7 சோலார் ஆய்வகங்கள் மூடல்! பறக்கும் தட்டுகள் காரணமா?

சூரியனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஒரு நபர், மிகப்பெரிய பறக்கும் தட்டையும் அதனைத் தொடர்ந்து ஏராளமான சிறு விண்கலன்களும் சூரியனுக்கு பின்னால் கடந்து சென்றதை பார்த்ததாக நம்புகிறார்.

|

கடந்த செப்டம்பர் 6 அன்று, நியூமெக்சிகோவின் சன்ஸ்பாட்டில் உள்ள தேசிய சூர்யகுடும்ப ஆய்வகத்திற்கு(National Solar Observatory -NSO) படையெடுத்த எப்.பி.ஐ அதிகாரிகள் இன்னமும் அங்கேயே உள்ளனர்.எப்.பி.ஐ அதிகாரிகள் ஏன் அங்கு உள்ளனர் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் விளக்கம் அளிக்காத நிலையில், இந்த வாரம்

சோலார் ஆய்வகம் மீண்டும் திறக்கப்படுவது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

7 சோலார் ஆய்வகங்கள் மூடல்!  பறக்கும் தட்டுகள் காரணமா?

தேசிய சோலார் ஆய்வகம் மூடப்பட்டிருந்த அதேநேரத்தில், மேலும் 6 ஆய்வக கேமராக்களும் முடக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியா, சிலே,ஸ்பெயின், பென்சில்வேனியாவில் தலா ஒன்று மற்றும் ஹவாயில் இரண்டு கேமராக்கள் இதில் அடக்கம்.


சூரியனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஒரு நபர், மிகப்பெரிய பறக்கும் தட்டையும் அதனைத் தொடர்ந்து ஏராளமான சிறு விண்கலன்களும் சூரியனுக்கு பின்னால் கடந்து சென்றதை பார்த்ததாக நம்புகிறார். இதன் காரணமாகவே சோலார் ஆய்வகங்கள் மூடப்பட்டு, எப்.பி.ஐ மூலம் அந்த சம்பவம் மூடி மறைக்கப்படுவதாக யுகங்களுக்கு வழிவகுக்கிறது.

7 சோலார் ஆய்வகங்கள் மூடல்!  பறக்கும் தட்டுகள் காரணமா?

செப்டம்பர் 11 அன்று இன்டியானாவில் உள்ள சேலம் பகுதியை சேர்ந்த மரியா ஹில் என்ற பெண்மணியால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், சூரியனுக்கு அருகில் விண்கலன்கள் பதுங்கி செல்வதை காணமுடிகிறது. இதுதொடர்பான புகைப்படங்களுடன் முகநூலில் பதிவிட்டுள்ள அவர், இன்று காலை கிழக்கு வானில் சூரியனை புகைப்படம் எடுக்கும் போது எனது கேமரா இதை தான் காட்டுகிறது. வ

லென்ஸ் அடேப்டர் உள்ள ஐபோன்8ல் இது எடுக்கப்பட்டது.

"பச்சை நிற வட்டவடிவ கதவு போன்ற பொருள் வோர்டெக்ஸ்/வார்ம் ஹோல் மையத்தில் இருந்தது மற்றும் அதற்கு நேர்மேலே பாம்பு வடிவம் உள்ளது. இந்த வட்டவடிவ தட்டும், பாம்பு சின்னமும் ஏதோ ஒன்றை குறிக்கிறது" என உறுதியாக கூறுகிறார்.

7 சோலார் ஆய்வகங்கள் மூடல்!  பறக்கும் தட்டுகள் காரணமா?

இதன் காரணமாகவே ஆய்வகங்கள் மூடப்பட்டன என நம்பும் யூ.எப்.ஓ சைட்டிங் இணையதளம், "அந்த புகைப்படத்தில் உள்ள பொருள் லென்ஸின் ஒளி அல்லது கேமராவில் உள்ள லென்ஸின் எதிரொளிப்பாக இல்லாமல் இருந்து, மிகப்பெரிய தாய் விண்கலம் மற்றும் சிறிய பறக்கும் தட்டுகளின் கூட்டமாக இருந்தால், இந்த ஏழு சோலார் ஆய்வகங்களை திடீரென மூடுவதற்கான காரணங்கள் வேறென்னவாக இருக்கும்" கேள்வியெழுப்புகிறது.

இந்த ஆய்வகங்களை நடத்தும் நிறுவனமான வானியல் ஆய்விற்கான பல்கலைகழகங்களின் கூட்டமைப்பு(Association of Universities for Research in Astronomy -AURA), இதுவரை அமைதிகாத்து வந்த நிலையில், தற்போது வாய் திறந்துள்ளது. மேலும் குற்ற நடவடிக்கைகளுக்காக ஒரு பணியாளர்நீக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் இந்த வாரம் பணிக்கு திரும்புவார்கள் எனவும் கூறியுள்ளது.

7 சோலார் ஆய்வகங்கள் மூடல்!  பறக்கும் தட்டுகள் காரணமா?

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "சேக்ரமெண்டோ பீக்-ல் நடைப்பெற்ற குற்ற நடவடிக்கைகளுக்கான சட்டப்பூர்வ விசாரணைக்கு இந்நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்த விசாரணையின் போது பணியாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என கருதியதால், சிறிய அளவிலான பணியாளர்களை மட்டும் வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டது" என விளக்கமளித்துள்ளது.
Best Mobiles in India

English summary
ALIEN conspiracy UFO spotted near Sun as SEVEN solar observatories close down: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X