சூரியனுக்கு செல்லும் இஸ்ரோ! அடுத்த ஆராய்ச்சி திட்டம் ரெடி!

|

இந்தியாவின் இரண்டாவது நிலவு பயணமான சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்திய பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அடுத்தபடியாக சூரியனுக்கான முதல் பயணத்திற்குத் தயாராகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரியனுக்கான முதல் பயணம்

சூரியனுக்கான முதல் பயணம்

இந்தியாவின் இரண்டாவது நிலவு பயணமான சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்திய பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அடுத்தபடியாக சூரியனுக்கான முதல் பயணத்திற்குத் தயாராகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரியனை முழுமையாக ஆராயும் இஸ்ரோ

சூரியனை முழுமையாக ஆராயும் இஸ்ரோ

நிலவு பற்றிய முழு தகவல்களையும் இம்முறை சந்திரயான் 2 ஆராய்ந்து தெரிவித்துவிடும் என்பதனால், இஸ்ரோ அடுத்தகட்ட திட்டமாகச் சூரியனை முழுமையாக ஆராயத் திட்டமிட்டுள்ளது. சூரியனை அருகிலிருந்து ஆராயும் திட்டமாக ஆதித்யா எல்-1(Aditya L-1) திட்டம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

<span style=மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தரும் ஆறுதல் வார்த்தைகள்!" title="மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தரும் ஆறுதல் வார்த்தைகள்!" loading="lazy" width="100" height="56" />மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தரும் ஆறுதல் வார்த்தைகள்!

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப்

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப்

நாசா, 2018 ஆம் ஆண்டில் சூரியனை ஆராய்வதற்காக 'பார்க்கர் சோலார் ப்ரோப்(Parker Solar Probe)' விண்கலத்தை விண்ணில் ஏவியது. நாசாவின், பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்திற்குப் பிறகு சூரியனை ஆராய இந்தியாவின் ஆதித்யா எல்-1(Aditya L-1) விண்கலம் விண்ணில் ஏவப்படும்.

<span style=ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்! " title="ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்! " loading="lazy" width="100" height="56" />ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்!

திட்ட பணியில் ஆதித்யா எல் -1

திட்ட பணியில் ஆதித்யா எல் -1

முந்தைய அறிக்கையின்படி, ஆதித்யா எல் -1 திட்டத்தின் பணி, தற்போது அதன் திட்டமிடல் நிலையில் உள்ளது என்றும், வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

<span style=வியக்கவைக்கும் விலையில் டிடெல் 65-இன்ச் 4கே எல்இடி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்!" title="வியக்கவைக்கும் விலையில் டிடெல் 65-இன்ச் 4கே எல்இடி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்!" loading="lazy" width="100" height="56" />வியக்கவைக்கும் விலையில் டிடெல் 65-இன்ச் 4கே எல்இடி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்!

 சூரியனின் கொரோனாவை ஆராயும் இஸ்ரோ

சூரியனின் கொரோனாவை ஆராயும் இஸ்ரோ

ஆதித்யா-எல் 1 திட்டம், சூரியனின் கொரோனாவையும் அதன் வளிமண்டலத்தையும் ஆய்வு செய்ய இஸ்ரோவின் முதல் திட்டமிடப்பட்ட ஆய்வு ஆகும். இத்திட்டம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 2020 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
After Chandrayaan 2 Indias First Mission To The Sun In 2020 Is Aditya L-1 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X