உள்ள ஆபத்துகளையும் பாக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது. அப்படி என்ன ஆபத்து?

முழு பாரிஸ் நகரத்தையும் வைக்கலாம்!

முழு பாரிஸ் நகரத்தையும் வைக்கலாம்!

கற்படுகை வரைபடங்களின்படி, இந்த விண்கல் மோதல் ஆனது சுமார் 16 மைல்கள் அளவிலான பள்ளத்தை உருவாக்கி உள்ளது. இது சுமார் 3,000 அடி அளவிலான பனிப்பொழிவிற்கு கீழ உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கிண்ணம் போன்ற வடிவத்தில் உள்ள இந்த பள்ளத்தில் முழு பாரிஸ் நகரத்தையும் வைக்கலாம். அந்த அளவு பெரிய பள்ளம்.

இரும்பு விண்கல்!

இரும்பு விண்கல்!

டென்மார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கர்ட் கஜர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவானது, இதை ஹைவட்டா தாக்கக் குழல் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த பள்ளமானது ஹைவட்டா பனிப்பாறையில் காணப்பட்டுள்ளது. கஜர் மற்றும் அவரது சக ஊழியர்கள், இந்த விண்கல் பள்ளத்தை "சற்று சிறப்பானது" என்று கூறுகிறார்கள். முன்னதாக ஹயாவாடா பனிப்பாறைக்கு அருகே ஒரு 22-டன் அளவிலான இரும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டடது. ஆக, கீரின்லாந்தை இரும்பு விண்கல் ஒன்று தாக்கி இருந்ததை இவர்கள் முன்னரே அறிந்து இருந்தார்கள். அந்த துண்டுகள், கோபன்ஹேகனில் உள்ள ஜியாலஜிஸ்க் அருங்காட்சியகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளிம்பில் மணல்!

விளிம்பில் மணல்!

ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த ஒரு விண்கல் மோதலின் விளைவாக உருவானது தான் இந்த பள்ளம் என்று எங்களால் வரையறுக்க முடியவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் எங்களிடம் அவ்வளவு ஆதாரங்கள் இல்லை" என்கிறார் ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தில் புவியியலாளர் மற்றும் ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர் ஆன நிகோலஜ் லார்ஸன். பின்னர் ஆகாய மார்கமாக நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மேலதிக விபரங்கள் சேகரிக்கப் பட்டது. பள்ளம் உருவாகி கிடக்கும் பனிக்கட்டியின் விளிம்பில் மணல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மெதுவாக நகரும் கற்படுகையின் துகள்களாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட பகுதியின் வரைபடம்!

மறைக்கப்பட்ட பகுதியின் வரைபடம்!

கிரீன்லாந்தின் பெரும்பகுதி ஒரு பனிப்பகுதியில் மூழ்கியுள்ளது, இது சுமார் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு பருவ நிலையாகும். சில இடங்களில் உள்ள பனியானது கிட்டத்தட்ட 2 மைல்கள் அளவிலான அடர்த்தியை கொண்டுள்ளது. அது அந்த கண்டத்தின் - கிட்டத்தட்ட - அனைத்து பாறைப்பகுதியைமே மறைத்துவிட்டது. இருந்தாலும் கூட, நவீன கால தொழில்நுட்பங்களான, செயற்கைக்கோள் அளவீடுகள் மற்றும் பனி ஊடுருவும் ரேடார் ஆய்வுகள் மூலம் கிரீன்லாந்தின் மறைக்கப்பட்ட பகுதியின் வரைபடம் உருவாக்கம் பெற்றுள்ளது.

0.6 மைல் அகலம்!

0.6 மைல் அகலம்!

இப்படியாக தான் இந்த கண்டத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள விண்கல் தாக்கியா தளம் கண்டறியப்பட்டது என்கிறது ஆராய்ச்சி குழு. ஓரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மணல் துகள்களை வைத்து, தாக்கிய விண்கல்லின் சில அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தைத் தாக்கிய பாறை ஆனது சுமார் 0.6 மைல் அகலம் மற்றும் கிட்டத்தட்ட முழுமையாக இரும்புச் சாம்பல் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 5 பில்லியன் டன்கள் என்கிற எடையை கொண்டு இருந்திருக்கலாம் என்று அர்த்தம்.

கசப்பான உண்மை!

கசப்பான உண்மை!

