நாசாவுக்கு போட்டி: சூரியனுக்குச் செல்லும் இஸ்ரோவின் ஆதித்தியா.!

சூரியன் தான் கிரகங்களில் அதிக வெப்ப நிலையைக் கொண்டது. சூரியனை எந்தச் செயற்கைக்கோள்களும் இதுவரை சென்றதில்லை. சூரியனில் நிலவும் உச்ச வெப்ப நிலை காரணமாக அதன் வழியில் கூட பயணிக்க முடியாது.

|

சூரியன் தான் கிரகங்களில் அதிக வெப்ப நிலையைக் கொண்டது. சூரியனை எந்தச் செயற்கைக்கோள்களும் இதுவரை சென்றதில்லை. சூரியனில் நிலவும் உச்ச வெப்ப நிலை காரணமாக அதன் வழியில் கூட பயணிக்க முடியாது.

நாசாவுக்கு போட்டி: சூரியனுக்குச் செல்லும் இஸ்ரோவின் ஆதித்தியா.!

அதை மீறிப் பயணித்தால், கருகி சாம்பல் ஆவது தான் மிச்சம். இந்நிலையில் சூரியனை ஆராய அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பார்க்கர் சோலார் ப்ரோப் என்னும் விண்கலத்தைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செலுத்தி இருந்தது.

இந்நிலையில், நாசாவுக்கு போட்டியாகவும் சூரியனை ஆய்வு செய்யவும் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் ஆதித்தியா என்ற விண்கலம் அனுப்பபட இருக்கின்றது.

பார்க்கர் சோலார் ப்ரோப்:

பார்க்கர் சோலார் ப்ரோப்:

சூரியனில் சுமார் 1,337 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சூரியன் சுற்றுவட்டபாதைக்கு மணிக்கு 7 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் ப்ரோப் என்னும் விண்கலத்தை அனுப்பி இருந்தது.

 2024ம் ஆண்டு சென்றுவிடும்:

2024ம் ஆண்டு சென்றுவிடும்:

இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் 6 ஆண்டுகளில், அதாவது 2024ம் ஆண்டில் சென்று விடும். அங்கு இருந்து பூமியை தாக்கும் சூரிய காற்று எப்படி உருவாகிறது என்று கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

 பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது:

பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது:

பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம் உலக விஞ்ஞானிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விண்கலம் எவ்வாறு சூரியனுக்கு செல்லும், அங்கு நிலவும் கால நிலைகளையும் எவ்வாறு படம் பிடிக்கும். அதிக வெப்பம் நிலவுவதால் தற்போது பாதுகாப்பு வசதிகளுடன் சென்றாலும் தாக்குப்பிடிக்குமா என்று இன்று வரை பொது மக்களிடம் சிலரிடம் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புத்தக திருவிழா:

புத்தக திருவிழா:

இந்நிலையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்திய மருத்துவ கழகம் , கடலூர் சிறகுகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சார்பில் கடலூர் நகர அரங்கில் 2வது தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா கடந்த புதன் கிழமை துவங்கியது.

நிலவுக்கு சந்திராயன் அனுப்பும் பணி:

நிலவுக்கு சந்திராயன் அனுப்பும் பணி:

வருகிற 21ம் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. இதைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் விஞ்ஞானி அண்ணாதுரை , நிலவுக்கு சந்திராயன்-2 ஐ அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

சூரியனுக்கு ஆதித்தியா விண்கலம்:

சூரியனுக்கு ஆதித்தியா விண்கலம்:

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்தியா என்ற விண்கலத்தை அனுப்பி வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

4 ஆண்டுகளில் நிறைவு:

4 ஆண்டுகளில் நிறைவு:

ஆதித்தியா விண்கல திட்டப்பணிகள் வரும் 4 ஆண்டுகளில் நிறைவடையும் என்று விஞ்ஞானி மயில்சாமி தெரிவித்தார். இதனால் இஸ்ரோவுக்கு போட்டியாக இந்தியாவும் களமிறங்கியுள்ளது. சர்வ தேச அளவில் இந்தச் செய்தியும் பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Aditya - L1 First Indian mission to study the Sun : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X