சுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல்.! 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

|

1978 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத் தளத்தில் ஏலியன் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது என்ற பகீர் உண்மையை முன்னாள் அமெரிக்க விமானப்படையின் மேஜர் தற்பொழுது வெளி உலகிற்குத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் உண்மையில் நடந்தது என்றும், இதைப்பற்றிய விரிவான உண்மை ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சுட்டு கொல்லப்பட்ட ஏலியன் எப்படி இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இராணுவ தளத்தில் ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

அமெரிக்க இராணுவ தளத்தில் ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

அமெரிக்க இராணுவ தளத்தில் ஒரு விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டதாக, ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படையின் மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் கூறியுள்ளார். UFO என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் மர்ம பொருளை ஒரு உளவு விமானம் என்று தவறாகக் கருதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி அதை ஐந்து முறை சுட்டார்

போலீஸ் அதிகாரி அதை ஐந்து முறை சுட்டார்

பின்னர் 1978 ஆம் ஆண்டில் அதை UFO தான் என்று அடையாளம் கண்ட ஒரு இராணுவ போலீஸ் அதிகாரி அதை ஐந்து முறை சுட்டுள்ளார் என்பதையும் மேஜர் தெரிவித்துள்ளார்.ஓய்வு பெற்ற மேஜர் சொல்லும் உண்மை கதையை, விருது பெற்ற புலனாய்வு நிருபர் ஜான் எல். குரேரா எழுதிய ஒரு விமானப்படை புலனாய்வு அதிகாரியின் உண்மைக்கதை என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

டிவி ஓடாது; மொபைல் சிக்னல் இருக்காது; காட்டுவாசியாக அலையப்போகிறோம்.!டிவி ஓடாது; மொபைல் சிக்னல் இருக்காது; காட்டுவாசியாக அலையப்போகிறோம்.!

ஸ்ட்ரேஞ் கிராஃப்ட் புத்தம்

ஸ்ட்ரேஞ் கிராஃப்ட் புத்தம்

Strange Craft: The True Story of an Air Force Intelligence Officer's Life with UFOs என்ற புத்தகத்தில் இந்த உண்மைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் தோன்றிய வேற்றுகிரகவாசி பற்றிய தகவல்கள் இதில் உள்ளதாம்.

42 வருடங்களுக்கு முன்னாள் நடந்த உண்மை சம்பவம்

42 வருடங்களுக்கு முன்னாள் நடந்த உண்மை சம்பவம்

இந்த சம்பவம் 42 வருடங்களுக்கு முன்னாள், 1978 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி, நியூ ஜெர்சியில் உள்ள போர்ட் டிக்ஸ் பேஸ் என்ற (Fort Dix base) என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. போலீஸ் அதிகாரியின் கார் அருகே அடையாளம் தெரியாத மெலிந்த தோற்றத்தில், சாம்பல் மற்றும் பழுப்பு நிறத்தில் நடமாடும் ஒரு உயிரினத்தை அதிகாரிகண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்..!? பூமிக்கு வருகை தந்தது யார்..?நாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்..!? பூமிக்கு வருகை தந்தது யார்..?

மனிதனைப் போல் இருந்த அடையாளம் தெரியாத ஏலியன்

மனிதனைப் போல் இருந்த அடையாளம் தெரியாத ஏலியன்

மனிதனைப் போல் இருந்த அடையாளம் தெரியாத அந்த ஏலியனை போலீஸ் அதிகாரி கையை உயர்த்தி அசையாமல் நிற்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதிகாரி சொன்னதை கேட்க மறுத்த காரணத்தினால், அவர் அந்த ஏலியனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்ட பகுதியிலிருந்து தப்பித்து ஓடிய ஏலியன், மெகுவேர் விமானப்படை தளத்தின் ஓடுபாதை முடிவில் பிணமாக கண்டுபிடித்தாக மேஜர் ஃபில்லரின் மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் அவரிடம் கூறியுள்ளார்.

இது விண்வெளி ஏலியன்

இது விண்வெளி ஏலியன்

சுடப்பட்ட ஏலியன் வேற்று கிரகத்தை சேர்ந்த ஏலியனா? என்று ஃபில்லர் மூத்த சார்ஜெண்ட் இடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ''இல்லை, இது விண்வெளியிலிருந்து வந்த விண்வெளி ஏலியன்'' என்று அவர் பதிலளித்துள்ளார். அடையாளம் தெரியாத ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர்,வானத்தில் பறந்துகொண்டிருந்த UFO-க்கள் பைத்தியம் பிடித்த போல் அங்கும் இங்கும் அலைந்தது என்று ஃபில்லர் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இன்னும் தொடரும் மர்மம்

இன்னும் தொடரும் மர்மம்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி அமெரிக்க இராணுவத் தளத்தின் தலைவர்களை அழைத்தபோது, ஒரு சிறப்பு மோப்-அப் குழு நேரில் வந்து ஏலியன் உடலை கைப்பற்றியது என்றும், ஓஹியோவில் உள்ள ரைட்-பேட்டர்சன் விமானப்படைத் தளத்திற்கு அந்த உடல் கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

மேஜர் ஃபில்லர் தாக்கல் செய்த கோரிக்கை மனு

மேஜர் ஃபில்லர் தாக்கல் செய்த கோரிக்கை மனு

உளவுத்துறை அறிக்கைக்காக அவர் கோரிய சாட்சிகள் மற்றும் புகைப்படங்களை அணுக மேஜர் ஃபில்லர் கோரிக்கையைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மேஜர் தாக்கல் செய்த கோரிக்கை மனு எந்த காரணமும் சொல்லப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 உண்மைகள் நிச்சயம் வெளிவரும்

உண்மைகள் நிச்சயம் வெளிவரும்

யுஎஃப்ஒ ஆர்வலர் மற்றும் ஓய்வுபெற்ற மேஜருமான ஃபில்லர் கூறுகையில், ''இது ஒரு கட்டுக்கதை இல்லை நிஜமாக நடந்த உண்மை கதை'' என்று கூறியுள்ளார். இது போன்ற பல உண்மை கதைகளை வெளி உலகிற்கு தெரியவிடாமல்அமெரிக்கா மறைத்துவைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எப்படியும்ஒருநாள் உண்மைகள் நிச்சயம் வெளிவரும் என்று அவர் நம்புகிறார்.

Best Mobiles in India

English summary
Alien Shot Dead At American Military Base In 1978 Claims Former US Air Force Major : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X