Home
Scitech

"ஏலியன்ஸ் வருகிறார்கள்" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.!

ஏலியன் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் அதிகம் வலைத்தளங்களில் வந்துகொண்டே தான் இருக்கிறது.

ஏலியன் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் அதிகம் வலைத்தளங்களில் வந்துகொண்டே தான் இருக்கிறது.

அதிலும் நிலவில் மனிதர்களைத் தங்க வைக்க வீடுகள், செவ்வாய் கிரகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏலியன் மண்டை ஓடுகள் போன்ற செய்திகளால், எளியேன் பற்றிய நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வீடியோ பதிவு செய்த சி.ஜி.டி.என் தொலைத்தொடர்புக்கு நன்றி.

மர்மமான ஒளி

மர்மமான ஒளி

நேற்று இரவு சீனாவில் ஒரு மர்மமான ஒளி காணப்பட்டது. சீனாவின் குடியிருப்பு பகுதிக்கு மேல் திடீர் என்று ஒரு மர்மமான மற்றும் வித்தியாசமான ஒளி படலம் தென்பட்டது. சீனாவில் உள்ள பெய்ஜிங், சாங்சிங், ஷான்ஸி மற்றும் மங்கோலியா ஆகிய இடங்களில், மாலை 6:45 மணியளவில் இந்த மர்ம ஒளி தென்பட்டுள்ளது. வெறும் ஒளியாக ஒரே இடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருந்ததினால் அனைவரும் ஆசிரியத்தில் உறைந்தனர்.

ஏலியன்  விண்கலம்

ஏலியன் விண்கலம்

மர்ம ஒளியைப் பார்த்த மக்கள் அனைவரும் ஏலியன் விண்கலத்தின் வருகை என்று கூக்குரலிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பெரிய டார்ச் லைட்

பெரிய டார்ச் லைட்

இந்த ஒளி வானில் மிகப் பெரிய டார்ச் லைட் போல மின்னியுள்ளது. காணொளி கட்சியில் மர்ம ஒளி நகர்ந்தும் வளைந்தும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றுள்ளது.

டிராகன்

டிராகன்

வேடிக்கை பார்த்த மக்கள் கூறுகையில், அந்த மர்ம ஒளி பார்ப்பதற்கு பெரிய வால் போல இருந்ததாகவும், இன்னும் சிலர் அதைப் பார்ப்பதற்கு டிராகன் போல இருந்ததாகவும் பதிவு செய்துள்ளனர். வேடிக்கை பார்த்த மக்களில் பலரும் அதனை ஏலியன் வருகிறார்கள் என்று தான் குறிப்பிட்டுள்ளனர்.

யு.எப்.ஓ நிபுணர்

யு.எப்.ஓ நிபுணர்

ஆனால் யு.எப்.ஓ நிபுணர்கள், இந்த மர்ம ஒளியை ராக்கெட் மோட்டாரின் சுவடுகளாக இருக்குமென்று தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிற்குச் சவால் விடச் சீனா இரகசியமாகத் தயாரித்து இருக்கும் ஹைப்பர்சோனிக் ராக்கெட்டாக கூட இது இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

சென்ற வரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநகரத்தின் வானில், இதேப் போன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் விண்ணில் பறந்து இது போலவே வானில் பிம்பத்தை ஏற்படுத்தியதென்பது குறிப்பிடத்தக்கது.

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!

வேற்றுகிரக வாசம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது சகஜம் என்றாகிவிட்டது. பெரும்பாலும் இவை அதிகாரப்பூர்வ தகவலாக இருப்பதில்லை என்பதால் இது குறித்து யாரும் அதிகம் கவலை கொண்டதில்லை.

எனினும் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மை என்பதை விளக்கும் சான்றுகளை பலமுறை வெளியிட்டு இருக்கின்றனர். இன்றும் பல்வேறு காரணங்களால் இவை குறித்த தகவல் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.

தகவல்

தகவல்

நிலைமை இப்படி இருக்க வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றனர் என்ற வாக்கில் பல நாசா ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாசா

நாசா

பல்வேறு நாசா ஊழியர்களும் ஏலியன் இருப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து வரும் நிலையில் நாசா அதிகாரப்பூர்வமாக இத்தகவலை உறுதி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நாசாவின் தலைமை ஆராய்ச்சியாளர் எல்லென் ஸ்டோஃபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல்

தகவல்

ஏலியன் இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடப்படலாம் என வேற்றுகிரக வாசம் சார்ந்த சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உண்மை

உண்மை

இதனிடையே ஸ்டோஃபன் அறிக்கையானது ஏலியன் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரம்

நேரம்

நம் வாழ்நாள் நிறைவடையும் முன் நமது பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசம் இருப்பதை புரிந்து கொள்வோம் என ஸ்டோஃபன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை

உண்மை

இத்தகவல் ஆனது பூமியை தவிர மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசம் இருப்பது நிச்சயம் உண்மை என்பதில் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதை உணர்த்துவதாகவே இருக்கின்றது.

வீரர்

வீரர்

அப்போலோ 14 திட்டத்தின் மூலம் விண்வெளி சென்ற வீரர் தன் பேட்டியில் ஏலியன் இருப்பது உண்மை என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்

தகவல்

இதோடு வேற்றுகரக வாசிகள் இருப்பது குறித்த தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளதோடு, அரசாங்கம் மற்றும் நாசா இணைந்து ஏலியன் இருப்பதை மறைக்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகின்றது.

ஆதாரம்

ஆதாரம்

முன்னதாக 2011 ஆம் ஆண்டில் நாசா அதிகாரியான சார்லஸ் போல்டன் ஏலியன் இருப்பதை தான் நம்புவதாகவும், ஆனால் இதற்கு தன்னிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

கருத்து

கருத்து

இது குறித்து டாக்டர் மிட்செல் கூறியதாவது, 'உலகில் ஏலியன் இருப்பதை மறைக்க நாசா எது வேண்டுமானாலும் செய்யும்' என தெரிவித்திருந்தார்.

கென் ஜான்ஸ்டன்

கென் ஜான்ஸ்டன்

கென் ஜான்ஸ்டனும் ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ இருப்பது குறித்த தகவல்களை வெளியிட்டார்.

ஆதாரம்

ஆதாரம்

தகவல்களை மட்டும் வெளியிட்ட கென் ஆதாரங்களை வெளியிட மாட்டேன் என கூறினார், இத்தகவல் வெளியானதும் அவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

விண்வெளி மையம்

விண்வெளி மையம்

சர்வதேச விண்வெளி மையத்தின் நேரலை கேமராவில் இருந்து, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெரிவது பலமுறை மறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சில வினாடிகள் காணப்பட்டது, எனினும் இதுவும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.

யுஎஃப்ஒ

யுஎஃப்ஒ

சர்வதேச விண்வெளி மையம் இல்லாமல் உலகின் பல பகுதிகளில் யுஎஃப்ஒ காணப்பட்டது பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இது குறித்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
'Aliens are coming!' Mysterious light is spotted in the night skies of China : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X