ஏலியன்கள் இருப்பது உறுதியானது; சிக்கியது அதிகாரப்பூரவமான ஆதாரம்!

  ஆகப்பெரிய அண்டத்தில் நாம் (பூமியும் பூமியின் ஜீவராசிகளும்) மட்டும் தான் இருக்கிறோம் என்கிற கருத்தை பெரும்பாலானோர்கள் ஏற்க மறுக்கின்றனர். அதற்கு மேலுமொரு சாட்சியாக சமீபத்தில் தொலைதூர விண்வெளி பகுதியில் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள சிக்னல் தான் இதுவரை நமக்கு கிடைத்த இரண்டாவது பாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (FRB) குறிப்பிடத்தக்கது.

  ஏலியன்கள் இருப்பது உறுதியானது; சிக்கியது அதிகாரப்பூரவமான ஆதாரம்!

  கிடைக்கப்பெற்ற இந்த மர்மான சிக்னலின் ஆரம்ப புள்ளியை ஆராயும் பட்சத்தில், அது கடந்த காலத்தில் (விண்வெளியின் ஆழமான பகுதியில் இருந்து வருவதால் பல காலங்களை அது கடந்து இருக்கும், ஆகையால் தான் இங்கு கடந்த காலம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது) இருந்த மேம்பட்ட அன்னிய தொழில்நுட்பத்துடன் (ஏலியன் டெக்னாலஜி) தொடர்பு கொண்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில்

  சில விஞ்ஞானிகள், இந்த எப்ஆர்பிக்கள் (FRB) ஆனது சக்திவாய்ந்த வானியற்பியல் நிகழ்வுகளின் விளைவால், பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வருகின்றன என்று நம்புகின்றனர். எவ்வாறெனினும், நமது பால்வெளி மண்டலத்துக்கு வெகு தொலைவில் இருந்து உருவான இந்த சிக்னல்களின் துல்லியமான ஆதாரம் இன்னும் சரியாக அறியப்படவில்லை.

  ஹார்வார்ட் விஞ்ஞானிகள்

  கடந்த 2017 ஆம் ஆண்டில் ஹார்வார்ட் விஞ்ஞானிகள் இந்த எப்ஆர்பிக்கள் ஆனது, தொலைதூர விண்மீன்களில் இருந்து, கிரக-அளவிலான டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து ஊடுருவுகின்றன என்று ஊகிக்கின்றனர். இதன் இயற்கையான தோற்றத்தை (ஆரம்பப்புள்ளியை) அடையாளம் காண முடியாத காரணத்தினால் தான், இது செயற்கையாக அல்லது ஏலியன்களினால் உருவாக்கம் பெற்று இருக்கலாம் ஏங்கிய சித்தனைகளையும், கோட்பாடுகளும் எழுகிறது என்றும் கூறியிருந்தனர்.

  வானொலி அலைகளின் ஆதாரம்

  "இந்த வானொலி அலைகளின் ஆதாரம் (தொடக்கம்) மீது இருக்கும் ஆர்வத்தை விட, அது எந்த அளவிலான (சக்தி வாய்ந்த) அதிர்வெண்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதில் தான் அதிக சுவாரசியம் இருக்கிறது. சில மாதிரிகளால் (அலைகளால்) ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கு கீழே எதையும் உருவாக்க முடியாது," என்கிறார் மெக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அருண் நாயுடு. இவர் இந்த சிக்னலைக் கண்டறிந்த குழுவின் பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இன்ஜிரிட் ஸ்டேர்ஸ்

  கடந்த 2017 ஆம் ஆண்டு கனடாவில் கட்டமைக்கப்பட்ட ஹைட்ரஜன் செறிவு மேப்பிங் பரிசோதனை (CHIME) எனும் வானொலி தொலைநோக்கி துவங்கியது முதல், நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று தற்போது கிடைத்து உள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற சிக்கனலில் இதுவே முதன்மையானதாகும். ஆக நம்மை போலவே ஜீவராசிகள் இந்த அண்டத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் நம்பத்தொடங்கலாம்" என்று கூறி உள்ளார் சிஎச்ஐஎம்இ குழு உறுப்பினர் ஆன இன்ஜிரிட் ஸ்டேர்ஸ்.

