சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் நடந்த 72வது சுதந்திர தினவிழாவில் பிரமர் மோடி பேசினார். அவர் பேசி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் தமிழகம் முன்னோடி

|

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

தற்போது ஓரளவு அரசு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்க அனைத்து செயல்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றது.

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் நடந்த 72வது சுதந்திர தினவிழாவில் பிரமர் மோடி பேசினார்.

அவர் பேசி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் தமிழகம் முன்னோடியாகவும் மாறிவிட்டது. இதில் தமிழகம் டிரோன்களை பயன்படுத்திய பூச்சி மருந்து அடித்தல், விவசாயத்தில் சேலைட் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தவும் துவங்கி விட்டது தமிழ்நாடு.

72வது சுதந்திர தின விழா:

72வது சுதந்திர தின விழா:

கடந்தாண்டு டெல்லி செங்கோட்டையில் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழாவில் பிரதமர் மோடி விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பேசினார்.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாகி வருவதால், இந்த துறையும் வளர்ச்சி பெறும் என்று பொது மக்கள் நம்பினர். ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறை, அதிக கூலி போன்ற பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினர்.

டிஜிட்டல் இந்தியா:

டிஜிட்டல் இந்தியா:

டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா நுழைய துவங்கிட்டது. வேளாண்மையில் மற்றும் சுணக்கமாக இருந்து வருகின்றது.

நடுத்தர, ஏழை விவசாயிகள் எப்போது இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நினைத்தனர். இந்நிலையில், டிரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வெற்றிகண்ட விவசாயிகள் அடுத்த தலைமுறை நகர்வுக்கு களமிறங்கி விட்டனர்.

மத்திய அரசு திட்டங்கள்:

மத்திய அரசு திட்டங்கள்:

மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்திற்கு போதிய அளவு வந்து சேராது. ஹிந்தி எதிர்ப்பின் பின்னணி உள்ளதால், இதுபோன்று திட்டங்கள் தமிழகத்திற்கு பாரா முகமாக இருக்கின்றன.

கிஸான் உள்ளிட்ட திட்டங்கள் பயன்படுவதாக இருப்பதில்லை. தற்போது நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி, பருவ நிலை மாற்றம் ஆகியற்றை கொண்டு டிஜிட்டல் விவசாயத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

 நவீன தொழில்நுட்பம்:

நவீன தொழில்நுட்பம்:

விவசாயத்திற்காக ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். மூலம் மோட்டாரை ஆன் செய்வது, பிறகு அதே முறையில் ஆஃப் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் சொட்டுநீர் பாசன முறையிலேயே, பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பம் வந்துள்ளது.

சேட்லைட் படம்:

சேட்லைட் படம்:

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையகமாகப் கொண்ட கன்சர்வாட்டர் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் வேளாண்துறையில் செயற்கைக்கோள் சேவையைப் பயன்படுத்தி வருகிறது. பல செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி 5 முதல் 10 நொடிகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுக்கிறது.

 புதிய தொழில் நுட்பம்:

புதிய தொழில் நுட்பம்:

அதன் சேவையையும், ஈரப்பதம், மழை, வெயில், வானிலை உள்ளிட்டவை உணரும் சென்சார்களையும் கொண்டு மொபிடெக் என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

ஸ்மார்ட்போனுக்கு தகவல்:

ஸ்மார்ட்போனுக்கு தகவல்:

குறிப்பிட்ட கருவியை நிறுவி, அதில் மண்ணின் வகை, நிலத்தின் பரப்பு, ஒவ்வொரு குறிப்பிட்ட அளவு பரப்பிலும் என்ன வகையான பயிர் என்பதை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த அனைத்து நுட்பங்களையும் உள்ளெடுக்கும் தொழில்நுட்பம், எப்போது பயிருக்கு நீர் தேவை, எவ்வளவு நீர் தேவை, எந்த பகுதியில் உள்ள மோட்டாரை ஆன் செய்து சொட்டு நீர் பாய்ச்ச வேண்டும் என ஸ்மார்ட்போனில் அறிவிக்கை அளிக்கிறது.

ஏஐ தொழில் நுட்பம்:

ஏஐ தொழில் நுட்பம்:

அதன் அடிப்படையில் மோட்டாரை ஆன் செய்ய பணித்தால், சில விநாடிகளில் நீரைப் பாய்ச்சுகிறது. என்ன பயிருக்கு எத்தனை நிமிடங்கள் நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்பதையும் அதே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அறிந்துகொள்ளலாம்.

புகைப்படம் எடுக்கும்:

புகைப்படம் எடுக்கும்:

வேலையாள் பற்றாக்குறை, நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட நேரங்களில் இது பயன்படுவதாக சோதனைமுறையில் பயன்படுத்தும் விவசாயி தெரிவித்துள்ளார். இதேபோல் நோய்த்தாக்குதலையும் செயற்கைக்கோள் புகைப்படம் அடிக்கடி எடுக்கும் புகைப்படம் கண்டறிந்து மொபைல் மூலம் அறிவிக்கும் என தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேவையில் அளிக்கும்:

சேவையில் அளிக்கும்:

50 ஆயிரம் செலவளித்து கருவி பொருத்தினால் 750 ஏக்கர் வரை கண்காணிக்கலாம் எனவும் ஆண்டுக்கு 500 ரூபாய் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மொபிடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை ஒரு முறை வாங்கி, அருகருகே நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் கூட்டாக சேர்ந்து பயன்படுத்தினாலும் அனைவரின் ஸ்மார்ட்போன்களுக்கும் சம்பந்தப்பட்ட அறிவிக்கைகளை அனுப்பமுடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 ஈரோட்டில் அறிமுகம்:

ஈரோட்டில் அறிமுகம்:

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிருக்கேற்ப அளவான நீரை சொட்டு நீர் பாசனம் செய்யும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஈரோட்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூக்கு மேல் விரல்-மோடிஜி:

மூக்கு மேல் விரல்-மோடிஜி:

மத்திய அரசு இந்த திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் முன்பே தனியார் உதவியுடன் தமிழக விவசாயிகள் தங்களின் டிஜிட்டல் விவசாயத்தை செயல்படுத்த துவங்கி விட்டனர். இதை கண்டு பிரமர் மோடி என்னா தமிழ்நாடு நமக்கு முன்னோடி மாநிலமாக இருக்கின்றது மூக்கு மேல் கை வைத்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Agriculture Using Satellite Technology tamilnadu narendra modi : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X