டெஸ்லா காருடன் சேர்த்து விண்ணிற்கு அனுப்பட்ட "மர்ம பொருள்" என்னவென்று தெரியுமா.?

முதலில் விண்ணிற்குள் செலுத்தபட்ட டெஸ்லா காரின் டிரைவர் செட்டில் அமர்ந்திருக்கும் 'டம்மி' விண்வெளி வீரரை பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விடயத்தை சொல்லி விடுகிறேன்.

|

சில நாட்களுக்கு முன்னர், உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஆன ஃபால்கோன் ஹெவி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதும், அது எலான் மஸ்க்கின் கனவு காரான டெஸ்லா ரோட்ஸ்டரை சுமந்துஸ் சென்று விண்ணில் விட்டதென்பதும் நாம் நன்கு அறிவோம்.

 டெஸ்லா காருடன் சேர்த்து விண்ணிற்கு அனுப்பட்ட

ஆனால், நம்மில் பலர் அறியாத ஓரு விடயம் உள்ளது. அது என்னவெனில் - ஃபால்கோன் ஹெவி ராக்கெட் ஆனது டெஸ்லா காரை மட்டும் விண்ணிற்கு கொண்டு செல்லவில்லை. உடன் ஒரு பொருளையும் கொண்டு சென்றுள்ளது. அது என்னது.?

டம்மிக்கு

டம்மிக்கு "ஸ்டார்மென்" என்று பெயர்

முதலில் விண்ணிற்குள் செலுத்தபட்ட டெஸ்லா காரின் டிரைவர் செட்டில் அமர்ந்திருக்கும் 'டம்மி' விண்வெளி வீரரை பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விடயத்தை சொல்லி விடுகிறேன், அந்த டம்மிக்கு "ஸ்டார்மென்" என்று பெயர். இந்த பெயரானது டேவிட் போவியின் பாடல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும்.

பெரிய காருக்குள் ஒரு குட்டி கார் + குட்டி டிரைவர்.!

பெரிய காருக்குள் ஒரு குட்டி கார் + குட்டி டிரைவர்.!

கூடுதலாக, காரின் டாஷ்போர்டில் டெஸ்லா காரை சித்தரிக்கும் ஒரு சிறிய சிவப்பு மாடல் கார் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சுவாரசியம் என்னவெனில் அந்த குட்டி காருக்குள் ஒரு குட்டி டம்மி கார் டிரைவர் இருப்பார். அதாவது ஒரு மெட்டா ஜோக் போல.!

பயப்பட வேண்டாம்.!

பயப்பட வேண்டாம்.!

நீங்கள் இன்னும் கழுகுக் கண்கள் கொண்டு பார்த்தால், காரின் டாஷ்போர்ட்டில் ஒரு சுவரொட்டையும் மஸ்க் இணைத்துள்ளதை காண்பீர்கள். அதுவொரு எளிமையான வாசகமகும் - "டோன்ட் பேனிக்" (Don't Panic) அதாவது பயப்பட வேண்டாம் என்று பொருள்.

எப்போதுமே பயன்படுத்தும் ஒரு வாசகம்.!

எப்போதுமே பயன்படுத்தும் ஒரு வாசகம்.!

"டோன்ட் பேனிக்" (Don't Panic) என்கிற வாசகம் புகழ்பெற்ற எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ்-ன் நகைச்சுவை அறிவியல் புனைகதையான 'தி ஹட்ச்ஹிக்கர்ஸ் கைட் டூ தி கேலக்ஸி'யின் பிரதான கதாபாத்திரம் எப்போதுமே பயன்படுத்தும் ஒரு வாசகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மர்ம பொருள் என்ன.?

அந்த மர்ம பொருள் என்ன.?

அதெல்லாம் சரி, டெஸ்லா காருடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பட்ட அந்த மர்ம பொருள் என்னவென்று தெரியுமா.?அது ஒரு டிஜிட்டல் "புத்தகமாகும்". ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் காரவின் க்ளோவ் கம்பார்ட்மெண்டில் சிறிய ஆப்டிகல் டிஸ்க்கையும் வைத்திருந்துள்ளது. அந்த டிஸ்க்குகள் ஐசக் அசிமோவின் 'ஃபவுண்டேஷன்' தொடரின் முழுமையான பகுதியும் என்கோட்ட் செய்யப்பட்டுள்ளது.

