Home
Scitech

எப்படி இருந்தா நா இப்படி ஆகிட்டேன்: கதை அல்ல உண்மை.!

முழு முக மாற்று அறுவை சிகிச்சை மூலம் முகம் கிடைத்த 21 வயது கேட்டி ஸ்டப்பில்பீல்ட் என்கிற அமெரிக்காவைச் சேர்த்த பெண்மணி தற்பொழுது வெளி உலகிற்குத் தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

By Sharath

முழு முக மாற்று அறுவை சிகிச்சை மூலம் முகம் கிடைத்த 21 வயது கேட்டி ஸ்டப்பில்பீல்ட் என்கிற அமெரிக்காவைச் சேர்த்த பெண்மணி தற்பொழுது வெளி உலகிற்குத் தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

கேட்டி ஸ்டப்பில்பீல்ட் 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சித்து தனது முகத்தை இழந்துவிட்டார். இப்பொழுது 3 வருடங்களுக்குப் பிறகு முக மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் புதிய முகம் கிடைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் கேட்டி. உலகத்தில் மிகக் குறித்த வயதில் முக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்மணியாக வரலாற்றில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

31 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை

31 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை

கேட்டி க்கு 31 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை சென்ற வருடம் நடைபெற்றது. உலகின் தலை சிறந்த மருத்துவர் குழு இந்த முக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. ஆனால் தற்பொழுது தான் கேட்டி தன்னையும் தன் புதிய முகத்தையும் வெளி உலகிற்குக் காட்ட துவங்கியுள்ளார்.

முகத்தை இழந்து காப்பாற்றப்பட்டார்

முகத்தை இழந்து காப்பாற்றப்பட்டார்

மார்ச் மாதம் 2014 இல், அதிக மனஉளைச்சலுக்கு ஆளான கேட்டி மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் அண்ணனின் காலிபர் 308 ரகத் துப்பாக்கியை தனது நாடிக்கு அடியில் வைத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார். அதன் விளைவாக அவரின் மூக்கு, வாய், தாடை, நெற்றி பற்கள் ஆகியவற்றுடன் முகத்தை இழந்து, அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டார்.

உருக்குலைந்த முகத்துடன் 3 வருடங்கள்

உருக்குலைந்த முகத்துடன் 3 வருடங்கள்

முக மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் உருக்குலைந்த முகத்துடன் 3 வருடங்களாக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார். சென்ற ஆண்டு 2017 இல், அவருக்கான பொருத்தமுடைய முகம் 31 வயது ஆண்ட்ரியா ஸ்னைடர் மூலம் கிடைத்துள்ளது. ஆண்ட்ரியா ஸ்னைடர் தனது உறுப்புகளை தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

100%  கேட்டி ஸ்டப்பில்பீல்ட்

100% கேட்டி ஸ்டப்பில்பீல்ட்

இதன் மூலம் கேட்டி ஸ்டப்பில்பீல்ட்-க்கு, ஆண்ட்ரியா ஸ்னைடர் இன் உச்சந்தலை, நெற்றி, மூக்கு, கண் இமைகள், கன்னம், தாடை மற்றும் பற்கள் என அவருடைய மொத்த முகமும் கேட்டி இன் முகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் தற்பொழுது 100% கேட்டி இன் முகசெல்கள் குணமனடைந்து உள்ளது. உலகில் இதுவரை 40 முக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதில் கேட்டி ஸ்டப்பில்பீல்ட் மட்டுமே 21 வயதில் முழு முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களைக் காக்க

இளைஞர்களைக் காக்க

மூன்று வருடங்களுக்குப் பிறகு தனக்கு புதிய முகம் கொடுத்த ஆண்ட்ரியா ஸ்னைடர் மற்றும் அவர் குடும்பத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் தற்கொலைக்கு முயற்சிக்கும் இளைஞர்களைக் காக்க போவதாகக் கேட்டி ஸ்டப்பில்பீல்ட் தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
American woman becomes youngest face-transplant recipient at 21, now working to save suicidal teens : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X