மிஸ் பண்ணாதிங்க: 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் நிகழும் அதிசியம்: அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

|

சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக வியாழனும், ஆறாவது கோளாக சனியும் அமைந்துள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் இன்று மிக நெருக்கமாக வர இருக்கிறது.

அரிய மற்றும் ஆச்சரிய நிகழ்வு

அரிய மற்றும் ஆச்சரிய நிகழ்வு

விண்ணில் சுமார் 397 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மற்றும் ஆச்சரிய நிகழ்வு நடக்க உள்ளது. சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக வியாழனும், ஆறாவது கோளாக சனியும் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் நெருக்கமாக வர உள்ளது.

நெருக்கமாக வரும் இரண்டு கிரகங்கள்

நெருக்கமாக வரும் இரண்டு கிரகங்கள்

1623 ஆம் ஆண்டு இதேபோல் வியாழன் கிரகமும், சனி கிரகமும் மிக நெருக்கமாக வந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய நிகழ்வு மிகப்பெரிய இணைப்பு என எம்பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று நெருங்கி வரும் வியாழன் மற்றும் சனி கிரகங்கள்

இன்று நெருங்கி வரும் வியாழன் மற்றும் சனி கிரகங்கள்

இன்று டிசம்பர் 21 ஆம் தேதியன்று வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக காணப்படும் என வான்வெளி அறிஞர்கள் கூறியுள்ளனர். அவை காண்பதற்கு ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இருக்கும் என கூறப்படுகிறது.

மிகப்பெரிய இணைப்பு

மிகப்பெரிய இணைப்பு

1623 ஆம் ஆண்டில் இருந்து இந்த இரண்டு கிரகங்களும் இதுவரை நெருக்கமாக இருந்தது இல்லை. இரண்டு விண்வெளி கிரகங்கள் நெருக்கமாக வரும்போது அது இணைப்பு (conjunction) என்று அழைக்கப்படுகிறது.

2 வருசமா 9 வயது சிறுவனை அடிச்சுக்க ஆளே இல்ல: 2020 இல் அதிக வருமானம் ஈட்டிய யூடியூப் சேனல்!2 வருசமா 9 வயது சிறுவனை அடிச்சுக்க ஆளே இல்ல: 2020 இல் அதிக வருமானம் ஈட்டிய யூடியூப் சேனல்!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

அதேபோல் சனி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிரகங்கள் நெருக்கமாக வரும் நிகழ்வை பெரிய இணைப்பு (Great conjunction) என்று அழைக்கப்படுகின்றன என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்மேற்கு பகுதியில் பார்க்கலாம்

தென்மேற்கு பகுதியில் பார்க்கலாம்

டிசம்பர் 21 ஆம் தேதிக்கு முன்பிருந்தே இரண்டு கிரகங்களும் படிப்படியாக நெருங்கி வருவது போல் தோன்றும் என கூறப்பட்டது. டிசம்பர் 21 ஆம் தேதி உலகின் தென்மேற்கு பகுதியில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்ததாக 2080 ஆம் ஆண்டுதான்

அடுத்ததாக 2080 ஆம் ஆண்டுதான்

இன்று டிசம்பர் 21, 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் 2080 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நெருக்கமாக வரும் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் அந்த நிகழ்வு இன்று நடப்பது போல் நெருக்கமாக இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட இரவாக இருக்கும்

நீண்ட இரவாக இருக்கும்

இன்று மேற்கு திசையை உற்று நோக்கினால் அதிக ஒளி போல் புள்ளிகள் வானில் காணப்படும். இரு கிரகங்களும் நெருக்கமாக வருவதோடு எரி நட்சத்திரங்கள் பூமியை நோக்கி விழும் வானியல் அற்புதங்களை காணமுடியும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆண்டின் நீண்ட இரவாக இன்று இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகளால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

File Images

Best Mobiles in India

English summary
After 397 Years Jupiter and Saturn Conjunction happening on Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X