Home
Scitech

கில்லாடி ஏ.ஐ உதவியுடன் பிரபஞ்ச மாதிரியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!

முதல் முறையாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மற்றும் கடினமான முப்பரிமாண உருவகப்படுத்துதலை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளனர். இது ஆழ் அடர் இடப்பெயர்ச்சி மாதிரி(Deep Density Displacement Model) அல்லது D3M என்று அழைக்கப்படுகிறது.

பெட்டியில் பிரபஞ்ச மாதிரியை உருவாக்கிய விஞ்ஞானிகள் & கில்லாடி ஏ.ஐ!

அது மிகவும் வேகமாகவும் மிகவும் துல்லியமாகவும் செயல்படும் நிலையில், இதை வடிவமைத்த வான் இயற்பியலாளர்களுக்கு கூட எவ்வாறு, எப்படி இது இப்படி செயல்படுகிறது என புரியவில்லை.

30 மில்லி செகெண்டில் பிரபஞ்சம்

30 மில்லி செகெண்டில் பிரபஞ்சம்

பல பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பிரபஞ்சத்தை எவ்வாறு ஈர்ப்புவிசை வடிவமைத்தது என இது துல்லியமாக உருவகப்படுத்தி காண்பித்துள்ளது. மற்ற சில உருவகப்படுத்துதல்களுக்கு எடுக்கும் 1 நிமிடத்தை ஒப்பிடுகையில், இதில் ஒவ்வொரு உருவகமும் வெறும் 30 மில்லி செகெண்டுகளை மட்டுமே எடுக்கிறது.

8,000 பயிற்சி உள்ளீடுகள்

8,000 பயிற்சி உள்ளீடுகள்

மேலும் இன்னும் கவர்ச்சிகரமான, D3Mஆனது அதன் குழுவால் உள்ளீடு செய்யப்பட்ட 8,000 பயிற்சி உருவகப்படுத்துதலில் இருந்து கற்று, அவற்றை பரவலாக பொதுப்படுத்தி, சிறப்பாக செயலாற்றியதுடன், பயிற்சி பெறாதவற்றிலும் அளவுருக்கள் சரிசெய்யும் திறனையும் பெற்றது.

புகைப்படம் கண்டறியும் மென்பொருள்

புகைப்படம் கண்டறியும் மென்பொருள்

"நிறைய பூனைகள் மற்றும் நாய்களின் படங்களை பயன்படுத்தி புகைப்படம் கண்டறியும் மென்பொருளைப் ( image recognition software) கற்பிக்கும் போது, அது யானைகளை அடையாளம் காண முடிவதை போன்றது இது" என்கிறார் ஃப்ளாட்டிரான் இன்ஸ்டியூட் அண்ட் கார்னேஜி மெல்லன் பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியலாளர் ஷெர்லி ஹோ.

மிகவும் எளிதானது பிரபஞ்சம்

மிகவும் எளிதானது பிரபஞ்சம்

"இது எப்படி இவ்வாறு செயல்படுகிறது என யாருக்கும் தெரியாது மற்றும் இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய மர்மம்" என்கிறார். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் பற்றி ஆய்வுகள் அதன் பரிணாமத்தைப் பற்றிய நிறைய தகவலை வழங்க முடியும். ஆனால் நாம் பார்க்கக்கூடியவற்றிற்கு வரம்புகளும் உள்ளன. இதனால்தான் உருவாகப்படுத்துதல் மிகவும் எளிதானது.

பிரபஞ்சம் உருவானது எப்படி?

பிரபஞ்சம் உருவானது எப்படி?

உருவகப்படுத்துதலை இயக்குவதன் மூலம் நமது ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகும் முடிவுகளை உருவாக்குவதுடன், நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது போன்ற சூழல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியும்.

ஆயிரக்கணக்கான உருவகப்படுத்துதல்கள் தேவை

ஆயிரக்கணக்கான உருவகப்படுத்துதல்கள் தேவை

ஆனால் நம் பிரபஞ்சத்தின் சிக்கலான வரலாற்றினை இத்தகைய உருவகப்படுத்துதல்கள் மூலம் கணக்கிடுதலால், இதன் விளைவாக அவை இயங்க நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு ஆய்வு ஆயினும் பயனுள்ள புள்ளிவிவர தரவு பெறுவதற்காக ஆயிரக்கணக்கான உருவகப்படுத்துதல்கள் தேவைப்படும்.

