பூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..

மிக பிரபலமான கதையாக அட்லாண்டிஸ் பற்றி நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம். ஆனால் பல்வேறு முன்னேறிய பண்டைய நகரங்கள் இருப்பதாக தெரிகிறது.

|

இந்த கிரகத்தில் கிட்டத்தட்ட அனைத்து கலாச்சாரங்களிலும், ஒரு காலத்தில் கடலில் மூழ்கிய மிக முன்னேறிய பண்டைய நகரங்களின் கதைகள் உள்ளன. மிக பிரபலமான கதையாக அட்லாண்டிஸ் பற்றி நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம். ஆனால் பல்வேறு முன்னேறிய பண்டைய நகரங்கள் இருப்பதாக தெரிகிறது.

பூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள்! ஆதாரம் இதோ..

சிலகாலத்திற்கு முன்பு வரை இந்த கதைகள் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இந்த பண்டைய நகரங்கள் உண்மை என்று நினைக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு சில சுவாரசியமான கண்டுபிடிப்புகளை செய்ய உதவியது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நாம் இதற்கு முன்னர் செய்திராத அளவிற்கு கடலின் தரைதளத்தை ஆராய்வதற்கு நம்மை அனுமதித்தது.

சிறந்த கண்டுபிடிப்புகள்

சிறந்த கண்டுபிடிப்புகள்

இன்று கடலின் அடிப்பகுதியில் இதுவரை நாம் கண்டுபிடித்திலேயே மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் சிலவற்றை நம்மால் காணமுடிகிறது. நமது கிரகத்தில் உள்ள அனைத்துப் பெருங்கடல்களிலும் நகரங்கள் மற்றும் பிரம்மாண்ட கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலத்திற்கு முன்பே மிகவும் மேம்பட்ட நாகரிகங்கள்

நீண்ட காலத்திற்கு முன்பே மிகவும் மேம்பட்ட நாகரிகங்கள்

இந்த பிரம்மாண்டமான கண்டுபிடிப்புகள் நமது கிரகத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே மிகவும் மேம்பட்ட நாகரிகங்கள் இருந்தன என்பதற்கு தெளிவான ஆதாரங்களாக இருக்குமா? இந்த கண்டுபிடிப்புகள் நம் கடந்த காலத்தைப் பற்றி பள்ளியில் கற்பிக்கப்பட்ட அனைத்தையும் முற்றிலும் மாற்றியமைக்கிறது.

ரஷ்யா

ரஷ்யா

சமீபத்தில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்களின் இடுபாடுகளில்,இந்த கிரகத்தில் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய கற்தொகுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கற்களின் தோற்றத்தை யாராலும் விளக்க முடியவில்லை. ஆய்வாளர்களால் இந்த இடங்களில் வாழ்ந்த நாகரிகத்தினை பற்றி சிறிதளவு கூட யூகிக்க முடியவில்லை.


கடல் தரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்புகள் ரஷ்யாவில் உள்ள கற்களைக் காட்டிலும் மிகவும் ஈர்க்கக்கூடியவை என்று தெரிகிறது.

ஜப்பானில் நீருக்கடியில் பண்டைய பெருங்கல் நகரம்

ஜப்பானில் நீருக்கடியில் பண்டைய பெருங்கல் நகரம்

ஒகினாவா குடிமக்களுடைய கலாச்சாரத்தில், மக்கள் தலைமுறை தலைமுறையாக பிரம்மாண்ட நீரடி நகரங்கள் மற்றும் அதன் மக்களை பற்றிய பல கதைகளை கூறிவந்துள்ளனர்.

இதுவரை அவர்கள் அக்கதைகளை எளிய கதைகள் என்றே கருதினர். இந்த நீருக்கடியில் உள்ள நகரங்கள் உண்மையாக இருக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் 1986 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய கண்டுபிடிப்பு அனைத்தையும் மாற்றிவிட்டது. 1986 ஆம் ஆண்டில் ஒகினாவா ஜப்பான் அருகேயுள்ள யோனகுனி ஜீமா தீவு அருகில், ஆராய்ச்சியாளர்கள் கடலில் சுமார் 25 மீட்டர் ஆழத்தில் இருந்த சில மகத்தான கட்டமைப்புகளை கண்டுபிடித்தனர். இந்த செயற்கை கட்டமைப்புகளின் வயது 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மேலும் அங்கே மிகப்பெரியபெரிய பிரமிடுகள் உள்ளன. கீழேயுள்ள வீடியோவில் இவையனைத்தையும் உங்களால் காணமுடியும்.

   இந்தியாவின் துவாரகா நீரடி நகரம்

இந்தியாவின் துவாரகா நீரடி நகரம்

ஒரு மிகப்பெரிய நீருக்கடியில் உள்ள நகரம் சமீபத்தில் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் 10 மைல்களுக்கு மேல் நீண்டுள்ளது. இந்த நகரம் நமது கிரகத்தின் மறந்துபோன வரலாறான மிகவும் மேம்பட்ட நாகரிகங்கள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.

130 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது

இந்த நகரம் இந்தியாவிற்கு அருகிலுள்ள காம்பே வளைகுடாவில் சுமார் 130 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரத்தின் வயது ஜப்பானில் காணப்படும் நீருக்கடியில் உள்ள நகரத்தை ஒத்திருக்கிறது. இந்தியர்கள் இந்த நகரம் இந்து கடவுளான கிருஷ்ணருக்கு சொந்தமானது என்று நம்புகின்றனர். இந்நகரைப்பற்றி வீடியோவில் காணலாம்.

கியூபாவின் நீரடி நகரம்

கியூபாவின் நீரடி நகரம்

2001 ஆம் ஆண்டில், பிபிசி தொலைக்காட்சி நிலையம் கியூபாவில் நீருக்கடியில் தொலைந்துபோன ஒரு பெரிய நகரத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தது. கனேடிய நிறுவனத்திற்கான பணியாற்றிய ஆய்வாளர்கள், இந்த நகரம் மிகவும் மேம்பட்ட சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த நகரம் சுமார் 2000 அடி ஆழத்தில் காணப்பட்டது. முதலில் எல்லோரும் அது பழம்பெரும் அட்லாண்டிஸ் நகரமாக இருக்கும் என்று நினைத்தனர். ஆனால் பல ஆய்வாளர்கள் இந்த கோட்பாட்டுடன் உடன்படவில்லை.ஜப்பான் மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்களை போலவே , கியூபாவின் நீளமான மூழ்கிய நகரங்களிலும் ஏராளமான பிரமீடுகள் உள்ளன. இந்த நகரங்களில் அனைத்தும் அதே பண்டைய நாகரிகத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.

சைபானுக்கு அருகில் நீருக்கடியில் உள்ள நகரம்

கூகிள் எர்த் மூலம், சாதாரண மக்கள் கூட இந்த மூழ்கிய நகரங்களை காணலாம். சைபானுக்கு அருகில் உள்ள டைவிங் நகரத்தில் இது தான் நடந்தது. கூகிள் எர்த் பயன்படுத்திய ஒருவர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 250 மைல் நீளம் மற்றும் 50 மைல் அகலமுடையது.


கடலுக்கு கீழே உள்ள இந்த முரண்பாடுகள் ஆசியாவில் ஒரு பண்டைய நாகரிகத்தின் எஞ்சியுள்ளவை என நம்பப்படுகிறது ஆனால் இது வேற்றுகிரகவாசிகளின் நீருக்கடியில் உள்ள தளமாகவும் இருக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Advanced Ancient Civilizations once ruled Earth We have proof : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X