கிமு 550–330 காலத்தின் பண்டைய மொழியை மொழிபெயர்க்க AI-க்கு கோச்சிங் கிளாஸ்!

|

சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கிமு 550-330 காலத்தைச் சேர்ந்த பண்டைய கால களிமண் அச்சில் காணப்படும் பண்டைய கால எழுத்தைத் தானாகவே படிக்கக் கூடிய இயந்திர கற்றல் முறையை AI - ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் கூடிய புதிய முறையை உருவாக்கி வருகின்றனர்.

பண்டைய கால எழுத்துக்களை கியூனிஃபார்ம்

பண்டைய கால எழுத்துக்களை கியூனிஃபார்ம்

கிமு 550-330 காலத்தைச் சேர்ந்த பண்டைய ஈரானிய அச்செமனிட் பேரரசில் பயன்படுத்தப்பட்ட களிமண் அச்சில் இருக்கும் எழுத்துக்களை கியூனிஃபார்ம் செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி டீப்ஸ்கிரைப் அமைப்பு ஆரம்பத்தில் படியெடுப்பதில் கவனம் செலுத்தும் என்று சிகாகோ பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது உள்ள கணினிகளால் சிக்கல்

தற்பொழுது உள்ள கணினிகளால் சிக்கல்

தற்போதுள்ள கணினி அமைப்புகள் இந்த பண்டைக்கால ஸ்கிரிப்டிங்கை மொழிபெயர்க்கச் சிரமப்பட்டுப் போராடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணமாக அதன் சிக்கலான எழுத்துக்கள் மற்றும் அவை எழுதப்பட்ட 3D வடிவம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?

AI மூலம் தீர்வு காணமுடியும் சிகாகோ பல்கலைக்கழகம்

AI மூலம் தீர்வு காணமுடியும் சிகாகோ பல்கலைக்கழகம்

டேப்லெட் வடிவத்தில் இருக்கும் களிமண் எழுத்துக்கள் சிக்கலை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் மற்றும் அதன் கணினி அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தங்களின் கணினி அமைப்பு இந்த பண்டைக்கால எழுத்துக்களை சிறப்பாக மொழிபெயர்த்து செயல்படும் என்று கருதுகின்றனர்.

6,000-க்கும் மேற்பட்ட பண்டைக்கால சிறுதொகுப்புகள்

6,000-க்கும் மேற்பட்ட பண்டைக்கால சிறுதொகுப்புகள்

இந்த எழுத்துக்களைப் படிக்கும் மாதிரியை உருவாக்க, இவர்கள் பெர்செபோலிஸ் வலுவூட்டல் தகவல்களிலிருந்து 6,000-க்கும் மேற்பட்ட சிறுகுறிப்பு படங்களின் தொகுப்பை இவர்கள் பயன்படுத்தி, AI கணினிக்குப் பயிற்றுவிக்கின்றனர் என்று கூறியுள்ளனர். இதற்கு முன்னர் பகுப்பாய்வு செய்யப்படாத தொகுப்பில் உள்ள பல எழுத்துக்களைப் படிக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது.

Google டிப்ஸ்: Gmail-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா., இத்தனை நாளா தெரியாம போச்சே!Google டிப்ஸ்: Gmail-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா., இத்தனை நாளா தெரியாம போச்சே!

புதிய ரகசியங்களை கண்டறிய முடியும்

புதிய ரகசியங்களை கண்டறிய முடியும்

இதன் மூலம் அச்செமனிட் வரலாறு, சமூகம் மற்றும் மொழி பற்றிய புதிய ரகசியங்களை இந்த AI அமைப்பு மூலம் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதேபோல், இது AI கற்றுக்கொள்ளும் தகவல்களை வைத்து மற்ற பழங்கால எழுத்து வடிவங்களையும் கூட மொழிபெயர்க்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

100,000 க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் மூலம் கோச்சிங் கிளாஸ்

100,000 க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் மூலம் கோச்சிங் கிளாஸ்

கடந்த காலத்தை மொழிபெயர்த்து புதிய ரகசியங்களைத் தெரிந்துகொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல, இதற்கு ஏராளமான தகவல்கள் தேவை, இதனால் தான் இவர்கள் உருவாக்கும் AI பயன்பாட்டிற்கு சுமார் 100,000 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பண்டைக்கால அடையாளங்களின் எழுத்துக்கள் மற்றும் தரவுகளை கற்பித்து வருகின்றனர். இந்த தரவுகள் பயிற்சி தரவு ஆராய்ச்சியாளர்களால் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பில் மிரட்டல் காட்டும் AI

மொழிபெயர்ப்பில் மிரட்டல் காட்டும் AI

சிகாகோ பல்கலைக்கழகத்தின் இந்த புதிய AI கணினி அறிவியல் துறையின் பேராசிரியர் சஞ்சய் கிருஷ்ணன் தலைமையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சிறுகுறிப்பு தரவுத்தொகுப்பைப் பயன்படுத்தி மற்ற அச்சுகளில் உள்ள எழுத்துக்களையும் படிக்க முடியும்படி AI பயன்பாட்டைப் பயிற்றுவித்திருக்கிறார். இந்த AI தற்பொழுது பண்டைக்கால எழுத்துக்களை 80% துல்லியத்துடன் புரிந்துகொள்கிறதாம்.

இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!

துல்லிய விகிதத்தை அதிகரிக்க முடிவு

துல்லிய விகிதத்தை அதிகரிக்க முடிவு

இந்த AI கணினியின் துல்லிய விகிதத்தை மேம்படுத்த சிக்காகோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் குழு மேலும் ஆராய்ச்சி செய்தி வருகிறது. இதன் மூலம் தோற்றம் அறியப்படாத கலைப்பொருட்களின் மூலத்தைத் தீர்மானிக்கவும் இது உதவக்கூடும் என்று நம்புகின்றனர்.

Best Mobiles in India

English summary
AI System Could Uncover New Secrets About The Past From Ancient Languages : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X