Home
Scitech

"அவர்கள் இருக்கிறார்கள்" - திகில் கிளப்பும் புகைப்படமும், பின்னணியும்!

கடந்த 1980 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் வோயேஜர் விண்கலம் ஆனது பல புகைப்படங்களை பதிவு செய்திருந்தது.

கடந்த 1980 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் வோயேஜர் விண்கலம் ஆனது பல புகைப்படங்களை பதிவு செய்திருந்தது. அதில் ஒரு புகைப்படம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக் ஆப் தி ஸ்பேஸ் கம்யூனிட்டி.

அந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டியது வேறு யாரும் இல்லை, ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ கட்டளை சார்ஜண்ட் மேஜர் ஆன பாப் டீன் ஆவார். இது சார்ந்த விரிவுரையின் போது இதுவரை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படாத அப்பல்லோ மிஷன் பயணத்தின் பல புகைப்படங்களையும் அவர் காட்டினார்.

நிலவு பயணத்தின் மீது சந்தேகம்

நிலவு பயணத்தின் மீது சந்தேகம்

இந்த இடத்தில், ரஷ்யா போன்ற பல அரசாங்கங்கள், அமெரிக்காவின் நிலவு பயணத்தின் மீது சந்தேகம் எழுப்பி, புகைப்பட ஆதாரங்களை கேட்டதும் அவைகள் (சந்திர புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் சந்திரன் பாறைகள்) மறைக்கப்படுவதற்கான ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் காலமானார்!

சமீபத்தில் காலமானார்!

மேலே உள்ள படத்தை சுட்டி காட்டியது மட்டும் தான் டீன் ஆவார், அனால் அது அவருடைய நல்ல நண்பர்களில் ஒருவரான நார்மன் பெர்க்ருன் என்பவரிடம் (ஒரு விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர்) வெளியாகி உள்ளடித்து. அவர் அமேஸ் ஆராய்ச்சி மையத்தில் பல தசாப்தங்களாக (நாசாவிற்காக) பணியாற்றினார் என்பதும் லாக்ஹீட் மார்டினிலும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் போலார்ஸ் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டார் என்பதும் துரதிருஷ்டவசமாக, அவர் சமீபத்தில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி இந்த படத்தில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது?

சரி இந்த படத்தில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது?

நன்றாக பாருங்கள். வெளியான புகைப்படத்தில் ஒளிரும் மூலம் ஒன்றை பார்க்க முடிகிறது. இது "லுமினஸ் சோர்ஸ்" என்று பெர்க்ரூன் புத்தகத்தில் (சனிகோளின் ரிங்ஸ்மேக்கர்ஸ்) குறிப்பிடப்பட்டு உள்ளது. "அவர் இதை வெளியிட்டதற்கு நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவ்வாறு செய்ய நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது: என்றும் விரிவுரையை டீன் விளக்கினார்.

பெருகிய முறையில் இனப்பெருக்கம்!

பெருகிய முறையில் இனப்பெருக்கம்!

பெர்க்ரூன் கூற்றுப்படி, சனி மற்றும் அதன் நிலப்பகுதிகளைச் சுற்றி பல பெரிய கைவினைப்பொருட்கள் "பெருகிய முறையில் இனப்பெருக்கம்" செய்து உள்ளன. இது சார்ந்த மேல் அதிக விவரங்களை அவரின் புத்தகத்தில் காண முடிகிறது. அதை படிக்கும் ஆர்வம் கொண்டவராக இருந்தால் நீங்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்ய வேண்டாம். அது ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தாமல் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி!

வெளிப்படுத்தாமல் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி!

டீன் கூற்றின் படி, சனி கோளின் அருகில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பொதுவெளிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற முடிவை பெர்க்ரூன் தனது கடைசி காலத்தில் தான் எடுத்து உள்ளார் மற்றும் அதை செய்ய முடியாமல் போனதற்காக விரக்தியும் அடைந்து உள்ளார்.

அந்த வெளிச்சமான வட்டம் எதை குறிக்கிறது?

அந்த வெளிச்சமான வட்டம் எதை குறிக்கிறது?

அங்குதான் கிழம்புகிறது பழைய சர்ச்சை. ஆம், பல் ஆண்டுகளாக சனிக்கோளின் மோதிரங்களை உருவாக்கியது அதனை சுற்றி உள்ள வேற்று கிரக வாசிகள் தான் என்ற கூற்று நிலவுகிறது. அந்த கருத்திற்கு தூசி தட்டும் வண்ணம் இந்த புகைப்பட ஆதாரம் வெளியாகி உள்ளது. புகைப்படத்தில் காணும் வட்ட ஒளியானது பறக்கும் தட்டு வடிவத்திலான ஒரு கிரகம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

இது சார்ந்த தெளிவான விளக்கத்தை நார்மன் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். அதில் " இந்த பொருட்கள் ஒருவேளை நாம் (மனிதர்கள்) அலைந்து திரிவதை காட்டிலும் சற்று கூடுதல் காலம் திரியலாம்" என்கிற தெளிவான ஒரு புள்ளியை வலியுறுத்துகிறார். அவைகளுக்கு நமது கிரகத்தின் மீது ஏதாவது தவறான நோக்கம் இருந்திருந்தாலும், ஏதோவொன்று நடந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த பொருள்கள் புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது நம்முடைய கிரகத்திற்கு அருகில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அவர்கள் ஏற்கனவே இருப்பதை விட நெருக்கமாக வருவதன் மூலம், நமது சொந்த வானிலையில் சில விளைவுகள் ஏற்படுகின்றன என்கிற பகிர் தகவலையும் நார்மன் குறிப்பிட்டு உள்ளார்.

கேலிக்குரிய மற்றும் பயம் மிகுந்த கேள்விகள்!

கேலிக்குரிய மற்றும் பயம் மிகுந்த கேள்விகள்!

இந்த தலைப்பிற்குள் ஏராளமான கேலிக்குரிய மற்றும் பயம் மிகுந்த கேள்விகள் உள்ளன என்பதும், அதே சமயம் இந்த தலைப்பின் கீழ் வெளியாகும் பெரும்பாலான தகவல்கள் தவறான மற்றும் போலியானதா இருக்கிறது என்பதும் வெளிப்படை. ஆகவே இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஒரு சந்தேக பார்வையின் கீழ் வைக்க வேண்டுமே தவிர, தீவீரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்க படுகிறீர்கள். ஒருவேளை ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்கிற முடிவு வெளியாகும் பட்சத்தில் "நாம் தனியாக இல்லை" என்று கூக்குரல் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள் போற்றப்படுவார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

Best Mobiles in India

English summary
a-ufo-the-size-of-planet-earth-seen-hovering-near-saturn: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X