தொடர்ந்து 908 நாட்களுக்கு வானில் பறந்த அமெரிக்க ராணுவ விமானம்! மேலே அப்படி என்ன செய்தது?

|

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தொடர்ந்து பல புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விண்வெளியில் பல அசத்தலான சாதனைகளைச் செய்துள்ளது நாசா அமைப்பு.

908 நாட்கள்

908 நாட்கள்

இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் சுமார் 908 நாட்கள் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று தற்போது தரையிறங்கியுள்ளது.தற்போது இது அறிவியல் உலகில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!

இன்னும் மிச்சம்

அதாவது விண்வெளியின் பல மர்மங்களை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும் விண்வெளியைப் பொறுத்தவரை விடை காணமுடியாத பல கேள்விகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன என்பது தான் உண்மை.

Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!

 நாசா அமைப்பு

குறிப்பாக நாசா அமைப்பு தொடர்ந்து பல அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதிதான் இந்த ஆளில்லா விமான பரிசோதனை. குறிப்பாக முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கக்கூடிய X-37B விண்வெளி விமானத்தை நாசா அமைப்பு உருவாக்கியது.

ஒருமுறை தான் சொல்லுவோம்.. இந்த 2 விஷயத்தையும் உடனே செஞ்சிடுங்க.. இல்லனா? Google எச்சரிக்கை!ஒருமுறை தான் சொல்லுவோம்.. இந்த 2 விஷயத்தையும் உடனே செஞ்சிடுங்க.. இல்லனா? Google எச்சரிக்கை!

 2010-ம் ஆண்டு..

2010-ம் ஆண்டு..

பின்பு கடந்த 2010-ம் ஆண்டு முதன் முதலாக விண்வெளியில் இந்த விமானம் ஏவப்பட்டது. இதுவரை 6 முறை விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் பல அறிவியல் பரிசோதனைகளுக்குப் பக்கபலமாக இருந்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

ஆளில்லா விமானம்

அதேபோல் முன்னதாக இந்த ஆளில்லா விமானம் 780 நாட்கள் புவிவட்ட பாதையில் ஆராய்ச்சி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பியது. அந்த வகையில் தற்போது 908 நாட்கள் (2.5 வருடம்) புவியை சுற்றி முடித்து தற்போது அமெரிக்காவின் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது இந்த ஆளில்லா விமானம்.

பாறாங்கல் மாதிரி அறிமுகமான Leica Leitz Phone 2.. ஐபோன், சாம்சங் எல்லாம் ஓத்து இனி இதுதான் கெத்து!பாறாங்கல் மாதிரி அறிமுகமான Leica Leitz Phone 2.. ஐபோன், சாம்சங் எல்லாம் ஓத்து இனி இதுதான் கெத்து!

 1.3 பில்லியன் மைல்கள்

1.3 பில்லியன் மைல்கள்

குறிப்பாக இந்த ஆளில்லா விமானம் இதுவரை 3,774 நாட்களில் 1.3 பில்லியன் மைல்கள் பயணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் கப்பற்படை மற்றும் விமான ஆராய்ச்சி ஆய்வகத்தைக் கொண்டுள்ள இந்த விமானம் பார்ப்பதற்கு விண்கலம் போலவே இருந்தாலும்,அளவில் சிறிதாக இருக்குமாம்.

ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!

 X-37B விண்வெளி விமானம்

அதாவது இந்த ஆளில்லா விமானம் 9 மீட்டர் நீளம் கொண்டது என்று கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் நாசா மற்றும் சில தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கு இந்த விமானம் உறுதுணையாக இருந்துள்ளது. தற்போது விண்வெளியில் சுமார் 908 நாட்கள் பயணம் முடித்தபிறகு X-37B விண்வெளி விமானம் தரையிறங்கியிருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Photo Credit: AP,US Air Force/ Twitter, thehindu.com

Best Mobiles in India

English summary
After 908 days spending at space an unmanned US military plane landed at NASA Research Centre: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X