ஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்!

|

அமெரிக்க அரசாங்கம் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை மறைக்கும் இடமான ஏரியா 51, சதிகோட்பாட்டாளர்களை நீண்ட நாட்களாக தூங்கவிடாமல் செய்யும் ஒரு விசயம்.

வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு

வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு

1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் நகருக்கு அருகில் வெளிப்படையாக வானிலை பலூன் ஒன்று மோதிய போது இந்த சந்தேகங்கள் அனைத்தும் தொடங்கியது. அமெரிக்க அரசு அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக வானிலை பலூன் என அறிவிக்கப்பட்டாலும், பலரும் அது வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு எனவும், அப்போதிருந்து அமெரிக்க அரசாங்கம் ஏலியன்கள் பற்றிய ரகசியங்களை மறைத்து வைத்திருப்பதாக நம்புகின்றனர்.

புயலென ஏரியா 51-ஐ தாக்குவோம்

புயலென ஏரியா 51-ஐ தாக்குவோம்

எனினும் தற்போது பொதுமக்கள் அதற்கு உண்மையான பதில்களை கோரிவருகின்றனர். "புயலென ஏரியா 51-ஐ தாக்குவோம், அவர்களால் நம் அனைவரையும் நிறுத்த முடியாது"(Storm Area 51, They Can't Stop All of Us) என்று அழைக்கப்படும் பேஸ்புக் நிகழ்வில் இதுவரை 2,80,000 நபர்கள் கலந்துகொள்ள பதிவு செய்தநிலையில், தொடர்ந்து மேலும் பலர் பதிவுசெய்து வருகின்றனர்.

 செப்டம்பர் 20 ம் தேதி

செப்டம்பர் 20 ம் தேதி

மேலும் 3,10,000 நபர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள பேஸ்புக்கில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அந்த குழுவின் விளக்கத்தின் படி, பங்கேற்பாளர்கள் அருகேயுள்ள பகுதியில் சந்தித்து, செப்டம்பர் 20 ம் தேதி உயர் இரகசிய தளத்தை முற்றுகையிடவுள்ளனர்.

இந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.!இந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.!

ஏரியா 51 ஏலியன் சென்டர் டூரிஸ்ட் அட்ராக்சன்

ஏரியா 51 ஏலியன் சென்டர் டூரிஸ்ட் அட்ராக்சன்

இந்த நிகழ்வு தொடர்பான விளக்கத்தில் "நாங்கள் அனைவரும் ஏரியா 51 ஏலியன் சென்டர் டூரிஸ்ட் அட்ராக்சன் அருகே சந்தித்து ஒருங்கிணைந்து செல்வோம். ஈடுபடுகிறோம், எங்கள் இடுகை ஒருங்கிணைக்கிறோம், நாங்கள் நருடோ முறையில் ஓடினால், அவர்களது தோட்டாக்களை விட வேகமாக எங்களால் நகர முடியும். அவர்களது ஏலியன்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். "கூறப்பட்டுள்ளது.

 கிண்டலுக்காக அல்லது நகைச்சுவைக்காக

கிண்டலுக்காக அல்லது நகைச்சுவைக்காக

உண்மையில் கிண்டலுக்காக அல்லது நகைச்சுவைக்காக 'Sh**posting cause im in shambles' என்ற குழுவால் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வை, பலரும் இன்னமும் விளையாட்டானது என புரிந்துகொள்ளவில்லை.

இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).!இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).!

முன்னெச்சரிக்கை திட்டம்

முன்னெச்சரிக்கை திட்டம்

ஒரு பேஸ்புக் பயனர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் " நீங்கள் யாரும் இன்னமும் இராணுவ ஆயுதங்களை பற்றி புரிந்து கொள்ளவில்லை என வெளிப்படையாக தெரிகிறது. ஏற்கனவே நடைபெற்றுள்ள இதுபோன்ற விஷயங்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை திட்டம் இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 விளையாட்டான நகைச்சுவை என்று நான் அறிந்திருக்கிறேன்

விளையாட்டான நகைச்சுவை என்று நான் அறிந்திருக்கிறேன்

"இது ஒரு விளையாட்டான நகைச்சுவை என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் உண்மையில் இதை முன்னெடுத்தீர்கள் என்றால் வரலாற்றில் சிறந்த மிகப்பெரிய சிறைவைப்பு மற்றும் மிகமோசமான பெரிய தற்கொலை ஓட்டத்திற்கு பொறுப்பாளியாக இருப்பீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் கூறுகையில்: "யாராவது ஒருவர் இந்த நிகழ்வை பேஸ்புக் லைவ் செய்து, எப்போது நீங்கள் அனைவரும் சிறைக்கு செல்கிறீர்கள் அல்லது சுடப்படுகிறீர்கள் என காண்பித்தால், ஏன் யாரும் இதை ஒருபோதும் முயற்சித்ததில்லை என்பதை நாம் அறிய முடியும்." என கிண்டலடித்துள்ளார்.

வைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்! கரும்புள்ளியின் பின்னணி இதுதான்!வைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்! கரும்புள்ளியின் பின்னணி இதுதான்!

அப்படியொரு தளம் இருப்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை

அப்படியொரு தளம் இருப்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை

1955 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் விமான போக்குவரத்து அதிகாரிகளால் ஏரியா பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் உயர் மட்ட பாதுகாப்பு அனுமதி இல்லாதவர்கள் அங்கு நுழைய முடியாது.


இருப்பினும் அமெரிக்க அரசாங்கம் 2013 ஆம் ஆண்டு வரை அப்படியொரு தளம் இருப்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை. தகவல் சுதந்திரக் கோரிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலமே இந்த ஏரியா51 இருப்பது வெளியுலகிற்கு தெரிந்தது. மேலும் அது ஆயுதமேந்திய காவலர்களால் கடுமையாக பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Air Force 'ready to protect America and its assets' over Area 51 event : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X