ஓரியான் விண்கலத்தை சுமந்து செல்லும் பிரம்மாண்ட விமானம்! நாசா வெளியிட்ட அற்புத வீடியோ..

|

நூற்றுக்கணக்கான விண்வெளி ரசிகர்கள் ஓஹியோ குளிரை கூட பொருட்படுத்தாமல் துணிந்து, மனிதகுலத்தை மீண்டும் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும் விண்கலத்தையும், பிரமாண்டமான 'சூப்பர் குபி' விமானத்தைப் கண்டு புரித்தனர்.

சுற்றுச்சூழல் சோதனை

சுற்றுச்சூழல் சோதனை

ஓரியன் குழு மற்றும் சேவை தொகுதியானது(crew and service module) ஓஹியோவில் உள்ள நாசாவின் பிளம் புரூக் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு 2020 ஆம் ஆண்டில் விண்வெளிப் பயணத்திற்கு முன்னதாக சுற்றுச்சூழல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஓரியான் மாடியூல்

ஓரியான் மாடியூல்

விண்கலம் மற்றும் ராக்கெட்டுகளின் பாகங்கள் உள்ளிட்ட பெரிய பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் நாசா விமானப்படையில் மிகப்பெரிய விமானமான இந்த சூப்பர் குபி விமானத்தில் எடுத்துசெல்வதற்காக ஓரியான் மாடியூல் கொண்டுவரப்பட்டது.

டிசம்பர் 5: அனைவரும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!டிசம்பர் 5: அனைவரும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

ராக்கெட்டின்

நாசாவின் மிகப்பெரிய விமானமான இந்த சூப்பர் குபி, அப்பல்லோ நிலவு செயல்திட்டங்களின் போது சாட்டர்ன் வி ராக்கெட்டின் பகுதிகளை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓஹியோவில் உள்ள மான்ஸ்ஃபீல்ட் லாம் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் அணிவகுத்து நின்று, ஓரியன் வருவதையும், பிரபல பிரமாண்ட விமானம் தரையிறங்குவதையும் கண்டுகளித்தனர்.


விண்வெளி வீரர் டக் வீலாக் உள்ளிட்ட ஓரியன் மிஷன் குழுவின் உறுப்பினர்களை சந்திக்கலாம் என்ற நம்பிக்கையிலும் மக்கள் வந்திருந்தனர்.

பிளம் ப்ரூக் ஸ்டேஷனில், ​​ ஓரியன் விண்கலத்தை பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி, ஜூன் 2020-ல் நிலவு பயணத்திற்கு வேண்டும் விண்கலம் தயாராக உள்ளதா என்பது தீர்மானிப்படும்.

நிக்கோல் ஸ்மித்

நிக்கோல் ஸ்மித்

எதிர்கால ஆர்ட்டெமிஸ் பயணங்களின் போது தரையிலும் விண்வெளியிலும் பயணிக்கும் போது விண்வெளிவீரர்களுக்கு பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில், விண்கலத்தின் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளவாறு செயல்படுகிறதா என்பது இங்கு நடைபெறும் பரிசோதனைகள் உறுதிப்படுத்தும் 'என்று ஓரியன் சோதனைக்கான திட்ட மேலாளர் நிக்கோல் ஸ்மித் கூறினார்.

60 நாட்களுக்கு வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்படும்

60 நாட்களுக்கு வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்படும்

'நாங்கள் பறப்பது போல சோதிக்கிறோம்' என்று சொல்ல விரும்புகிறோம். வரவிருக்கும் ஆர்ட்டெமிஸ் 1 ​​சுற்றுச்சூழல் சோதனையின் போது அதைத்தான் நாங்கள் சாதிக்கப் போகிறோம். ' என்கிறார் அவர்.

பிளம் ப்ரூக் நிலையத்தில் உள் உலகின் மிகப்பெரிய வெற்றிட அறையில், விண்வெளி சூழல் நிலைமைகளில் ஓரியன் விண்கலம் 60 நாட்களுக்கு வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்படும்.

 14 நாட்களுக்கு மின்காந்த குறுக்கீடு சோதனை

14 நாட்களுக்கு மின்காந்த குறுக்கீடு சோதனை

இந்த பலகட்ட சோதனையின் போது, ​​ விண்வெளியில் சூரிய ஒளியில் மற்றும் நிழலுக்கு வெளியேயும் பறப்பதை பிரதிபலிக்கும் வகையில், -250 பாரன்ஹீட் முதல் 300 பாரன்ஹீட் வரை தீவிர வெப்பநிலை சோதனைக்கு ஓரியன் உட்படுத்தப்படும்.


ஓரியன் அதன் வெற்றிட வெப்ப பரிசோதனையை முடித்த பிறகு, 14 நாட்களுக்கு மின்காந்த குறுக்கீடு சோதனை நடைபெறும்.ஒவ்வொரு மின்னணு கூறுகளும் ஒரே நேரத்தில் இயங்கும்போது , சரியாக வேலை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த இங்குதான் சோதிக்கப்படும்.

இந்த மிஷன் போன்ற சிக்கலான சோதனைகளை ஒரே கூரையின் கீழ் செய்யக்கூடிய வசதி இங்குமட்டுமே உள்ளது. இந்த ஒருங்கிணைந்த தளத்தின் மூலம், ஒரு வாகனத்தை சோதனை செய்ய பல இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான தேவையை நீக்குவதன் மூலம் ஆபத்தை குறைக்கிறது. மேலும் எங்கள் பணியாளர்களின் திறமை விண்கலத்தை மதிப்பிடுவதற்கான சிறந்த இடமாக அமைகிறது" என்று அதன் மேலாளர் பாப் கோவல்ஸ்கி கூறுகிறார்.

அனைத்து சோதனைகளும் முடிந்தபின், ஓரியன் மீண்டும் சூப்பர் குபி விமானத்தில் கென்னடி விண்வெளி மையத்திற்கு திரும்பி அங்கு அதன் முதல் மிஷனுக்கு தயாராகும்.

ஆர்ட்டெமிஸ் -1

ஆர்ட்டெமிஸ் -1

சோதனைகள் திட்டமிட்ட படி சரியாக நடந்தால், விண்வெளி பயண 2020 தேதிக்கு முன்னதாக சக்திவாய்ந்த விண்வெளி வெளியீட்டு அமைப்பு (எஸ்.எல்.எஸ்) ராக்கெட் மற்றும் பிற ஏவுதலுக்கு முந்தைய தயாரிப்புகளுடன் ஒருங்கிணைக்கத் தொடங்கும்.

ஆர்ட்டெமிஸ் -1 மூலம் ஓரியன் மனித குழுவினர் இல்லாமல் சந்திரனுக்கு பயணித்து, சந்திர சுற்றுப்பாதையில் ஆறு நாட்கள் உட்பட மூன்று வாரங்கள் விண்வெளியில் செலவிடும்.

news source:dailymail.co.uk

Best Mobiles in India

English summary
Amazing footage NASAs Super Guppy aircraft delivering space agencys Orion spacecraft: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X