நாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.!

சுவாரசியம் என்னவெனில் அந்த கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.

|

ஒரு நம்பமுடியாத சாதனை, அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி (Physical Research Laboratory - PRL) விஞ்ஞானிகள், பூமியில் இருந்து சுமார் 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை (K2-236b) கண்டுபிடித்திருக்கிறார்கள். சுவாரசியம் என்னவெனில் அந்த கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.

'சப்-சாட்டர்ன்' அல்லது 'சூப்பர்-நெப்டியூன்' என்று கருதப்படும் இந்த கிரகத்தின் எடையானது, பூமியை விட 27 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் ஆரம் பூமியை விட ஆறு மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த அசாத்தியமான கண்டுபிடிப்பால், நட்சத்திரங்களைச் சுற்றி வரும் சில கிரகங்களை கண்டுபிடித்த சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

கிரகங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றன.?

கிரகங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றன.?

முதலில், ஒரு விண்வெளி பொருளானது எப்படி கிரகம் என்கிற அந்தஸ்த்தை பெறுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யாதொன்றும் கம்பசூத்திரம் அல்ல, இகவும் எளிமையானது தான். ஒரு குறிப்பிட்ட விண்வெளி பொருளானது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும் பட்சத்தில் அது ஒரு கிரகம் என்கிற அந்தஸ்த்தை அடைகிறது.

நாசாவின் கெப்ளர் -2 கண்களில் ஏன் சிக்கவில்லை.?

நாசாவின் கெப்ளர் -2 கண்களில் ஏன் சிக்கவில்லை.?

இப்படியான சுழற்சியில் குறிப்பிட்ட கிரகமானது ஒவ்வொரு முறையும் நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது தன்னை தானே மறைத்துக்கொள்ளும். அம்மாதிரியான ஒரு சூழலில் தான், அண்டத்தில் இருக்கும் இதர கிரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தினை கொண்ட நாசாவின் கெப்ளர் -2 கண்களில் EPIC 211945201/K2-236 ட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஒளி காரணமான கிரகத்தின் சரியான அளவை கணக்கிட முடியவில்லை.

அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி எப்படி, எங்கு நுழைந்தது.?

அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி எப்படி, எங்கு நுழைந்தது.?

புதிய கிரகத்தின் துல்லியமான விவரங்களை சேகரிக்க முடியாத தருணத்தில் நாசாவிற்கு இன்னும் சில உறுதிப்படுத்தல் தேவைப்பட்டது. இந்த இடத்தில் தான் இந்தியாவின் அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி உள்நுழைகிறது. சரியாக ஒன்றரை வருடங்களாக, பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரியின் விஞ்ஞானிகள், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட பாரஸ் ஸ்பெக்ட்ரோகிராப் (PARAS spectrograph) வழியாக குறிப்பட்ட கிரகத்தை வடிவத்தை அளவிட்டுள்ளார்.

பனி, சிலிக்கேட் மற்றும் இரும்பு.!

பனி, சிலிக்கேட் மற்றும் இரும்பு.!

குறிப்பிட்டுள்ள பாரஸ் ஸ்பெக்ட்ரோகிராப்பை, மௌண்ட் அபுவில் உள்ள பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரியின் குரூஷிகார் அப்ஸ்வரேட்டரியின் 1.2மீ தொலைநோக்கியுடன் இணைத்தின் விளைவாக K2-236b கிரதத்தின் தோராயமான எடை அளவிடப்பட்டுள்ளது. அளவை மட்டுமின்றி அந்த கிரகத்தின் எடையில், பனி, சிலிக்கேட் மற்றும் இரும்பு போன்ற கனரக கூறுகள் தான் 60% -70% வரை காணப்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற முக்கிய கண்டுபிடிப்புகள்

மற்ற முக்கிய கண்டுபிடிப்புகள்

மேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள K2-236b ஆனது அதன் அருகாமை நட்சத்திரமான, EPIC 211945201 / K2-236 உடன் - பூமி மற்றும் சூரியனை ஒப்பிடும் போது - ஏழு மடங்கு நெருக்கமாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஒரு முழுமையான சூரிய சுழற்சிக்கு, பூமியானது 365 நாட்கள் எடுத்துக்கொள்வது போல, அது வெறும் 19.5 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

இந்த கண்டுபிடிப்பின் உண்மையான அர்த்தம் என்ன.?

இந்த கண்டுபிடிப்பின் உண்மையான அர்த்தம் என்ன.?

K2-236b கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது சுமார் 600 டிகிரி செல்சியஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆக இதில் ஜீவராசிகள் வசிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இத்தகைய சூப்பர் நெப்டியூன் அல்லது துணை சனி கிரகங்கள் எப்படி உருவாக்கம் பெறுகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியும். அது முக்கியமான ஆராய்ச்சி என்கின்றன விஞ்ஞானிகள்.

நாசாவினால் அல்ல, இந்தியாவினால்.!

நாசாவினால் அல்ல, இந்தியாவினால்.!

இந்த கண்டிபிடிப்பானது ஏற்கனவே இதேபோன்று அறியப்பட்ட 22 ஒத்த முறைமைகளை - அதாவது 10-70 புவிசார் எடை மற்றும் 4-8 புவி ஆரம் - கொண்டுள்ள கிரகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பிரதான சிறப்பம்சம் என்னவெனில், இந்த கிரகம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் அல்ல, இந்தியாவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள

Best Mobiles in India

English summary
Ahmedabad's Physical Research Laboratory have discovered a planet. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X