13.8 பில்லியன் ஆண்டு பிரபஞ்சம்

13.8 பில்லியன் ஆண்டு பிரபஞ்சம்

இங்கு தான் வான் இயற்பியலாளர்களின் சர்வதேச குழு D3M ஐ உருவாக்கினர்.இது 13.8 பில்லியன் ஆண்டுகளாக (பிரபஞ்சத்தின் வயது), ஈர்ப்புவிசை எப்படி பில்லியன்கணக்கான புவியியல் துகள்கள் விண்வெளியில் நகர்த்துகிறது என கணக்கிடுகிறது.

300 மணிநேர வடிவமைப்பு

300 மணிநேர வடிவமைப்பு

நாம் ஒரு செயற்கை நுண்ணறிவு இல்லாமல் இயங்கும் மென்பொருள் மூலம் இந்த துகள் இயக்கத்தை உருவகப்படுத்தப்பட்டிருந்தால், அது ஒற்றை மற்றும் மிகவும் துல்லியமான உருவகப்படுத்துதலுக்கான கணிப்பிற்கு 300 மணிநேர வரை எடுத்திருக்கும்; இதை ஒரு சில நிமிடங்களில் கூட செய்ய முடியும். ஆனால் துல்லியம் மிகவும் பாதிக்கப்படும்.

8000 வெவ்வேறு உருவகங்கள்

8000 வெவ்வேறு உருவகங்கள்

இந்த சிக்கலை சமாளிக்க ஆராய்ச்சி குழு, உருவகப்படுத்துதல் இயங்கும் வகைமில் ஒரு நடுநிலையான வலையமைப்பை உருவாக்க முடிவு செய்து, D3M க்கு மிக உயர்ந்த துல்லியத்தை வழங்கிய அமைப்பின் 8000 வெவ்வேறு உருவகப்படுத்துதல்களை உள்ளீடு செய்து பயிற்சியளித்தனர்.

பெட்டியில் பிரபஞ்சம் உருவாக்கிய ஏ.ஐ

பெட்டியில் பிரபஞ்சம் உருவாக்கிய ஏ.ஐ

D3M இன் பயிற்சி முடிந்ததும், செயற்கை நுண்ணறிவு துல்லியமாக இயங்கிக்கொண்டிருந்தநிலையில், ஒரு சோதனை இயக்ககத்தை எடுத்துக் கொள்ள தயாராக இருந்தது. ஒரு பக்கத்திறகு 600 மில்லியன் ஒளி-ஆண்டுகள் வீதம் ஒரு பெட்டியில் பிரபஞ்சத்தை உருவகப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் அதை கேட்டனர்.

9.3 சதவிகித பிழை

9.3 சதவிகித பிழை

அதன் வெளியீட்டை மதிப்பிடுவதற்காக, ஆராய்ச்சி குழு நூற்றுக்கணக்கான மணிநேரம் எடுக்கும் பழைய முறையிலும் அதே உருவகப்படுத்துதலை இயக்கியது மற்றும் இந்த புதிய முறை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுத்தது. எதிர்பார்த்தபடி, மெதுவான முறை மிகவும் துல்லியமான விளைவுகளை உருவாக்கியது. அதே நேரத்தில் விரைவான முறையில் 9.3 சதவிகித பிழை இருந்தது.

ஆராய்ச்சி குழுவின் புதிய ஆராய்ச்சி

ஆராய்ச்சி குழுவின் புதிய ஆராய்ச்சி

ஆனாலும் புதிய முறையில் விரைவாக பல்வேறு உருவகப்படுத்ததுதலை செயற்கை நுண்ணறிவு செய்யமுடிகிறது என்பதால், எவ்வாறு இதை செய்கிறது என ஆராய்ச்சி குழு கண்டறிய முயன்றுவருகிறது.

Best Mobiles in India

English summary
AI Simulates The Universe And Not Even Its Creators Know How It's So Accurate : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X