  திரும்பி பெறப்படும் சிக்கனல்கள்

  கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ஒரு வானியலாளரான ஸ்டேர்ஸ் மேலும் கூறுகையில், "இன்னும் அதிக திரும்பி பெறப்படும் சிக்கனல்கள் மற்றும் ஆய்வுக்கு கிடைக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்டு, இந்த அண்ட புதிர்களை நாம் புரிந்து கொள்ள முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் மூன்று வார காலப்பகுதியில் கண்டறியப்பட்ட எப்ஆர்பிக்களின் எண்ணிக்கை ஆனது 13 ஆகும். அந்த அதே நேரத்தில் சிஎச்ஐஎம்இ (CHIME) அந்த அதன் முந்தைய ஆற்றலுக்கான கட்டத்தில் இருந்தது என்பதும், அதன் முழு கொள்ளளவில் ஒரு சிறு பகுதியின் கீழ் மட்டுமே இயங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  2015 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது

  மேலதிக எப்ஆர்பிக்கள் ஆனது பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகநகன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தொலைநோக்கி மூலம் பின்வரும் வாரங்களில் கண்டறியப்பட்டது. இன்றுவரை காணப்பட்ட 60 க்கும் மேற்பட்ட எப்ஆர்பிக்களில், ஒரே ஒரு மூலத்திலிருந்து மட்டுமே இருமுறை எப்ஆர்பி கிடைக்கப்பெற்று உள்ளது. அது பியூரிகோ ரிக்கோவில் உள்ள அரிசிபோ வானொலி தொலைநோக்கி மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  சிஎச்ஐஎம்இ

  கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட 13 எப்ஆர்பிக்களில் பெரும்பாலானவை "சிதறடிக்கும்" அறிகுறிகளைக் காட்டின. அது ரேடியோ அலைகளின் ஆதார சூழலைச் சுற்றியுள்ள சூழலைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன. சிஎச்ஐஎம்இ (CHIME) குழுவினரால் கவனிக்கப்படும் சிதறலின் அளவு எப்ஆர்பிக்களின் ஆதாரம் ஆனது சக்தி வாய்ந்த ஆஸ்ட்ரோஃபிலிகல் பொருள்கள் இருப்பதையும், அவைகள் தனிச்சிறப்பான சிறப்பம்சங்களுடன் கூடிய இடங்களில் இருப்பதையும் வெளிப்படுத்தி உள்ளது.

  பிளாக் ஹோல்

  "அது ஒரு சூப்பர்நோவா வெடிப்பை போன்ற ஒருவித அடர்த்தியான உருவமற்ற விடயமாக இருக்கலாம் அலல்து விண்மீன் மண்டலத்தின் நடுவில் உள்ள கருந்துளை (பிளாக் ஹோல்) அருகில் இருந்து வந்து இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நாம் காணும் எல்லா சிதறல்களும் (எப்ஆர்பி) ஒரு சிறப்பான இடத்தில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்" என்கிறார் கனடாவின் டோரன்டோ பல்கலைக்கழகத்தில் வானியலாளரான செர்ரி என்ஜி.

  மர்மமான வெடிப்புகள்

  எப்ஆர்பிக்கள் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, விஞ்ஞானிகள் மர்மமான வெடிப்புகள் பற்றிய ஆதாரங்களை விளக்கவும், அவைகள் கிளம்பும் சூழல்களை அறிந்து கொள்ளவும் சில எப்ஆர்பி மாதிரிகளை உருவாக்கி ஆராய்ந்து வருகின்றனர். கூடிய விரைவில் "நாம் தனியாக இல்லை" என்கிற வாசகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Aliens could be behind mysterious radio waves from deep space: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more