எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்? என்னவாக இருக்கும்?

நட்சத்திரம் என்பதற்கு ஒரு பெரிய ஒளிரும் கோளம் என்றும் ஒரு பொருள் உண்டு. எடுத்துக்காட்டிற்கு சூரியன்.

|

முதலில் நட்சத்திரம் என்றால் என்ன என்கிற புரிதலை பெறுதல் அவசியம். நட்சத்திரம் என்பதற்கு மினுமினுக்கும் ஒரு விண்வெளி பொருள் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. நட்சத்திரம் என்பதற்கு ஒரு பெரிய ஒளிரும் கோளம் என்றும் ஒரு பொருள் உண்டு. எடுத்துக்காட்டிற்கு சூரியன்.

எங்கிருந்தோ வந்த விசித்திரமான நட்சத்திரம்? என்னவாக இருக்கும்?

ஆம்! நம்மில் எத்தனை பேருக்கு, சூரியன் தான் பூமிக்கு மிகவும் அருகில் உள்ள ஒரு நட்சத்திரம் என்பதும், சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதும் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள். நிறமாலை வர்க்கத்தின் அடிப்படையின் கீழ், சூரியன் ஒரு ஜி-வகை நட்சத்திரம் (ஜி2வி) ஆகும்.

கற்பனைக்கு எட்டாத எல்லைகள்!

கற்பனைக்கு எட்டாத எல்லைகள்!

இந்த இடத்தில் சூரியனின் அளவை மனதில் வைத்து கொண்டு, இரவு நேரங்களில் வானில் சிறு சிறு புள்ளிகளாய் தென்படும் நட்சத்திரங்களின் அளவை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியம் உண்டாகுகிறது. அதாவது பூமியில் இருந்து எப்பெரும் தொலைவில் இருப்பின் அவைகள் இவ்வளவு சிறிதாக தெரியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றும் ஒரு வகை! ஆனால் இதுவோ?

ஒவ்வொன்றும் ஒரு வகை! ஆனால் இதுவோ?

இப்படியாக நமது பால்வெளி முழுவதும் நட்சத்திரங்கள் நிரம்பி உள்ளன. அவைகளில் சில நட்சத்திரங்கள் மிகவும் விசித்திரமானவைகளாக இருக்கும், சிலது அழகானதாக இருக்கும், சிலது கொப்பளிக்கும் ஆபத்துகளை கொண்டிருக்கும், சிலது பிறந்து கொண்டிருக்கும், சிலது வெடித்து சிதறி அழிவதற்காக காத்துக் கொண்டிருக்கும். அவைகளை ஆராய்வதில் ஆராய்ச்சியாளர்களுக்கு தனி அலாதி. அப்படியான ஒரு ஆராய்ச்சியின் கீழ் சீன விஞ்ஞானிகளின் கண்ணில் சிக்கிய ஒரு நட்சத்திரம் தான் - ஜே 1124 + 4535!

ஏன் இது மட்டும் விசித்திரமாக உள்ளது?

ஏன் இது மட்டும் விசித்திரமாக உள்ளது?

இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்றால், இது நமது விண்மீனில் உருவான ஒரு நட்சத்திரம் அல்ல. நேச்சர் அஸ்ட்ரோனமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, மிகவும் அசாதரணமான இந்த நட்சத்திரம் ஆனது நமது நட்சத்திர மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்களை மிகவும் வித்தியாசமானது - அதன் ரசாயன அமைப்பின் படி, பின்னாளில் நமது பால்வெளி மண்டலத்தில் இணைந்த ஒரு குள்ள விண்மீனைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.

எங்கே உள்ளது?

எங்கே உள்ளது?

ஏழு பிரகாசமான நட்சத்திரங்களைக் கொண்ட கிரேட் பியர் எனப்படும் நட்சத்திர மண்டலத்தினுள் இந்த நட்சத்திரம் காணப்படுகிறது. தி லார்ஜ் ஸ்கை ஏரியா மல்டி-ஆப்ஜெக்ட் ஃபைபர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் டெலஸ்கோப்பின் (The Large Sky Area Multi-Object Fiber Spectroscopic Telescope - LAMOST) வழியாக இந்த "வெளிநாட்டு" நட்சத்திரத்தில் சிறிய அளவிலான மெக்னீசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றவைகளுடன் வேறுபட என்ன காரணம்?

மற்றவைகளுடன் வேறுபட என்ன காரணம்?

மேலும் சில ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் படி, இந்த நட்சத்திரத்தில் யூரோப்பியமின் உள்ளடக்கமும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக குள்ள விண்மீன்களில், ஒரு நட்சத்திரம் உருவாக மிக நீண்ட காலம் ஆகும். எனவே அவற்றின் மெக்னீசியம் இரும்பு விகிதம் ஆனது மற்ற நட்சத்திரங்களுடனான ஒப்பீட்டில் வேறுபடும்.

எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை!

எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை!

பொதுவாக ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக உருவாக்கம் பெற்ற நட்சத்திரங்களின் ரசாயன கலவை ஆனது ஒருபோல் இருக்கும். அதாவது அவைகள் பொதுவான கூறுகளைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த "புதிய" நட்சத்திரத்தில், அதன் பால்வெளி சுற்றுப்புறத்தில் உள்ள அண்டை நட்சத்திரங்களுடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாகவே, ஆராய்ச்சியாளர்கள் ஜே1124 + 4535 ஒரு வேறுபட்ட இடத்தில் உருவாகியிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

இது சாத்தியமா? கோட்பாடுகள் என்ன சொல்கிறது?

இது சாத்தியமா? கோட்பாடுகள் என்ன சொல்கிறது?

பால்வெளி மண்டலம் போன்ற விண்மீன் திரள்கள் விரிவாக்கம் அடையும் போது சுற்றியுள்ள மற்ற சிறிய விண்மீன் திரள்களை அவை உறிஞ்சி கொள்ளலாம் என்கிறது கோட்பாடு. தற்போது வரைக்கும், அந்த ஒரு கோட்பாடு மட்டுமே இந்த விசித்திரமான நட்சத்திற்கான சாத்தியமான விளக்கம் ஆகும்.

Best Mobiles in India

English summary
a-strange-star-was-found-in-the-milky-way-and-its-not-from-our-galaxy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X