செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாசாவின் அடுத்த ரோவருக்குப் பெயர் சூட்டும் பள்ளி மாணவர்கள்!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட ரோவர்களுக்குப் பள்ளி மாணவர்கள் மூலம் பெயர் சூட்டுவது வழக்கம்.

|

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட ரோவர்களுக்குப் பள்ளி மாணவர்கள் மூலம் பெயர் சூட்டுவது வழக்கம். நாசாவால் செவ்வாய் கிரகத்துக்கு வரும் ஆண்டுகளில் அனுப்பப்பட இருக்கின்ற ரோவருக்கும் பள்ளி மாணவர்கள்தான் பெயர் சூட்டப் போகிறார்கள்.

நாசாவின் அடுத்த  ரோவருக்குப் பெயர் சூட்டும் பள்ளி மாணவர்கள்!

தற்போது மார்ஸ் 2020 ரோவர் எனத் தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தச் செவ்வாய் கிரக ஆய்வு வாகனத்திற்குப் பெயர் வைப்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்படவிருக்கிறது. இந்தப் போட்டி 2019 ஆம் கல்வியாண்டில் நடத்தப்படவிருக்கிறது. கின்டர் கார்டன் பள்ளிக் குழந்தைகள் முதல் 12 ஆம் நிலை படிக்கும் மாணவர்கள் வரை இப்போட்டியில் பங்கு பெறலாம்.

தாங்கள் வைக்கும் பெயருக்கான காரணத்தை விளக்கி மாணவர்கள் ஒரு சிறு கட்டுரையும் எழுத வேண்டும். இந்தப் போட்டியை நாசா நேரடியாக நடத்தப்போவது இல்லை. அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வோடு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கு இல்லாத கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாக இபபோட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.

1997 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் அனுப்பத் தொடங்கியதிலிருந்து இது போன்ற போட்டிகள் மூலமாகவே பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றன என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

நாசாவின் அடுத்த  ரோவருக்குப் பெயர் சூட்டும் பள்ளி மாணவர்கள்!

முதல் செவ்வாய் கிரக ஆய்வு வாகனத்திற்கு சோஜர்னர் (Sojourner) எனப் பெயர் வைத்த வல்லரி அம்ராய்ஸ் (Vallery Ambroise) என்னும் மாணவருக்கு வயது 12 ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் அடிமை முறை ஒழிப்பிற்காகப் பாடுபட்ட சமூகச் சீர்திருத்தவாதியின் பெயர்தான் சோஜர்னர் ட்ரூத் (Sojourner Truth) என்பதாகும். அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் சோபி கோல்லிஸ் சூட்டிய பெயர்தான் இரட்டை ரோவர்களுக்கு பெயராக அமைந்தது. Spirit மற்றும் Opportunity என்பது அப்பெர்கள் ஆகும். இவை 2004 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டன. 2012 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ரோவருக்கு "Curiosity” எனப் பெயர் வைத்தது ஆறாம் வகுப்பு மாணவர் கன்சாஸ் (Kansas) என்பவராவார்.

கியூரியாசி்ட்டி ரோவரைப் போலவே மார்ஸ் 2020 ரோவரும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோ வாகனம் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் ஏதேனும் உயிர் இனங்கள் வாழ்ந்தனவா என்பது குறித்தும் ஆராய இருக்கிறது. இந்த வாகனம் பல புதிய பொருட்களைச் சுமந்து செல்லவிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கருவி மற்றும் சிறிய வடிவிலான ஹெலிகாப்டர் ஆகியவற்றை இந்த ரோபோ சுமந்து செல்கிறது.

இந்த ரோபோ வாகனம் 2020ஆம் ஆண்டு ஜீலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ஐரோப்பிய யூனியனும் ஒரு ரோவரை அனுப்ப உள்ளது. இந்த ரோபோவுக்கும் பெயர் வைக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் அடுத்த  ரோவருக்குப் பெயர் சூட்டும் பள்ளி மாணவர்கள்!

ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி (ESA) ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரக இரண்டாம் கட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளது. முதல் கட்ட ஆய்வு 2016 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. அப்பொழுது, வாயுக்களைக் கண்டறிவதற்காக செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோபோ மீத்தேன் மற்றும் உயிரினங்களுக்கு நன்மை விளைவிக்கும் வாயுக்கள் பற்றிய ஆய்வை செவ்வாய் கிரகச் சுற்றுப் பாதையில் மேற்கொண்டு வருகிறது.
Best Mobiles in India

English summary
A Schoolkid Will Name NASA's Next Mars Rover: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X