விண்வெளியில் 365நாட்கள் தங்கும் அமெரிக்க வீராங்கனை.!
குறிப்பாக சோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 365நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மூலம் விண்வெளியில் பல சாதனைகள் படைக்க முடியும், குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் பல சாதனைளை புரிந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன,இந்த ஆய்வு மையத்தில் 6வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

3விண்வெளி வீரர்கள்
அதன்படி ஆய்வு மையத்தில் தங்குபவர்கள் 3பேர் 5அல்லது 6மாதங்கள் வரை அங்கு தங்கிவிட்டு மீண்டு பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்பு புதிதாக 3விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி
வைக்கப்படுவார்கள்.

கிறிஸ்டீனா
அந்தவகையில் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர்,
இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜீலை மாதம் 20-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்கிறார்.

சோயூஸ் எம்-13
குறிப்பாக சோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 365நாட்கள் விண்வெளியில்
தங்கி இருந்துவிட்டு பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெக்கவிட்சன்
மேலும் இதற்குமுன்பு அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் வரை தங்கி இறுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications