"தல" அஜித்தின் இன்னொரு முகம்; நம்மில் பலருக்கும் தெரியாத "வேற" முகம்.!

அஜித் குமாரை 'ஹெலிகொப்டர் டெஸ்ட் பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைசர்' ஆக எம்ஐடி நியமித்துள்ளது.

|

ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் போன்ற தமிழ் சினிமாவின் மற்ற சூப்பர்ஸ்டார் கதாபாத்திரங்கள், தங்களது அரசியல் வாழ்க்கையை துவங்குவதில் ஆர்வம் காட்டி வரும் நிலைப்பாட்டில், ரசிகர்களால் அன்புடன் "தல" என்று அழைக்கப்படும் அஜித் குமாரோ, அன்மேன்டு ஏரியல் வெஹிக்ஸ்ல் (Unmanned Aerial Vehicles) எனப்படும் ஆளில்லா விமானங்கள் சார்ந்த பணிகளில், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) உடன் இணைந்து வருகிறார். அஜித் குமாரை 'ஹெலிகொப்டர் டெஸ்ட் பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைசர்' ஆக எம்ஐடி நியமித்துள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், நடைபெறவிருக்கும், மெடிக்கல் எக்ஸ்ப்ரிஸ் - 2018 யூஏவி சேலஞ்சின் (Medical Express-2018 UAV Challenge) இறுதி சுற்றிக்காக, ஒரு அட்வான்ஸ்டு ஆளில்லா விமானத்தை உருவாக்க உதவுக்ம் பொறுப்பை நடிகர் அஜித் குமார் ஏற்றுள்ளார்.

யுஏவி சிஸ்டம் அட்வைசர்.!

யுஏவி சிஸ்டம் அட்வைசர்.!

பள்ளி பருவத்தில் இருந்தே ஏரோ-மாடலிங்கில் ஆர்வம் காட்டிய அஜித் குமார், நடிகரான பின்பும் கூட ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைப்பதும், அதை செயல்படுவத்துவதுமாய் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டே வருகிறார். அந்த ஆர்வம் மற்றும் வளர்ச்சி தான் அஜித்தை ஒரு 'யுஏவி சிஸ்டம் அட்வைசர்' ஆக மாற்றியுள்ளது.

சம்பளம் என்னவென்று தெரியுமா.?

சம்பளம் என்னவென்று தெரியுமா.?

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த வியாழக்கிழமை அன்று, அஜித் குமாருக்கான இந்த நியமனத்தை வழங்கியது. பல கோடிகள் சம்பளம் வாங்கும் அஜித்திற்கு, இந்த ப்ராஜெக்ட் வழியாக ஒவ்வொரு வருகைக்கும் கிடைக்கும் சம்பளம் என்னவென்று தெரியுமா.? ரூ.1000/- ஆகும். அதையும் வாங்கிக்கொள்ளாமல் எம்ஐடியின் ஏழை மாணவர்களின் கல்விக்காக அதை நன்கொடையாக அளித்திருக்கிறார் நம்ம தல.!

பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம்.!

பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம்.!

சினிமாவில் பைக் மற்றும் கார் ஸ்டண்ட்களில் கலக்கும் அஜித்திற்கு, பைக் மற்றும் கார்கள் மீது அலாதியான ஆர்வம் உண்டு என்பது நம்மில் பலருக்கு தெரியும். அனால் அவரின் ஆர்சி எனப்படும் ரிமோட் கண்ட்ரோலிங் வாகனங்கள் மீதான ஆர்வம் பற்றி தெரியுமா.?

அஜித் அதில் ஒரு கில்லாடியும் கூட.!

அஜித் அதில் ஒரு கில்லாடியும் கூட.!

ஆம், நம்ம 'தல' அஜித்திற்கு சிறிய வகை ஜெட்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவைகளை வடிவமைத்து, அதை பறக்க விடுவதில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆர்வம் மட்டுமல்ல அஜித் அதில் ஒரு கில்லாடியும் கூட.!

ஒரே இந்திய நடிகர்.!

ஒரே இந்திய நடிகர்.!

இன்னும் சொல்லப்போனால், அஜித்திடம் விமான ஓட்டிக்கான உரிமம் உள்ளது. விமானம் ஓட்டும் உரிமம் கொண்டுள்ள ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி சோதனை ஓட்டம் நிகழ்த்துவார்.!

அடிக்கடி சோதனை ஓட்டம் நிகழ்த்துவார்.!

சென்னையில் உள்ள ஆர்சிபிஏ (RCPA) ஏர் ஃபீல்ட்டில் நம்ம 'தல' அடிக்கடி தன் சிறிய வகை விமானங்களின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்துவார். ஆர்சிபிஏ(RCPA) ஏர் ஃபீல்ட் தளத்தின் நிர்வாகிகளில் நம்ம 'தல'யும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் கே.அரவிந்த் (ரோட்டார் ஸ்போர்ட்) ஆவார்.

எல்39 ஜெட் :

எல்39 ஜெட் :

இது அஜித்தின் எல்39 ஜெட்..!

ஜெட்கேப் பி70 :

ஜெட்கேப் பி70 :

இது பூமராங்க் ஸ்பிரின்ட் ஜெட்கேப் பி70 டர்பைன்..!

செல்லமாக.!

செல்லமாக.!

அஜித்தின் இந்த பொழுதுபோக்கை, அவரின் நண்பர்கள் செல்லமாக "ஆர்சி ஹாபி" என்று அழைப்பதும் உண்டு. அதாவது ரேடியோ கன்ட்ரோல் ஹாபி என்று அர்த்தம்.

பலமுறை தோல்வியடைந்தேன், பின்னர்.!

பலமுறை தோல்வியடைந்தேன், பின்னர்.!

தனது இந்த ஆர்சி ஹாபி பற்றியதொரு கேள்விக்கு பதில் அளித்த அஜித். "முதலில் பலமுறை தோல்வியடைந்தேன், பின் என் விமானங்கள் பறக்க, பறக்க உற்சாகம் கொண்டேன் என்று கூறினார்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோ.!

நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோ.!

தன் திரைபடங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும், அஜித் ஒரு சுவாரசியமான ஹீரோ தான் என்பதற்கு அவரின் இந்த "ஆர்சி" முகம், ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும். சிறிய வகை விமானங்களை ஓட்டுவது மட்டுமல்ல, அதில் ஏதாவது ஒரு ரிப்பேர் என்றாலும் அது 'தல' கைக்குதான் வரும் என்பது கூடுதல் தகவல்.!

Best Mobiles in India

English summary
Actor Ajith on board Chennai MIT’s drone mission. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X