லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வரும் தேஜாஸ்; எதிரி நாடுகள் உஷார்!

தேஜாஸ் விமானத்தின் அனைத்து கட்ட சோதனைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி இந்த தகவலை உறுதி செய்து உள்ளார்.

|

லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் (எல்சிஏ) ஆன தேஜாஸ் போர் விமானம் ஆனது கூடிய விரைவில் இந்திய விமான படையில் அறிமுகமாகி, விமானப்படை பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தேஜாஸ் விமானத்தின் அனைத்து கட்ட சோதனைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி இந்த தகவலை உறுதி செய்து உள்ளார்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வரும் தேஜாஸ்; எதிரி நாடுகள் உஷார்!

அறிமுகமாக உள்ள தேஜாஸ் போர் விமானத்தில் ஏர்போர்ன் எர்லி வார்னிங் அன்ட் கண்ட்ரோல் சிஸ்டம் (Airborne Early Warning and Control System) அமைப்பும் சேர்க்கப்பட உள்ளது.

டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி

டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி

"எல்சிஏ தேஜாஸ் மற்றும் ஏர்போர்ன் எர்லி வார்னிங் அன்ட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆனது, அறிமுகத்திற்கு முன்னதான இறுதிகட்ட சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளன" என்று டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்து உள்ளார். "டி.ஆர்.டி.ஓ தினம்" கொண்டாடப்படும் நிலையில், அரசு நடத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு ஆனது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1958 ஆம் ஆண்டில், 10 ஆய்வகங்கள் கொண்டு கொண்டு ஆரம்பிக்கப்பட்டதை, தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, ஆல் இந்தியா ரேடியோவில் (ஏஆர்) நினைவு கூர்ந்தார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

டி ஆர் டி ஓ ஆனது கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிற்காக ஏவுகணைகள், ரேடார், சோனார்கள், டார்பெபொரோஸ் எனப்படும் வெடிக்கப்பல்கள் மற்றும் பிற ஆயுத அமைப்புகளுக்காக வேலை செய்து வருகிறது" என்றும் ரெட்டி கூறி உள்ளார். தேஜாஸ் போர் விமானம் ஆனது டி.ஆர்.டி.ஓ வின் ஏரோனாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏ.டி.ஏ.) மூலம் வடிவமைக்கப்பட்டு, அரசு நடத்தும் பாதுகாப்பு விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல் - HAL) மூலம் கட்டமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேஜாஸ் போர்

தேஜாஸ் போர்

இப்படியான தேஜாஸ் போர் விமானம் ஆனது இந்திய விமானப்படையின் (IAF) நான்காம் தலைமுறை சூப்பர்சோனிக் போர் விமானமாகவும் மற்றும் இதன் மாறுபாடு இந்திய கடற்படையிலும் சேர உள்ளது. இந்த இரண்டு விமானங்களின் ஆயுதமேந்திய பதிப்பிற்கான இறுதி செயல்பாட்டு அனுமதி (FOC) ஆனது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான பார்வை, மற்றும் கண்காணிப்பு

முழுமையான பார்வை, மற்றும் கண்காணிப்பு

ஒருபக்கம் தேஜாஸ் சோதனைகளை நடத்தி வரும் டி.ஆர்.டி ஓ, மறுகையில் ஆறு வகையான அடுத்த தலைமுறை ஏ.இ.வி மற்றும் சி.எஸ்.ஏ களை உருவாக்கி வருகிறது. அவைகள் இந்திய விமான படையின், நீண்ட தூரம் மற்றும் முழுமையான பார்வை, மற்றும் கண்காணிப்பு மற்றும் கண்டறிதலை மேம்படுத்த உள்ளது. இதற்கு முன்னதாக டி ஆர் டி ஆனது பிரேசிலிய எம்பிரேர்-145 மாற்றியமைக்கப்பட்ட ஜெட் விமானத்தில் 200-கிமீ வீச்சு மற்றும் 240 டிகிரி கோணத்தை உருவாக்கியதும், தற்போது அதனை அதிகரிக்கும் வண்ணம், அதாவது 300 கிமீ வீச்சு மற்றும் 360 டிகிரி கோணம் என்கிற அளவிலான தளத்தை கொண்டு பணியாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 50 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள்

50 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள்

அதீத உழைப்பின் காரணமாக, அரசு நடத்தும் நிறுவனமான டி ஆர் டி ஓ ஆனது பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதன் விளைவாக இதன் ஆய்வகங்களின் எண்ணிக்கையும், அதனால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளும், நிறுவனத்தின் நிலைப்பாடும் பல திசைகளிலும் வளர்ச்சியை கண்டுள்ளது. "ஏரோனாட்டிக்ஸ், ஆயுதங்கள், மின்னணுவியல், போர் வாகனங்கள், பொறியியல் அமைப்புகள், கருவி, ஏவுகணைகள், மேம்பட்ட கணினி மற்றும் சிமுலேஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் 50 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் ஈடுபட்டுள்ளன," என்று டி ஆர் டி ஓ தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ராடார் மற்றும் மின்னணு போர் முறை

ராடார் மற்றும் மின்னணு போர் முறை

அதை உறுதி படுத்தும் வண்ணம், இந்நிறுவனம் ஏறக்குறைய 5,000 விஞ்ஞானிகள் மற்றும் 25,000 துணை ஊழியர்கள் ஆகியோருடன், ஏவுகணைகள், ஆயுதங்கள், எல்சிஏ கள், ராடார் மற்றும் மின்னணு போர் முறைகளை உருவாக்கும் மாபெரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏரோனாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி

ஏரோனாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி

தேஜாஸ் போர் விமானம் ஆனது நேற்று இன்று தொடங்கிய திட்டம் அல்ல. கடந்த 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அதன் முதல் உள்நாட்டு விமானத்தை கட்டியெழுப்பும் நடைமுறைகளைத் தொடங்குவதில் உறுதியாக இருந்தது. பின் அந்த கனவை பூர்த்தி செய்யும் நோக்கத்தின் கீழ், ஏரோனாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) எனும் அமைப்பு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. பின் 1986 ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்காக ரூ .575 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Best Mobiles in India

English summary
After Years Of Delay, Indigenously Developed LCA Tejas Finally To Be Inducted Into Air Force: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X