Home
Scitech

ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!

இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதும் கேலக்ஸிகள் (Galaxy) உள்ளதா? மனிதனைத் தவிர வேறு ஏதும் உயிரினங்கள் மற்ற கிரகங்கள் மற்றும் கேலக்ஸிகளில் உள்ளதா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

ஏலியன்கள் (Alien) இருப்பது உண்மையா? அல்லது பொய்யா? என்பதும், இன்றுவரை நிரூபிக்கப்படாத ஒரு உண்மையாகவே இருக்கிறதென்று தான் நாம் கூற வேண்டும். ஏலியன்களின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சியில் இதுவரை பல ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், ஏன் சில சதிக்கோட்பாளர்களும் கூட ஈடுபட்டிருப்பதை நாம் அறிந்திருப்போம்.

ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்! வாய் பிளந்த விஞ்ஞானிகள்

ஏலியன் இருக்கிறதா? இல்லையா? உண்மையை சொன்ன AI ரோபோட்கள்.!

ஆனால், உலக வரலாற்றில் முதல் முறையாக ஏலியன் இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறியச் செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) என்ற AI ரோபோட்களை பணியாற்றக் களமிறக்கி இருக்கும் சம்பவம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரியாதென்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். ஏலியனின் இருப்பை உறுதி செய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

AI ரோபோட்களை மனிதன் இப்போது வரை ஆய்வுக் கட்டுரைகள் எழுத, இசை அமைக்க, படம் வரைய என்று சில மனிதனின் அன்றாட செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபடுத்தி வந்து கொண்டிருந்தான். ஆனால், இப்போதோ.. கண்டுபிடிக்க முடியாத சில சிக்கலான ஆராய்ச்சிகளிலும் மனிதன், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸின் உதவியை நாட துவங்கிவிட்டான். அப்படி, மனிதனுக்குப் பல காலமாக விடை கிடைக்காத ஒரு மர்ம புதிர் தான் 'ஏலியன்கள்'.!

இதற்கான விடையை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், பல திடுக்கிடும் தகவலை AI ரோபோட்கள் வெளிகொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேச்சர் ஆஸ்ட்ரானமி (Nature Astronomy) என்ற அறிவியல் பத்திரிக்கையில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI), ஏலியன்களில் இருந்து வெளிவரும் ரேடியோ சிக்னல்களில் (Radio Signal) ஒளிந்துள்ள டெக்னோ சிக்னேச்சர்களை (Technosignature) கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்! வாய் பிளந்த விஞ்ஞானிகள்

ஏலியன்கள் இருப்பதற்கான சான்றா இந்த டெக்னா சிக்னேச்சர்கள்?

இது ஏலியன்கள் இருப்பதற்கு ஒரு சான்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக, பல ஆராய்ச்சி நிறுவனங்கள், ஏலியன் டெக்னாலஜியின் டெக்னோ சிக்னேச்சர்களை கண்டறிய முடியுமா? என்று போராடி வருகின்றன. அந்த வகையில், நீண்ட காலமாக போராடி வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இப்போது ஒரு விடை AI ரோபோட்கள் மூலம் கிடைத்துவிட்டது. உண்மையில், இந்த ஆய்வு ஒரு முக்கியமான மைகல் என்று கூறப்படுகிறது.

டொரன்டோ பல்கலைக்கழகத்தின் (University of Toronto) இளங்கலை மாணவர் பீட்டர் மா என்பவர் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில், முற்றிலுமாக மனிதர்களின் ஈடுபாடு இல்லாமல் வெறும் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கொண்டு மட்டுமே, ஏலியன் டெக்னாலஜியின் டெக்னோ சிக்னேச்சர் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மனிதனுக்குப் புரியாத விஷயங்களை எப்படி இந்த AI ரோபோட்கள் புரிந்துகொண்டு, டெக்னோ சிக்னேச்சர்களை கண்டுபிடித்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிக்கு 2016 ஆம் ஆண்டு சர்ச் ஃபார் எக்ஸ்ட்ரா டெர்ரஸ்டியல் இன்டெலிஜென்ஸ் (Search for Extraterrestrial Intelligence) என்ற கல்வி நிறுவனத்தில் சேகரிக்கப்பட்ட டெலஸ்கோப் டேட்டாக்கள் (Telescope Data) பயன்படுத்தப்பட்டது. அந்த டேட்டாக்களில் இருந்து இதுவரை கவனிக்கப்படாத முக்கியமான எட்டு சிக்னல்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கண்டறிந்துள்ளது என்பது கூடுதல் ஆச்சரியம்.

ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்! வாய் பிளந்த விஞ்ஞானிகள்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் 8 ஏலியன் சிக்னலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.!

இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பாரம்பரிய முறைகள் அல்லாத நியூரல் நெட்வொர்க் (Neural Network) மூலம் செயல்படுகிறது. எனவே பாரம்பரிய முறைகளால் கண்டறிய முடியாத சிக்னல்களை இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கண்டறிந்துள்ளது என்று இந்த ஆய்வு கட்டுரையின் முதன்மை எழுத்தாளர் பீட்டர் மா தெரிவித்துள்ளார்.

ஏலியன் டெக்னாலஜியில் இருந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் கண்டறியப்பட்ட இந்த எட்டு சிக்னல்களும், ஏலியன் இருப்பதை முற்றிலுமாக உறுதி செய்யாது என்றாலும் கூட, ஆராய்ச்சியாளர்களை ஏலியன் டெக்னாலஜிக்கு அருகில் கொண்டு சென்றுள்ளது என்று கூறலாம்.

ஒருவேளை இது ஏலியன்களில் இருந்து வெளியிடப்பட்ட சிக்னல்கள் தான் என்பதை உறுதி செய்தாலும் கூட, ஏலியனின் எந்த டெக்னாலஜியுடன் இந்த சிக்னல்கள் உருவாக்கப்பட்டது என்பதனை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதிகள் இன்றைய சூழ்நிலையில் நம்மிடம் இல்லை என்பதை உண்மை. இருப்பினும், இந்த சிறிய துணுக்கு பெரிய மாற்றத்தை கொண்டுவரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
AI Robot Finds Eight Technosignatures That Could Be Coming From Alien Technology
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X