60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த "ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்" வீடியோ.!

|

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 60 செயற்கைக்கோள்களுடன் கூடிய ஸ்டார்லிங்க் ஃபால்கான் 9 ராராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.

முதல் முறையாக 60 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது.

உலகளாவிய இணையதள அணுகல் சேவைகளுக்காக இந்த 60 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்"

விண்ணில் பாய்ந்த ஸ்டார்லிங்க் ராக்கெட், 60 செயற்கைக்கோளுடன் நீண்ட ரயில் போல் விண்ணில் பாய்ந்து பயணித்துள்ளது. இந்த பதிவை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் "ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்"(starlink satellite train) என்று இந்த வீடியோ பதிவு வைரல் ஆகி வருகிறது.

440 கிமீ உயரத் தொலைவில் நிறுவப்பட்ட 60 செயற்கைக்கோள்

440 கிமீ உயரத் தொலைவில் நிறுவப்பட்ட 60 செயற்கைக்கோள்

இந்த 60 செயற்கைக்கோள்களைப் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 440 கிமீ உயரத் தொலைவில் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை வீடியோ எடுத்த நபர் WATEC 902H குறைந்த-ஒளி-நிலை கண்காணிப்பு கேமராவில் Canon FD 1.8/50 mm லென்ஸ் பயன்படுத்தி, இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

550 கிமீ உயரத் தொலைவை எட்டும் செயற்கைக்கோள்கள்

550 கிமீ உயரத் தொலைவை எட்டும் செயற்கைக்கோள்கள்

விண்ணில் 440 கிமீ உயரத் தொலைவில் நிறுவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் இன்னும் சில நாட்களில் அல்லது இந்த வாரத்தின் இறுதிக்குள் 550 கிமீ உயரத் தொலைவிற்குச் சென்று அதன் சுற்றுப்பாதையில் பொருந்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயான் திரஸ்டர்கள்

செயற்கைக்கோளில் உள்ள ஐயான் திரஸ்டர்களை பயன்படுத்தி, 60 செயற்கைக்கோள்களும் விண்ணில் 550 கிமீ உயரத்தை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல் முறையாக சாதனை படைத்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
A SPECTACULAR view of the SpaceX Starlink satellite train : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X