கற்பனையான கலைக்களஞ்சிம்

கற்பனையான கலைக்களஞ்சிம்

20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் ஆன அசிமோவ், அவரது விஞ்ஞான புனைகதை படைப்புகள், குறிப்பாக ஒரு விண்மீன்-பரவிய நாகரிகம் மூலம் திரட்டப்பட்ட அனைத்து அறிவையும் கொண்ட ஒரு கற்பனையான கலைக்களஞ்சியமான 'என்சைக்ளோபீடியா கேலக்டிகா' மிகவும் போற்றப்படுமொரு படைப்பாகும்.

அதுவொரு

அதுவொரு "ஆர்க்" ஆகும்.!

உடனே அதுவொரு ஆப்டிகல் டிஸ்க் மட்டும்தான் என்று நினைத்துவிட வேண்டாம். அதுவொரு "ஆர்க்" ஆகும். அதாவது குவார்ட்ஸ் சிலிக்கா கண்ணாடியில் பெண்டெக்டிகோட் லேசர் கொண்டு 20 நானோமீட்டர் அளவில் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஆர்க் ஆகும்.

இது ஏலியன்களுக்கான தூதா.?

இது ஏலியன்களுக்கான தூதா.?

தொழில்நுட்ப வழியில் கூறவேண்டுமெனில் இது 360 டிபி அளவிலான தத்துவார்த்த திறனைக் கொண்டுள்ளது. மேலும் 14 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் வரை இதனுள் இருக்கும் தரவு சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படும். இது ஏலியன்களுக்கான தூதா.? என்று கேட்டால், அதற்கு பதில் கிடையாது.

40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த வேலை.!

40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த வேலை.!

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நாசாவும் இதேபோன்றதொரு காரியத்தை செய்தது. அதுவொரு வரலாற்று பிழையாகவே காணப்படுகிறது. அந்த தவறு இன்று உலகிற்கும், அதன் வாசிகளுக்கும் ஒரு மாபெரும் அச்சறுத்தலாய் உருமாறியுள்ளது. அந்த கதையென்னவென்று தெரியுமா.?

1977 செப்டம்பர் 5-ஆம் தேதியன்று..

1977 செப்டம்பர் 5-ஆம் தேதியன்று..

வாயேஜர் 1 என்பது 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதியன்று நாசாவினால் விண்ணில் ஏவப்பட்ட ஒரு விண்வெளி ஆய்வுக்கலம் ஆகும். வெளிப்புற சூரிய மண்டலத்தைப் பற்றி ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டு, வாயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வாயேஜர் 1 செலுத்தப்பட்டது.

20.6 பில்லியன் கிலோமீட்டர்

20.6 பில்லியன் கிலோமீட்டர்

2017-ஆம் ஆண்டு மே மாதத்தின் புள்ளிவிவரத்தின் படி, வாயேஜர் 1 பூமியில் இருந்து சுமார் 137.8 வானியல் அலகுகள் (பூமி-சூரிய தொலைவு) தொலைவில் அதாவது சுமார் 20.6 பில்லியன் கிலோமீட்டர் அல்லது 12.8 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.

டீப் ஸ்பேஸ் நெட்வர்க்

டீப் ஸ்பேஸ் நெட்வர்க்

சுமார் 40 ஆண்டுகள் கடந்து ஆய்வை மேற்கொள்ளும் இந்த விண்கலம் டீப் ஸ்பேஸ் நெட்வர்க் (Deep Space Network) வழியாக தொடர்ந்து வழக்கமான கட்டளைகளைப் பெற்றும், சேகரித்த தரவுகளை அனுப்பியும் வருகிறது. இந்த வாயேஜர் 1 ஆய்வுக்கலத்தில் நாசாவினால் ஒரு திட்டமிடாத தவறும் நிகழ்த்தப்பட்டது.

ஒரு தங்க வட்டு ஆகும்

ஒரு தங்க வட்டு ஆகும்

சுருக்கமாக கூறினால் நாசாவின் இந்த வாயேஜர் 1 என்பது பூமி வாழ்வின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒலிகள் மற்றும் படங்கள் கொண்ட ஒரு தங்க வட்டு ஆகும். அதுமட்டுமின்றி இந்த வட்டு நமது பூமி கிரகத்தின் இருப்பிடம் காட்டும் ஒரு வரைபடத்தையும் கொண்டிருக்கிறது. அந்த வரைப்படம் நாசா எங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்கிறது என்பது பற்றி கூடுதல் நிலப்பரப்புகளைப் புரிந்து கொள்ள அனுமதிக்கிறது.

