நாசாவின் மூன் லேண்டிங் பொய் என்பதை நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.?

|

சந்திர கிரகம், அதாவது நிலவு பற்றியதொரு சுவாரசியமான ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் வண்ணம் இரண்டு விடயங்கள் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு விடயங்களின் வழியாக அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையான நாசா நிலாவுக்கு போகவே இல்லை என்பது சார்ந்த முகத்திரை மேலும் நன்றாக கிழிகிறது.

நாசாவின் மூன் லேண்டிங் பொய் : நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.?

சமீபத்திய ஆய்வு முடிவொன்று - சந்திர கிரகம் அதன் காந்த மண்டல சக்தியை குறைந்தது 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இழந்து விட்டதென்பது உறுதியாகியுள்ளது. இது நாம் முன்னர் நினைத்ததை விட அதிக ஆண்டுகளுக்கு முன்பே நிகழந்துள்ளது.

ஆக - நிலவு போன்றே நமது அண்டத்தில் இருக்கும் இதர அன்னிய நிலவுகள் மற்றும் கிரகங்கள் ஆகியவைகளிலும் காந்தப்புலம் இல்லாமல் இருக்க - அங்கு உயிர்கள், அதாவது வேற்றுகிரக வாசிகள் நீண்ட நாட்களாக உயிர்வாழலாம் மற்றும் அவைகளை தங்குமிடங்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

அப்பல்லோ விண்வெளி வீரர்களால்

அப்பல்லோ விண்வெளி வீரர்களால்

இன்று நிலவு ஒரு உலகளாவிய காந்தப்புலத்தை கொண்டிருக்கவில்லை. இருப்பினும், அப்பல்லோ விண்வெளி வீரர்களால் பெறப்பட்ட சந்திரன் பாறைகளின் முன் பகுப்பாய்வுகளானது 3.56 பில்லியன் மற்றும் 4.25 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என்றும் சந்திரனின் காந்த மண்டலம் 20 முதல் 110 மைக்ரோடெஸ்லா வரையிலான சக்தியைப் பெற்றது என்று தெரிவிக்கிறது. ஒப்பிடுகையில், பூமியின் காந்தப்புலம் 50 மைக்ரோடெஸ்லா வலுவானது.

நாசா நிலவிற்கு போகவே இல்லை

நாசா நிலவிற்கு போகவே இல்லை

சற்று கூர்ந்து கவனித்தால், நாசாவின் அப்போலோ வீரர்களால் கொண்டுவரப்பட்ட நிலவின் மாதிரிகளின் மூலமாகேவ நிலவின் காந்தப்புலம், உருவாக்கம், பிறப்பு போன்ற தெளிவுகளை நாம் பெற்றுள்ளோம். இப்போது, நாசாவின் ஆய்வு முடிவுகள் பிழையாகினால் நாசா நிலவிற்கு போகவே இல்லை, அங்கு அதன் விண்வெளி வீர்ரகளை தரையிறக்கவும் இல்லை, அங்கிருந்து எந்த நிலவு மாதிரிகளையும் கொண்டுவரவுமில்லை, அதை ஆய்வு செய்யவுமில்லை என்ற சந்தேகம் வலுப்படுகிறது.

1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி

1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி

1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலாவிற்கு செல்வார்கள் என்று ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்தது. 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் முதல் மனித காலடியை எடுத்து வைத்து அந்த விண்வெளி யுத்ததில் வெற்றி அடைந்தது அமெரிக்கா.

"நம்பத்தகுந்த" 10 ஆதாரங்கள்

அந்த வெற்றிக்கு பின், மெல்ல மெல்ல பலவகையான சந்தேகங்கள் கிளம்பின. அமெரிக்காவின் அப்பலோ விண்கலங்கள், அதன் வீர்ர்கள், அவர்கள் நிலாவிற்கு சென்றது எல்லாம் பொய். அவைகள் எல்லாம் படமாக்கப்பட்டவைகள் என்று புரளிகள் கிளம்பின. சமீபத்திய ஆய்வு முடிவை 11-வது ஆதாரமாக எடுத்துக்கொண்டு இது பொய், படம் பிடிக்கப்பட்டவைகள், புரளிகள் என்று கூறும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) குறிப்பிடும் "நம்பத்தகுந்த" 10 ஆதாரங்களை காண்போம்

10. காற்றில் ஆடும் அமெரிக்க கொடி

10. காற்றில் ஆடும் அமெரிக்க கொடி

அமெரிக்கா, நிலவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது. அதில், நிலவில் நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது.

09. பள்ளங்கள் இல்லாமை

09. பள்ளங்கள் இல்லாமை

அப்பலோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலும் இல்லை. இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளிக்கிறது.

08. பல கோணங்களில் ஒளி ஆதாரம்

08. பல கோணங்களில் ஒளி ஆதாரம்

ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைப்பதின் மூலம் இது படடமக்கப்பட்டது என்கிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.

07. வான் அலென் ரேடியேஷன் பெல்ட்

07. வான் அலென் ரேடியேஷன் பெல்ட்

முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி எப்படி நிலாவிற்கு சென்றனர் என்பது இன்றும் கேள்விகுறி தான்.

06. விளக்கமில்லாத பொருள்

06. விளக்கமில்லாத பொருள்

வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், விண்வெளி வீரரின் ஹெல்மாட்டில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபலிக்கிறது.

05. மறைக்கப்பட்ட கேபிள்கள்

05. மறைக்கப்பட்ட கேபிள்கள்

நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறுகிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.

04. நட்சத்திரமின்மை

04. நட்சத்திரமின்மை

வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.

03. 'சி' பாறை

03. 'சி' பாறை

வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை.

02. பொய்யான கிராஸ்-ஹேர்ஸ்

02. பொய்யான கிராஸ்-ஹேர்ஸ்

வெளியான பெரும்பாலான நிலவில் இறங்கிய புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப்பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு முக்கியமான சான்றாகும்.

01. டூப்ளிக்கேட் பின்னணிகள்

01. டூப்ளிக்கேட் பின்னணிகள்

ஒரே மாதிரியான பின்புலம் (Backdrop) கொண்ட பல வீடியோ காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா நிலாவிற்கு சென்றதை, 20% அமெரிக்கர்களே நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு. அப்படியிருக்க நாம் சந்தேகம் கொள்வதிலும், உலகம் முழுவதிலும் பலவகையான சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்புவதிலும் எந்த தவறுமில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது

Most Read Articles
Best Mobiles in India

English summary
A new study about moon s magnetic field heats up Moon landing conspiracy theories. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X