Subscribe to Gizbot

கடைசியில் எனக்கே விபூதி அடிச்சுட்டல.? புலம்பும் மார்க்; தெறிக்கவிடும் எலான்.!

Written By:

எலான் மஸ்க் ஒரு விசித்திரமான மேதையா அல்லது ஒரு நவீனகால தொலைநோக்கு பார்வை கொண்டவரா.? ஒருவேளை இரண்டின் கலவையாக கூட இருக்கலாம். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு தான் விண்வெளியில் வட்டமிட்டு கொண்டிருக்கும் சிவப்பு நிற டெஸ்லா கார்.!

உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஒன்றின் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட டெஸ்லா கார் திட்டத்தை தொடர்ந்து - சிறிதும் தாமதிக்காமல் அல்லது பழைய புகழையே பாடிக்கொண்டிருக்கமால் - எலான் மஸ்க் அடுத்தகட்ட திட்டத்தில் தீவீரமாக இறங்கிவிட்டார். அதென்ன திட்டம் என்று கேட்டால் முதல் ஷாக் ஆவீர்கள், பின்னர் படுபயங்கரமாக குஷி ஆவீர்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவை.!

உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவை.!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் ஏற்கனவே ஒரு முழு செயற்கைக்கோள் சார்ந்த பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவையை தொடங்குவதில் முனைப்புடன் இருக்கிறார். அது நம் கிரகத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் இணைய சேவையை வழங்க வேண்டுமென்ற நோக்கம் கொண்ட திட்டமாகும்.

நெட்வெர்க் இல்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை.!

நெட்வெர்க் இல்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை.!

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த திட்டம் மட்டும் வெற்றியடைந்தால் உலகின் எந்தவொரு இடத்திலும் நெட்வெர்க் இல்லை என்கிற வாசகத்தை நாம் காணவே மாட்டோம்; கனவும் முடியாது.

இது கிறுக்குத்தனம் அல்ல; புதுமை.!

இது கிறுக்குத்தனம் அல்ல; புதுமை.!

ஏற்கனவே நமது பூமி கிரகமானது - கடல் கடந்த வலைப்பின்னல்களின் உதவியுடன் - முழுமையான முறையில் மக்கள் அனைவரையும் இணையம் கொண்டு இணைக்கிறது தான், இல்யென்று மறுக்க முடியாது. ஆனால் எலான் மஸ்க்கிற்கோ, குறைந்தபட்ச பிராட்பேண்ட்-நிலை வேகத்தின்கீழ் முழுமையான செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையை வழங்க வேண்டுமென்று ஆசை.!

இதெப்படி சாத்தியம்.?

இதெப்படி சாத்தியம்.?

இந்த பைத்தியகாரத்தனமான கனவை நிஜமாக்க, எலான் மஸ்க் பூமியின் சுற்றுப்பாதையில் மொத்தம் 4,425 செயற்கைக்கோள்களை செலுத்த வேண்டும்; அதற்கு எலான் தயாராகவும் உள்ள என்பது வேறு விடயம். இது நடந்தால் நமது கிரகத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் மிக யதார்த்தமான இணைய சேவைகள் கிடைக்கும்.

பாலைவனத்தின் நடுவில்; பசிபிக் பெருங்கடலில்.!

பாலைவனத்தின் நடுவில்; பசிபிக் பெருங்கடலில்.!

நீங்கள் பசிபிக் பெருங்கடலில் இருக்கிறீர்களோ அல்லது மனிதர்கள் வாழும் நிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும் சஹாரா பாலைவனத்தின் நடுவில் இருக்கிறீர்களோ - அல்லது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் அல்லது அண்டார்டிக்காவின் சரிவுகளில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ளீர்களோ - எங்கிருந்தாலும் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்கும்.

உயர்ந்த இணைய வேகம்

உயர்ந்த இணைய வேகம்

மேலும் எலான் மஸ்க், இந்த சேவையின் கீழ் உயர்ந்த இணைய வேகத்தையும், உலகின் எந்தவொரு பகுதிக்குமான உயர் தரமான செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவைகளையும் வழங்க விரும்புகிறார். எலான் மஸ்க்கின் பெரும்பாலான திட்டங்களை போலவே இதுவும் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். இந்த இடத்தில் எலான் மஸ்க் நினைத்தபடி, அவரின் டெஸ்லா கார் ஆனது செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்கிறதென்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கனவில் இருந்து நிஜத்திற்கு.!

கனவில் இருந்து நிஜத்திற்கு.!

இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய கட்டமைப்பை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் அரசு அமைப்பான அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் ஆனது, ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் "லட்சிய" செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் வணிக திட்டத்தின் முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கிராமப்புற பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.!

கிராமப்புற பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின்படி, இந்த செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையானது கிராமப்புற பகுதிகளில் - அமெரிக்கா மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் - வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அம்மாதிரியான இடங்களில் பிராட்பேண்ட் அணுகல் மிகவும் கடுமையானதாக அல்லது இல்லாமல் கூட உள்ளது.

வானில் இருந்து வெளியேற்றும் முயற்சி.!

வானில் இருந்து வெளியேற்றும் முயற்சி.!

எலான் மஸ்க்கின் 4000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவும் திட்டமானது, கூகுள் ப்ராஜெக்ட் லூன் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் அக்விலா (சூரிய சக்தியால் இயக்கப்படும் ட்ரோன்) போன்ற திட்டங்களை வானில் இருந்து வெளியேற்றும் முயற்சியாக இருந்தாலும் கூட, மிகவும் திடமான மற்றும் விரைவில் சாத்தியமாகக்கூடிய ஒரு திட்டமாக இருக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
இன்னும் சிறப்பான முறையில் நமக்கு கிடைக்கும்.!

இன்னும் சிறப்பான முறையில் நமக்கு கிடைக்கும்.!

இது தவிர்த்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது இடைவெளி அடிப்படையிலான தகவல்தொடர்பு கட்டத்தை உருவாக்க்கும் முனைப்பின்கீழ் அதன் இரு சோதனை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் இன்டர்நெட் என்பது தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகிவிட்டது. எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வெற்றியடைந்தால் இன்டர்நெட் ஆனது இன்னும் சிறப்பான முறையில் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
After Sending A Car To Mars, Elon Musk Now Wants To Build A Satellite-Based Internet For Earth. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot