23 மில்லியன் ஆண்டுகள் கடந்து வந்து பூமியில் விழுந்த சிறுகோள்.. சிறிய சைஸ் பாகம் கொடுத்த புது தகவல்..

|

கடந்த ஜூன் 2, 2018 ஆம் ஆண்டு அதிகாலையில், அரிசோனா பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் வானத்தின் குறுக்கே ஒளிரும் ஒரு புதிய சிறுகோளை கண்டனர். இது பூமியை நெருங்கும்போது பெரியதாக இருந்துள்ளது, பூமியின் வளிமண்டலத்தின் உள் நுழைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, 6 ​​அடி அகலமுள்ள விண்வெளி பாறைகளாக அந்த சிறுகோள் சிதறியது. பூமியின் தரையில் சிதறிய இந்த சிறுகோளின் பாகங்களைச் சேகரிக்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டது.

பூமியின் தரையில் விழுந்து சிதறிய 2018 LA

பூமியின் தரையில் விழுந்து சிதறிய 2018 LA

பூமியின் தரையில் விழுந்து சிதறிய இந்த சிறுகோளுக்கு விஞ்ஞானிகள் 2018 LA எனப் பெயரிட்டனர். இது ஒரு மணி நேரத்திற்கு 38,000 மைல் தூரத்தில் வளிமண்டலத்தில் பெரிய சத்தத்துடன் தீப்பிடித்து தரையில் விழுந்துள்ளது. இது போட்ஸ்வானா முழுவதும் மழை பெய்தது போல் சிறிய-சிறிய துண்டுகளாக உடைந்து நொறுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்கள் குழு அந்த 'ஃபயர்பால்' பாதையின் முடிவில் அரிய துண்டுகளைத் தேடிச் சேகரிக்கும் பணியைத் துவக்கினர். ஏனெனில் அவர்கள் சிறுகோளின் தோற்றம் குறித்த தகவலை அது சிதறும் முன்னரே சேகரித்துவிட்டனர்.

23 சிறுகோள் பாகங்கள் கண்டெடுப்பு

23 சிறுகோள் பாகங்கள் கண்டெடுப்பு

"பூமியில் நிலத்தைத் தாக்கும் முன் விண்வெளியில் ஒரு சிறுகோள் இருப்பதைக் கண்டது இது இரண்டாவது முறையாகும்" என்று செடி இன்ஸ்டிடியூட்டின் வானியலாளர் பீட்டர் ஜெனிஸ்கென்ஸ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார். போட்ஸ்வானாவின் மத்திய கலாஹரி கேம் ரிசர்வ் பகுதியில் ஜெனிஸ்கென்ஸின் குழு சுமார் 23 சிறுகோள் பாகங்களைக் கண்டறிந்தது. சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய ஆய்வு குழுவின் கணிப்புப் படி, இந்த சிறுகோள் எங்கிருந்து வந்தது, எத்தனை ஒளியாண்டுகள் கடந்து பூமியை வந்தடைந்துள்ளது என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

23 மில்லியன் ஆண்டுகள் பயணித்து பூமியில் விழுந்த சிறுகோள் பாகங்கள்

23 மில்லியன் ஆண்டுகள் பயணித்து பூமியில் விழுந்த சிறுகோள் பாகங்கள்

ஆராய்ச்சி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த துண்டுகள் அனைத்தும் உண்மையில் நமது சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான மற்றும் இரண்டாவது பெரிய சிறுகோளான வெஸ்டா என்ற பெரிய சிறுகோளின் மிகச் சிறிய துண்டு தான் இந்த 23 சிறுகோள் பாகங்கள் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளனர். சிறுகோள் துண்டுகளுக்குள் உள்ள கூறுகளை டேட்டிங் செய்வதன் மூலம், வெஸ்டாவை உடைத்த பின்னர் விண்வெளி பாறை கிட்டத்தட்ட 23 மில்லியன் ஆண்டுகளாகப் பயணித்ததாக ஜெனிஸ்கென்ஸின் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விண்கல் போட்ஸ்வானாவின் தேசிய புதையல்

இந்த விண்கல் போட்ஸ்வானாவின் தேசிய புதையல்

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த முதல் பாகம் ஒரு அங்குல நீளத்திற்கும் 18 கிராம் எடையும் கொண்டது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் 'மோட்டோபி பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது," என்று போட்ஸ்வானா புவி அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான மொஹுட்சிவா கபாடிர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். "இந்த விண்கல் போட்ஸ்வானாவின் தேசிய புதையல்." என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2018 இல் நடந்த இரண்டாவது பயணத்தின் போது, ​​மற்ற 22 விண்கல் துண்டுகளைக் குழு கண்டுபிடித்தது.

ஹோவர்டைட்-யூக்ரைட்-டையோஜனைட் (HED) விண்கற்கள்

ஹோவர்டைட்-யூக்ரைட்-டையோஜனைட் (HED) விண்கற்கள்

ஆராய்ச்சியாளர்கள் அந்த துண்டுகளின் உலோக உள்ளடக்கம் மற்றும் அலங்காரம் ஆகியவற்றை ஆராய்ந்தனர், மேலும் அவை ஹோவர்டைட்-யூக்ரைட்-டையோஜனைட் (HED) விண்கற்கள் எனப்படும் விண்கற்களின் வகையைச் சேர்ந்தவை என்று தீர்மானித்துள்ளனர். இந்த முழுகச் சிறுகோள் செவ்வாய்க் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான சிறுகோள் பெல்ட்டில் உள்ள வெஸ்டாவிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது, இப்போது பூமியில்

23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது, இப்போது பூமியில்

ஆய்வு ஆசிரியர்களின் கூற்றுப்படி, பூமியில் காணப்படும் அனைத்து HED விண்கற்களிலும் மூன்றில் ஒரு பங்கு கிட்டத்தட்ட 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது என்று கூறப்பட்டுள்ளது.

அதுவும் இது மற்றொரு விண்வெளி பொருளால் தாக்கப்பட்டு உடைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறுகோளின் விஷயத்திலும் அது உண்மைதான் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். காரணம். துண்டுகளின் அமைப்பு வெஸ்டாவின் வன்முறை கடந்த காலத்தைப் பற்றிய குறிப்புகளையும் வழங்குகிறது.

4.6 பில்லியன் ஆண்டு மற்றும் 4.2 பில்லியன் ஆண்டு முன்பு சீர்திருத்தம்

4.6 பில்லியன் ஆண்டு மற்றும் 4.2 பில்லியன் ஆண்டு முன்பு சீர்திருத்தம்

மோட்டோபி பானுக்குள் உள்ள தாதுக்களைப் பரிசோதித்ததில் பாறை உருகி இரண்டு முறை சீர்திருத்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறையும் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறையும் நடந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
A small asteroid that hit Botswana took 23 million years to get earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X