எவ்வளவு தூரம் பயணித்துள்ளது.?

எவ்வளவு தூரம் பயணித்துள்ளது.?

அதாவது இது எங்கிருந்து வருகிறது மற்றும் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது என்பதை வாயேஜர் 1 தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையேதான் அந்த வரைபடங்களை உருவாக்கிய அமெரிக்க வானியலாளரான பிராங்க் டிரேக் அவர்களும் "இந்த விவரங்களை குறிக்கும் ஏதாவது ஒன்றை வாயேஜர் 1 மீது நாசா பொறுத்த நினைத்தது" என்று கூறுகிறார்.

நாடோடித்தன்மை கொண்ட எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ்

நாடோடித்தன்மை கொண்ட எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ்

இந்த வரைபடம் நம்மை எவ்விதமான ஆபத்துக்களுக்குள் சிக்க வைக்கும் என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம், வளங்கள் நிறைந்த வேறு கிரகங்களை தேடித்தேடி அலைந்து அடையும் நாடோடித்தன்மை கொண்ட எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகளுக்கு பூமியை தாக்க மற்றும் கைப்பற்ற உதவ வாயேஜர் 1 விண்கலத்தை விட மிக எளிமையான வழி கிடைக்கவே கிடைக்காது.

யாரும் விவாதிக்கவில்லை

யாரும் விவாதிக்கவில்லை

விண்வெளிக்கு வரைபடங்களை நாசா அனுப்ப என்ன காரணம் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பிய போது "இந்த விண்கலம் செலுத்தப்பட்ட நேரத்தில் மக்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர் மற்றும் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி யாரும் விவாதிக்கவில்லை" என்று பதிலளித்துள்ளது.

சிக்கினால் என்னவாகும்.?

சிக்கினால் என்னவாகும்.?

மறுகையில் வேற்றுகிரக வாசிகளிடம் அந்த வரைபடம் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும், வாயேஜர் 1 வழக்கம்போல எப்போதும் விண்மீன்களுக்கு இடையே விண்வெளியில் அமைதியாக பயணிக்கும் என்றும் நாசா நம்புகிறது. ஒருவேளை சிக்கினால் என்னவாகும்.?

எந்த அளவிலான ஆபத்தை கொண்டது.?

எந்த அளவிலான ஆபத்தை கொண்டது.?

வேற்றுகிரக வாசிகளுக்கு செய்திகள் அனுப்புவது சார்ந்த நெறிமுறைகளை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவரும் யார்க் பல்கலைக்கழகத்தின் கார்டன் டென்னிங்கை பொறுத்தவரை "பல்சர் வரைபடத்தை உருவாக்கிய டிரேக் மற்றும் கார்ல் சாகன் மற்றும் வாயேஜர் 1 அணி முழுவதுமே வேற்றுகிரகவாசிகள் தொடர்பு சார்ந்த எந்த விதமான யோசனைகளையும், விவாதங்களையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், இப்போது உலகம் முழுவதும் விஞ்ஞானிகளிடமிருந்தும், பல்வேறு வகையான பங்குதாரர்களிடமிருந்தும் இந்த விடயம் எந்த அளவிலான ஆபத்தை கொண்டது என்பது பற்றிய பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது" என்கிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங் திரும்பத் திரும்ப எச்சரித்தார்

ஸ்டீபன் ஹாக்கிங் திரும்பத் திரும்ப எச்சரித்தார்

புத்திஜீவித்தனமான வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வதில் உள்ள ஆபத்துகளைப் பற்றி பிரபல இயற்பியலாளர் ஆன ஸ்டீபன் ஹாக்கிங் திரும்பத் திரும்ப எச்சரித்தார் என்பதும், அவர் "வேற்றுகிரக வாசிகள் நம்மை அறிந்துகொண்டால், கொலம்பஸ் அமெரிக்காவில் தரையிறங்கி பூர்வீக அமெரிக்கர்களை காணாமல் ஆக்கியது போன்றதொரு நிகழ்வு நாடாகும்" என்றும் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Along With The Tesla Roadster Car, SpaceX Also Launched These Hidden Messages Into Space. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X