விண்வெளி பாறைகள் ஆனது இந்த நொடி வரையிலாக பூமிக்கு இருக்கும் ஒரு மாபெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இதன் விளைவாகவே, நாசாவும் மற்ற விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திரக் கோள்களை ஆய்வு செய்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான வல்லுநர்களின் கருத்துப்படி, இத்தகைய ஆபத்துக்களை கண்டுபிடிப்பதற்கு போதுமான தொழில்நுட்பம் இல்லை. இந்த நிலைப்பாட்டில், கிரீன்லாந்தில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விண்கல் மோதல் நிகழ்த்து உள்ளது என்கிற கண்டுபிடிப்பானது, பூமியின் அழிவு மீதான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய தொலைநோக்கிகள், நியோகேம் (NEOCAM - பூமியின் அருகில் உள்ள கேமரா) போன்றவைகளால், ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய 90 சதவீத வின்மீன்களை மட்டுமே கண்டறிய முடியும். அதற்கு மேலான விண்கற்களை ]கண்டுபிடிக்கும் திறன் இந்த கருவிகளுக்கு கிடையாது என்பதே கசப்பான உண்மை!

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!

வேற்றுகிரக வாசம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது சகஜம் என்றாகிவிட்டது. பெரும்பாலும் இவை அதிகாரப்பூர்வ தகவலாக இருப்பதில்லை என்பதால் இது குறித்து யாரும் அதிகம் கவலை கொண்டதில்லை.

எனினும் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மை என்பதை விளக்கும் சான்றுகளை பலமுறை வெளியிட்டு இருக்கின்றனர். இன்றும் பல்வேறு காரணங்களால் இவை குறித்த தகவல் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.

தகவல்

தகவல்

நிலைமை இப்படி இருக்க வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றனர் என்ற வாக்கில் பல நாசா ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாசா

நாசா

பல்வேறு நாசா ஊழியர்களும் ஏலியன் இருப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து வரும் நிலையில் நாசா அதிகாரப்பூர்வமாக இத்தகவலை உறுதி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நாசாவின் தலைமை ஆராய்ச்சியாளர் எல்லென் ஸ்டோஃபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல்

தகவல்

ஏலியன் இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடப்படலாம் என வேற்றுகிரக வாசம் சார்ந்த சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உண்மை

உண்மை

இதனிடையே ஸ்டோஃபன் அறிக்கையானது ஏலியன் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரம்

நேரம்

நம் வாழ்நாள் நிறைவடையும் முன் நமது பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசம் இருப்பதை புரிந்து கொள்வோம் என ஸ்டோஃபன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகவல் ஆனது பூமியை தவிர மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசம் இருப்பது நிச்சயம் உண்மை என்பதில் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதை உணர்த்துவதாகவே இருக்கின்றது.

வீரர்

வீரர்

அப்போலோ 14 திட்டத்தின் மூலம் விண்வெளி சென்ற வீரர் தன் பேட்டியில் ஏலியன் இருப்பது உண்மை என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதோடு வேற்றுகரக வாசிகள் இருப்பது குறித்த தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளதோடு, அரசாங்கம் மற்றும் நாசா இணைந்து ஏலியன் இருப்பதை மறைக்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகின்றது.

முன்னதாக 2011 ஆம் ஆண்டில் நாசா அதிகாரியான சார்லஸ் போல்டன் ஏலியன் இருப்பதை தான் நம்புவதாகவும், ஆனால் இதற்கு தன்னிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

கருத்து

கருத்து

இது குறித்து டாக்டர் மிட்செல் கூறியதாவது, 'உலகில் ஏலியன் இருப்பதை மறைக்க நாசா எது வேண்டுமானாலும் செய்யும்' என தெரிவித்திருந்தார்.

கென் ஜான்ஸ்டன்

கென் ஜான்ஸ்டன்

கென் ஜான்ஸ்டனும் ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ இருப்பது குறித்த தகவல்களை வெளியிட்டார்.

ஆதாரம்

ஆதாரம்

தகவல்களை மட்டும் வெளியிட்ட கென் ஆதாரங்களை வெளியிட மாட்டேன் என கூறினார், இத்தகவல் வெளியானதும் அவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

விண்வெளி மையம்

விண்வெளி மையம்

சர்வதேச விண்வெளி மையத்தின் நேரலை கேமராவில் இருந்து, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெரிவது பலமுறை மறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சில வினாடிகள் காணப்பட்டது, எனினும் இதுவும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.

யுஎஃப்ஒ

யுஎஃப்ஒ

சர்வதேச விண்வெளி மையம் இல்லாமல் உலகின் பல பகுதிகளில் யுஎஃப்ஒ காணப்பட்டது பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இது குறித்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
An asteroid crater the size of Paris is hiding in Greenland: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X